From Wikipedia, the free encyclopedia
குமார் சங்கக்கார (Kumar Sangakkara; சிங்களம்: කුමාර සංගක්කාර; பிறப்பு: 27 அக்டோபர் 1977) முன்னாள் இலங்கைத் துடுப்பாட்ட அணியின் மட்டையாளரும் ,தலைவர் (துடுப்பாட்டம்) மற்றும் குச்சக் காப்பாளர் ஆவார். அனைத்துக் காலத்திற்குமான சிறந்த மட்டையாளர்களில் ஒருவராக அறியப்படுகிறார்.[1][2] மேலும் இவரின் காலத்தில் அதிகம் ஆதிக்கம் செலுத்திய மட்டையாளர்களில் ஒருவராகவும் அறியப்படுகிறார். இவருடைய நண்பர் மற்றும் சகவீரரான மகேல ஜயவர்தனவுடன் இணைந்து அனைத்து வடிவத் துடுப்பாட்டங்களிலும் பல சாதனைகளைப் படைத்துள்ளார்.[1][3][4][5][6][7] இவர் சுமார் 15 ஆண்டுகாலம் துடுப்பாட்டம் விளையாடி வந்தார்.[8] இவர் விளையாடிய அனைத்து சர்வதேச போட்டிகளிலும் சேர்த்து மொத்தமாக 28,016 ஓட்டங்கள் சேர்த்துள்ளார். இவர் இங்கிலாந்தின் வோக்விசயர் மாகாண அணிக்கும் இலங்கையின் முதல்தர துடுப்பாட்டக் கழகமான நொன்டிஸ்கிரிப்ட் துடுப்பாட்ட கழகத்துக்கும் விளையாடி வருகின்றார்.
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | குமார் சொக்சநாத சங்கக்கார | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு | 27 அக்டோபர் 1977 மாத்தளை, இலங்கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பட்டப்பெயர் | சங்கா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உயரம் | 5 அடி 10 அங் (1.78 m) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | இடக்கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலக்கை வலத்திருப்பு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | இலக்குக் கவனிப்பாளர், மட்டையாட்டம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி |
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தேர்வு அறிமுகம் (தொப்பி 84) | 20 சூலை 2000 எ. தென்னாப்பிரிக்கா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசித் தேர்வு | 20 ஆகத்து 2015 எ. இந்தியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப அறிமுகம் (தொப்பி 105) | 5 சூலை 2000 எ. பாக்கித்தான் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி ஒநாப | 18 மார்ச் 2015 எ. தென்னாப்பிரிக்கா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப சட்டை எண் | 11 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இ20ப அறிமுகம் (தொப்பி 10) | 15 சூன் 2006 எ. இங்கிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி இ20ப | 6 ஏப்ரல் 2014 எ. இந்தியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இ20ப சட்டை எண் | 11 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
1997–2014 | நொண்டசுகிரிப்ட்சு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2007–2014 | கந்துரட்டை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2007 | வாரிக்சயர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2008–2010 | கிங்ஸ் லெவன் பஞ்சாப் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2011–2012 | டெக்கான் சார்ஜர்ஸ் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2013 | சன்ரைசர்ஸ் ஐதராபாத் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2013–2017 | யமைக்கா தலவாசு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2014 | தர்காம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2014 | உடரட்ட ரூலர்சு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2015–2017 | சரே | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2015–2017 | டாக்கா டைனமைட்சு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2016 | குவெட்டா கிளாடியேட்டர்சு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2017 | கராச்சி கிங்க்சு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2018 | முல்தான் சுல்தான்சு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: ESPNcricinfo, 28 செப்டம்பர் 2017 |
இடது கை துடுப்பாட்ட வீரரான இவர் குச்சக் காப்பாளராகவும் இருந்துள்ளார். குச்சக் காப்பாளராக பல சாதனைகளைப் புரிந்துள்ளார். ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் சேர்த்த வீரர்களின் பட்டியலில் சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்திலும் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் சேர்த்தவர்கள் பட்டியலில் ஏழாவது இடத்திலும் உள்ளார்.[9][10]
சங்கக்கரா, துடுப்பாட்ட வரலாற்றில் அதிக திறமைகள் , நிதானம் உள்ள சில மட்டையாளர்களில் ஒருவராக அறியப்படுகிறார்.[11][12] 2005 முதல் 2015 ஆம் ஆண்டு வரையில் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளுக்கான பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் மட்டையாளர் தரவரிசையில் அதிக முறை முதலிடத்தில் இருந்தார்.
