From Wikipedia, the free encyclopedia
கிரைசோமா (Chrysomma) என்பது பாடும் பறவைப் பேரினமாகும். இது கிளி அலகுடன் மிகவும் நெருங்கிய தொடர்புடையது. எனவே இது பாரடாக்சோர்னிதிடே குடும்பத்தைச் சேர்ந்தது.
கிரைசோமா | |
---|---|
மஞ்சள் கண் சிலம்பன், கிரைசோமா சையென்சி | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | சில்விடே |
பேரினம்: | கிரைசோமா |
மாதிரி இனம் | |
கிரைசோமா சையென்சி பிராங்ளின், 1831 | |
சிற்றினம் | |
உரையினை காண்க |
இங்கிலாந்து விலங்கியல் வல்லநரான எட்வர்ட் பிளைத் என்பவரால் 1843ஆம் ஆண்டு கிரைசோமா பேரினம் அறிமுகப்படுத்தப்பட்டது. இவர் இதன் மாதிரி இனமாக திமாலியா கைபோலூகா பிராங்க்ளின் 1831 என நியமித்தார்.[1] இந்த உயிரலகு இப்போது மஞ்சள்-கண் சிலம்பனின் துணையினங்களுள் ஒன்றாகும்.[2][3][4] பேரினப் பெயர் பண்டைய கிரேக்கச் சொல்களான குருசோசு அதாவது "தங்கம்" மற்றும் ஓமா என்றால் "கண்" ஆகியவற்றை இணைக்கிறது.[5]
இப்பேரினம் இரண்டு சிற்றினங்களைக் கொண்டுள்ளது:[4]
படம் | பொது பெயர் | அறிவியல் பெயர் | விநியோகம் |
---|---|---|---|
மஞ்சள் கண் சிலம்பன் | கிரைசோமா சையென்சி | பர்மா, லாவோஸ், தாய்லாந்து. | |
செருடன் சிலம்பன் | கிரைசோமா அல்டிரோசுட்ரே | நேபாளம் முதல் வடகிழக்கு இந்தியா வரை | |
செம்பழுப்பு வால் சிலம்பன் முன்பு இந்த பேரினத்தில் வைக்கப்பட்டது, ஆனால் இது ஒற்றைச் சிற்றின பேரினமான மௌபினியாவுக்கு மாற்றப்பட்டது.[4]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.