கிரியாக் தூபி
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
கிரியாக் தூபி (Giriyak Stupa), இதனை ஜராசந்தனின்[1] அரியணை என்றும் அழைப்பர்.[2] உருளை வடிவ இந்த தாது கோபுரம், இந்தியாவின் பிகார் மாநிலத்தின் நாலாந்தா மாவட்டத்தின் கிரியாக் மலைக்குன்றின் மேல் உள்ளது..[2]
கிரியாக் தூபி गिरियक स्तूप (in இந்தி) | |
---|---|
2022ல் இந்தியத் தொல்லியல் ஆய்வகம் சீரமைத்த பின் கிரியாக் தூபியின் காட்சி | |
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | கிரியாக், நாலந்தா மாவட்டம், பிகார், இந்தியா |
புவியியல் ஆள்கூறுகள் | 25°01′30″N 85°30′47″E |
சமயம் | பௌத்தம் |
செயற்பாட்டு நிலை | பாதுகாக்கப்பட்டுள்ளது. |
மலைக்குன்றின் மீதுள்ள கிரியாக் தாது கோபுரம் உருளை வடிவத்தில் செங்கற்களால் குப்தப் பேரரசு காலத்தில் கிபி 400 - 500 காலத்தில் கட்டப்பட்டுள்ளது. இத்தூபி 8.5 மீட்டர்கள் (28 அடிகள்) சுற்றளவும் 6.5 மீட்டர்கள் (21 அடிகள்) உயரமும்; 4.4 மீட்டர்கள் (14 அடிகள்) அடித்தளமும் கொண்டது.
சீன பௌத்த அறிஞரும், யாத்திரிகருமான யுவான் சுவான் கிரியாக் தூபியை தமது பயண நூலில் குறித்துள்ளனர்.[3]தொல்லியல் அறிஞர் அலெக்சாண்டர் கன்னிங்காம் இத்தூபியை 1870ல் அகழாய்வு செய்தார். இது கிபி 500ஆம் ஆண்டில் நிறுவப்பட்டிருக்கலாம் எனக்கருதுகிறார்.[2][4]
மிகவும் சிதிலமடைந்திருந்த கிரியாக் தூபியை இந்தியத் தொல்லியல் ஆய்வகம் 2011 முதல் 2016 வரை சீரமைத்து நிறுவியது.[1]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.