2014 ஐசிசி உலக இருபது20 தொடரில் இலங்கைத் துடுப்பாட்ட அணி கோப்பையை வெல்வதற்கு மிக முக்கியமான நபர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். மேலும் 2007 துடுப்பாட்ட உலகக்கிண்ணம், 2011 துடுப்பாட்ட உலகக்கோப்பை மற்றும் 2012 ஐசிசி உலக இருபது20 ஆகிய தொடர்களில் இறுதிப் போட்டிக்குச் சென்ற இலங்கை அணியில் இவர் இடம்பெற்றிருந்தார். 2014 ஐசிசி உலக இருபது20 போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் ஆட்டநாயகன் விருதினை வென்று அணி முதன்முறையாக கோப்பை வெல்வதற்கு உதவினார்.
தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அதி விரைவாக 8,000, 9,000, 11,000 மற்றும்12,000 ஓட்டங்களை எடுத்த வீரர் எனும் சாதனையைப் படைத்தார். மேலும் 10,000 ஓட்டஙகளை விரைவாக எடுத்தவர் எனும் சாதனையைப் படைத்துள்ளார்.[13] பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் சிறந்த துடுப்பாட்ட வீரருக்கான விருதை 2012 ஆம் ஆண்டிலும் , சிறந்த தேர்வுத் துடுப்பாட்ட வீரருக்கான விருதை அதே ஆண்டிலும் பெற்றார். மேலும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிக்கான சிறந்த வீரர் விருதினை 2011 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் பெற்றுள்ளார்.[14] எல் ஜி மக்கள் விருதினை 2011 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் பெற்றுள்ளார். தேர்வுத் துடுப்பாட்ட வீரர்களுக்கான உலக லெவன் அணிகளில் ஆறு முறையும் , ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட உலக லெவன் அணிகளில் மூன்று முறையும் இவர் இடம்பெற்றுள்ளார். 2015 ஆம் ஆண்டின் முன்னணித் துடுப்பாட்டக் காரராக விசுடன் துடுப்பாட்டாளர்களின் நாட்குறிப்பு இவரை அறிவித்தது.
தற்போது இங்கிலாந்தின் கவுண்டி அணியான சர்ரே அணிக்காக விளையாடி வருகின்றார்.
