From Wikipedia, the free encyclopedia
குடியேற்றவியல் (Colonialism) என்பது, ஒரு நாட்டின் எல்லைகளுக்கு வெளியே உள்ள ஆட்சிப்பகுதி ஒன்றின்மீது, குடியேற்றம் செய்வதன்மூலமோ, நிர்வாக முறையில் அடிப்படுத்துவது மூலமோ, அதன் இறைமையை விரிவாக்கம் செய்வதைக் குறிக்கும். இச் செயற்பாடின்போது உள்ளூர் மக்கள் நேரடியாக ஆளப்படுகிறார்கள் அல்லது இடம் பெயரச் செய்யப்படுகின்றார்கள். குடியேற்றம் செய்பவர்கள், பொதுவாகக் குடியேறிய பகுதிகளின் வளங்கள், உழைப்பு, சந்தைகள் என்பவற்றின் மீது ஆதிக்கம் செலுத்துகிறார்கள். சில சமயங்களில், சமூக-பண்பாட்டு, சமய மற்றும் மொழிக் கட்டமைப்புகளை உள்ளூர் மக்கள் மீது திணிப்பதும் உண்டு. குடியேற்றவியம் என்பது மேற்படி செயற்பாடுகளை நியாயப் படுத்துவதற்கும், வளர்த்தெடுப்பதற்குமான ஒரு தொகுதி நம்பிக்கைகளைக் குறிக்கவும் பயன்படுத்தப்படுவது உண்டு. குடியேற்றவியம் பொதுவாக, குடியேறுபவர்களுடைய பழக்கவழக்கங்களும், நம்பிக்கைகளும், உள்ளூர் மக்களுடையவற்றைக் காட்டிலும் உயர்ந்தவை என்ற நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டிருப்பது வழக்கம்.
குடியேற்றவியத்தின் தோற்றப்பாடு, பல்வேறு கால கட்டங்களிலும் உலகம் தழுவிய நிலையில் காணப்பட்டாலும், இது பொதுவாக ஐரோப்பியப் பேரரசுகள் தொடர்பிலேயே சிறப்பாகக் குறிப்பிடப்படுகின்றது.
வரலாற்றாசிரியர்கள் பெரும்பாலும் காலனித்துவத்தின் இரண்டு பரந்த வடிவங்களுக்கு இடையில் வேறுபடுகிறார்கள்:
காலனித்துவவாதம் என்று அழைக்கப்படும் செயல்பாடு, காலனிய ஆபிரிக்க பேரரசுகளுடன் தொடங்கி நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது, இது எகிப்தியர்களுக்கு, ஃபீனீசியர்களுக்கும் கிரேக்கர்களுக்கும் ரோமர்களுக்கும் மற்ற நாடுகளைக் காலனித்துவப்படுத்த வழிவகுத்தது. "காலனி" என்ற வார்த்தை லத்தீன் வார்த்தையான கொலோனியாவில் இருந்து வருகிறது, அது "வேளாண்மைக்கு ஒரு இடம்" என்பதாகும். 11 மற்றும் 18 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில், வியட்னாமியர்கள் தங்கள் பிராந்திய எல்லைக்கு தெற்கே இராணுவக் குடியேற்றங்களை அமைத்தனர்.கண்டுபிடிப்புகளின் காலத்தில் (Age of discovery) நவீன காலனித்துவம் தொடங்கியது[3] .
17 ம் நூற்றாண்டு பிரெஞ்சு காலனித்துவ பேரரசு, டச்சு பேரரசு மற்றும் பின்னர் பிரித்தானியப் பேரரசு ஆகியவை உருவாகியது. பின்னர் டேனிஷ் காலனித்துவ பேரரசு மற்றும் சில ஸ்வீடிஷ் வெளிநாட்டு காலனிகள் நிறுவப்பட்டது.காலனித்துவ பேரரசுகளின் பரவலானது 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் அமெரிக்க புரட்சிப் போர் மற்றும் லத்தீன் அமெரிக்க சுதந்திரப் போர்கள் ஆகியவற்றால் குறைக்கப்பட்டது. எவ்வாறாயினும், இந்த காலப்பகுதியில் பல புதிய காலனிகள் நிறுவப்பட்டன, ஜேர்மனிய காலனித்துவ பேரரசு மற்றும் பெல்ஜிய காலனித்துவ பேரரசு உட்பட. 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், பல ஐரோப்பிய சக்திகள் ஆப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் ஈடுபட்டிருந்தன.
ரஷ்ய சாம்ராஜ்ஜியம், ஒட்டோமான் பேரரசு மற்றும் ஆஸ்திரிய சாம்ராஜ்ஜியம் ஆகியவை மேலேயுள்ள பேரரசுகளின் அதே காலப்பகுதியில் இருந்தன, ஆனால் கடல் கடந்து சாம்ராஜ்ஜியத்தை விரிவாக்கவில்லை.[4] மாறாக, இந்த பேரரசுகள் அண்டை பிரதேசங்களை கைப்பற்றுவதற்கான பாரம்பரிய வழிகளைப் பயன்படுத்தி சாம்ராஜ்ஜியத்தை விரிவடைய வைத்தது. இருந்தபோதிலும், அமெரிக்காவில் பெர்ரிங் ஜலசந்தியைத் தாண்டி சில ரஷ்ய குடியேற்றங்கள் இருந்தன.
