கீத்தூர்ன்
From Wikipedia, the free encyclopedia
கீத்தூர்ன் (டச்சு உச்சரிப்பு: [ˈɣitɦoːr(ə)n]) என்பது நெதர்லாந்தின் ஓவரேஸ்செல் மாகாணத்தில் உள்ள ஒரு கிராமமாகும். 2020-ஆம் ஆண்டு கணக்கின்படி இக்கிராமத்தில் 2,795 மக்கள் வசிக்கின்றனர். இது ஸ்டீம்வேக்கர்லன்ட் நகராட்சியில் ஸ்டீம்வேக் நகரிலிருந்து தென்மேற்கே 5 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. ஊரிலுள்ள எண்ணிலடங்கா கால்வாய்களின் வாயிலாக நீர்வழிப் போக்குவரத்தை மட்டுமே பிராதனப் போக்குவரத்தாகக் கொண்ட ஒரு கிராமமாக கீத்தூர்ன் திகழ்கிறது. "டச்சு வெனிஸ்" (டச்சு: Hollands Venetië) அல்லது "நெதர்லாந்தின் வெனிஸ்" என்று அழைக்கப்படும் இக்கிராமம், நெதர்லாந்திலிருந்து மட்டுமின்றி வெளிநாடுகளிலிருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தரும் ஒரு பிரபலமான டச்சு சுற்றுலா தலமாக விளங்குகிறது.
விரைவான உண்மைகள் கீத்தூர்ன், நாடு ...
கீத்தூர்ன் | |
---|---|
ஆள்கூறுகள்: 52°44′20″N 6°4′41″E | |
நாடு | நெதர்லாந்து |
மாகாணம் | ஓவரேஸ்செல் |
நகராட்சி | ஸ்டீம்வேக்கர்லன்ட் |
பரப்பளவு | |
• மொத்தம் | 38.47 km2 (14.85 sq mi) |
ஏற்றம் | −0.3 m (−1.0 ft) |
மக்கள்தொகை (2021)[1] | |
• மொத்தம் | 2,805 |
• அடர்த்தி | 73/km2 (190/sq mi) |
நேர வலயம் | ஒசநே+1 (CET) |
• கோடை (பசேநே) | ஒசநே+2 (CEST) |
Postal code | 8355[1] |
Dialing code | 0521 |
மூடு