கிரெக் ஓவர்டன் (பிறப்பு: ஏப்ரல் 10, 1994) இங்கிலாந்துத் துடுப்பாட்ட வீரர் ஆவர். இவர் சோமர்செட் மற்றும் இங்கிலாந்துக்காக விளையாடுகிறார். இவர் ஒரு பன்முக வீரர் ஆவார், வலது கை மித வேகத்தில் பந்து வீசுகிறார் மற்றும் வலது கையால் மட்டையாடுகிறார். [1] இவர் டிசம்பர் 2017 இல் இங்கிலாந்துக்காக சர்வதேச போட்டிகளில் அறிமுகமானார் [2] இவரது இரட்டை சகோதரர் ஜேமி ஓவர்டனும் இங்கிலாந்துக்காக துடுப்பாட்டம் விளையாடுகிறார்.

விரைவான உண்மைகள் தனிப்பட்ட தகவல்கள், பிறப்பு ...
கிரேக் ஓவர்டன்
Thumb
தனிப்பட்ட தகவல்கள்
பிறப்பு10 ஏப்ரல் 1994 (1994-04-10) (அகவை 30)
பார்ன்ஸ்டேபிள், டெவன், இங்கிலாந்து
உயரம்6 அடி 5 அங் (1.96 m)
மட்டையாட்ட நடைவலது கை
பந்துவீச்சு நடைவலது கை வேகம்
பங்குபன்முக வீரர்
உறவினர்கள்ஜேமி ஓவர்டன் (இரட்டைச் சகோதரர்)
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 681)2 டிசம்பர் 2017 எ. ஆத்திரேலியா
கடைசித் தேர்வு24 மார்ச் 2022 எ. மேற்கிந்தியத் தீவுகள்
ஒநாப அறிமுகம் (தொப்பி 249)21 சூன் 2018 எ. ஆத்திரேலியா
கடைசி ஒநாப17 சூலை 2022 எ. இந்தியா
ஒநாப சட்டை எண்32
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2012–தற்போது வரைசோமர்செட் கவுண்டி
துடுப்பாட்ட அணி (squad no. 7)
2021–தற்போதுசதர்ன் பிரேவ்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தே.து ஒ.ப.து மு.த.து ப.அ.து
ஆட்டங்கள் 8 7 125 75
ஓட்டங்கள் 182 68 3,384 824
மட்டையாட்ட சராசரி 15.16 22.66 21.01 22.27
100கள்/50கள் 0/0 0/0 1/14 0/2
அதியுயர் ஓட்டம் 41* 32 138 66*
வீசிய பந்துகள் 1,472 308 20,991 3,444
வீழ்த்தல்கள் 21 5 438 95
பந்துவீச்சு சராசரி 36.19 58.20 23.52 32.16
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 17 1
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0 1 0
சிறந்த பந்துவீச்சு 3/14 2/23 7/57 5/18
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
7/– 4/– 110/– 33/–
மூலம்: ESPNcricinfo, 27 July 2023
மூடு

உள்ளூர் போட்டிகளில்

ஓவர்டன் 2012 கவுண்டி வாகையாளர் போட்டித் தொடரில் சோமர்செட் அணிக்காக அறிமுகமானார். [3] இவர் 2012 தொடரில் 12 வீழ்த்தல்கள் எடுத்தார் [4] மற்றும் 75 ஓட்டங்கள் எடுத்தார். இதே தொடரில் தனது முதல் அரை நூறுகளைப் பதிவு செய்தார். [5] அதே ஆண்டில் சோமர்செட் அணிக்கு பட்டியல் அ துடுப்பாட்டத்தில் அறிமுகமானார்.

முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக ஓவர்டனால் 2013 தொடரில் பெரும்பாலும் விளையாட முடியவில்லை. இத்தொடரில் ஒரு போட்டியில் மட்டும் விளையாடினார். [6]

2014 வருடத்தில் சோமர்செட் அணியின் முக்கிய வீரரானார். இவர் கவுண்டி வாகையாளர் தொடரில் 431 ஓட்டங்கள் எடுத்தார்.மேலும் 42 இலக்குகளையும் எடுத்தார். [7] லங்காசயருக்கு எதிரான ஆட்டத்தில், ஓவர்டன் 99 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். [8] இருபது20 வடிவத்தில் அறிமுகமான ஓவர்டன், இவ்வடிவ போட்டிகளில் சற்று தடுமாறினார்.[9]

சர்வதேச போட்டிகளில்

செப்டம்பர் 2017 இல், 2017-18 ஆஷஸ் தொடருக்கான இங்கிலாந்தின் தேர்வு அணியில் ஓவர்டன் இடம்பிடித்தார். [10] 2 டிசம்பர் 2017 அன்று அடிலெய்டில் நடந்த இரண்டாவது போட்டியில் இங்கிலாந்துக்காக சர்வதேசப் போட்டிகளில் அறிமுகமானார். [11] இவருடைய முதல் சர்வதேச வீழ்த்தல் ஸ்டீவ் ஸ்மித் ஆவார். [12] இவர் 21 சூன் 2018 அன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்துக்காக ஒரு நாள் போட்டிகளில் அறிமுகமானார். [13]

மேற்கோள்கள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.