ஸ்பானிய-அமெரிக்க போர் முடிந்த பிறகு அமெரிக்கா அதனை சுற்றியுள்ள வெளிநாட்டுப் பகுதிகளை பெற்றது. அந்நாடுகளை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டிற்குக் கொண்டுவந்தது. இதற்குகாக "அமெரிக்க சாம்ராஜ்ஜியம்" என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டது. முதல் உலகப் போருக்குப் பின், வெற்றிபெற்ற நேச நாடுகள் ஜேர்மனிய காலனித்துவ பேரரசு மற்றும் ஓட்டோமான் சாம்ராஜ்ஜியத்தின் பெரும்பகுதியைத் தங்களுக்குள் பங்கிட்டுக் கொண்டன.[5][6]
இரண்டாம் உலகப் போருக்கு காலனித்துவ அமைப்பு ஒரு முக்கிய காரணமாக இருந்தது.பிரித்தானிய, பிரஞ்சு, டச்சு மற்றும் அமெரிக்காவால் நடத்தப்பட்டுக் கொண்டிருந்த பேரரசுகளின் பகுதிகளைக் கைப்பற்றி ஒரு காலனித்துவ பேரரசை உருவாக்க ஜப்பானின் முயற்சிகளில் ஈடுபட்டது. இதன் விளைவாக பசிஃபிக் பெருங்கடலில் பெரும் யுத்தம் நடைபெற்றது.
ஐரோப்பா மற்றும் வட ஆபிரிக்காவில் போரினை உருவாக்கி அதை வைத்து பிரித்தானிய, ஃபிரெஞ்சு மற்றும் ரஷ்யப் பேரரசுகளின் பகுதிகளைக் கைப்பற்றி காலனித்துவ பேரரசுகளை உருவாக்கும் எண்ணத்தில் ஜெர்மனி மற்றும் இத்தாலி நாடுகள் முயற்சித்தன.
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், காலனித்துவ மாற்றம் அல்லது காலனித்துவத்தில் இருந்து விடுபட பல நாடுகள் விரைவாக முயற்சியெடுத்தன. இது பல காரணங்களால் ஏற்படுகிறது. இந்த மாற்றங்கள் பல காரணங்களால் ஏற்பட்டது.அவை:
சுதந்திரமாக இயங்கும் டஜன் கணக்கான சுதந்திர போராட்ட இயக்கங்கள் மற்றும் உலகளாவிய அரசியல் ஒற்றுமைப் புரட்சிகர திட்டங்கள், முன்னாள் காலனிகளை வீழ்த்துவதில் கருவியாக இருந்தன.இவற்றில் இந்தோனேசியா, வியட்நாம், அல்ஜீரியா, கென்யா ஆகிய நாடுகளில் சுதந்திர போராட்ட போர்கள் இடம்பெற்றன.இறுதியில், ஐரோப்பிய சக்திகள், அமெரிக்கா மற்றும் சோவியத் ஒன்றியம் ஆகியவற்றால் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனால் காலனித்துவ சக்திகள் தாங்களாகவே தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த நாடுகளுக்கு விடுதலையளித்தன.
* ஆப்கானித்தான் * அன்டிகுவா பர்புடா * ஆத்திரேலியா * பஹமாஸ் * பாகாரேயின் * பார்படோசு * பெலீசு * பொட்ஸ்வானா * புரூணை * கனடா * சைப்பிரசு * டொமினிக்கா * எகிப்து * பிஜி * கம்பியா * கானா * கிரெனடா * கயானா * இந்தியா * இசுரேல் * ஈராக் * ஜமைக்கா * யோர்தான் * கென்யா * கிரிபட்டி * குவைத் * லெசோத்தோ * மலாவி * மலேசியா * மாலைதீவுகள் * மால்ட்டா * மொரீஷியஸ் * மியான்மர் * நவூரு * நியூசிலாந்து * நைஜீரியா * பாக்கித்தான் * கட்டார் * செயிண்ட். லூசியா * செயிண்ட். கிட்ஸ் நெவிஸ் * செயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ் * சிஷெல்ஸ் * சியெரா லியொன் * சொலமன் தீவுகள் * தென்னாப்பிரிக்கா * இலங்கை * சூடான் * சுவாசிலாந்து * தன்சானியா * தொங்கா * டிரினிடாட் மற்றும் டொபாகோ * துவாலு * உகாண்டா * ஐக்கிய அரபு அமீரகம் * அமெரிக்கா * வனுவாட்டு * யேமன் * சாம்பியா * சிம்பாப்வே
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.