பிக்பாஸ் T20 போட்டியில் ஹார்பர்ட் ஹரிக்கான்ஸ் அணிக்காக விளையாடி வருகின்றார்
■ப்ராட்மானுக்கு அடுத்ததாக அதிக இரட்டை சதங்கள் அடித்த வீரர்
■உலககிண்ண போட்டிகளில் தொடர்ச்சியாக 4 சதங்கள் அடித்த வீரர்
■சச்சின் டெண்டுல்கர் இற்கு அடுத்ததாக அதிக மொத்த ஓட்டங்கள் பெற்றவர்
பின்வரும் அட்டவணை, குமார் சங்கக்காரவின் தேர்வுத் துடுப்பாட்ட சதங்களின் சுருக்க வடிமாகும்
தே.து. குமார் சங்கக்காரவின் சதங்கள் | ||||||
---|---|---|---|---|---|---|
ஓட்டங்கள் | ஆட்டங்கள் | எதிர் | நகரம்/நாடு | இடம் | ஆண்டு | |
[1] | 105* | 10 | இந்தியா | காலி, இலங்கை | காலி அரங்கம் | 2001 |
[2] | 140 | 14 | மேற்கிந்தியத்தீவுகள் | காலி, இலங்கை | காலி அரங்கம் | 2001 |
[3] | 128 | 17 | சிம்பாப்வே | கொழும்பு, இலங்கை | சிங்கள் விளையாட்டுக் கழக அரங்கம் | 2002 |
[4] | 230 | 20 | பாகிஸ்தான் | லாகூர்,பாகிஸ்தான் | கடாபி அரங்கம் | 2002 |
[5] | 270 | 38 | சிம்பாப்வே | புலவாயோ, சிம்பாப்வே | குயிண்ஸ் விளையட்டுக் கழகம் | 2004 |
[6] | 232 | 42 | தென்னாபிரிக்கா | கொழும்பு, இலங்கை | சிங்கள் விளையாட்டுக் கழக அரங்கம் | 2004 |
[7] | 138 | 44 | பாகிஸ்தான் | கராச்சி, பாகிஸ்தான் | தேசிய அரங்கம் | 2004 |
[8] | 157 | 48 | மேற்கிந்தியத்தீவுகள் | கண்டி, இலங்கை | அஸ்கிரிய அரங்கம் | 2005 |
[9] | 185 | 56 | பாகிஸ்தான் | கொழும்பு, இலங்கை | சிங்கள் விளையாட்டுக் கழக அரங்கம் | 2006 |
[10] | 287 | 61 | தென்னாபிரிக்கா | கொழும்பு, இலங்கை | சிங்கள் விளையாட்டுக் கழக அரங்கம் | 2006 |
[11] | 100* | 63 | நியூசிலாந்து | கிறைஸ்ட்சார்ச், நியூசிலாந்து | ஜேட் அரங்கம் | 2006 |
[12] | 156* | 64 | நியூசிலாந்து | வெலிங்டன், நியூசிலாந்து | பேசின் ரிசேவ் | 2006 |
ஒ.ப.து. குமார் சங்கக்காரவின் சதங்கள் | ||||||
---|---|---|---|---|---|---|
ஓட்டங்கள் | ஆட்டங்கள் | எதிர் | நகரம்/நாடு | இடம் | ஆண்டு | |
[1] | 100* | 86 | பாகிஸ்தான் | சார்ஜா, UAE | சார்ஜா அரங்கம் | 2003 |
[2] | 103* | 87 | கென்யா | சார்ஜா, UAE | சார்ஜா அரங்கம் | 2003 |
[3] | 101 | 100 | அவுஸ்திரேலியா | கொழும்பு, இலங்கை | ஆர். பிரேமதாசா அரங்கம் | 2004 |
[4] | 138* | 141 | இந்தியா | ஜைபூர், இந்தியா | சுவாய் மன்சிங் அரங்கம் | 2005 |
[5] | 109 | 163 | வங்காளதேசம் | சிட்டோங் வங்காளதேசம் | சிட்டோங் பிராந்திய அரங்கம் | 2006 |
[6] | 110 | 183 | இந்தியா | ராஜ்கோட், இந்தியா | மதாவ்ராவோ சிந்தியா துடுப்பாட்ட அரங்கம் | 2007 |
இதுவரை விளையாடியுள்ள உலகக் கிண்ணப் போட்டிகள்: 30
இதுவரை விளையாடியுள்ள ஒருநாள் சர்வதேச போட்டிகள்: 333
*இதுவரை விளையாடியுள்ள ஏ- தர போட்டிகள்: 429,
ஏழு ஆட்டங்களில் 541 ஓட்டங்கள் எடுத்தார். தனது அணி தோல்வியற்ற காலிறுதி ஆட்டத்தின் முடிவில், இந்த உலகக்கிண்ணத்தில் அதிகபட்ச ஓட்டங்கள் எடுத்த மட்டையாளராக இருந்தார்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.