கிம் யோ-ஜோங்
வட கொரியத் தலைவர் கிம் ஜொங்-உன்னின் தங்கை / From Wikipedia, the free encyclopedia
கிம் யோ-ஜோங் (Kim Yo-jong) (அங்குல்: 김여정; hanja: 金裕貞, இவர் தற்போதைய வட கொரியா அதிபர் கிம் ஜொங்-உன் சகோதரியும், முன்னாள் வட கொரியா அதிபர் கிம் ஜொங்-இல்லின் இளைய மகளும் ஆவார். இவர் 2004 முதல் வட கொரியாவின் தொழிலாளர் கட்சியின் அரசியல் குழுவின் (WPK) உறுப்பினராகவும், 2014 முஹ்டல் வட கொரியாவின் கொள்கைபரப்பு மற்றும் போராட்டப் பிரிவுத் துறையின் முதல் துணை இயக்குநராகவும் உள்ளார்.
விரைவான உண்மைகள் கிம் யோ-ஜோங், முதல் துணை இயக்குநர், வட கொரியாவின் கொள்கைபரப்பு மற்றும் போராட்டப் பிரிவுத் துறை ...
கிம் யோ-ஜோங் | |
---|---|
![]() கிம் யோ-ஜோங், பிப்ரவரி, 2018 | |
முதல் துணை இயக்குநர், வட கொரியாவின் கொள்கைபரப்பு மற்றும் போராட்டப் பிரிவுத் துறை | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 29 நவம்பர் 2014 | |
வட கொரியாவின் தலைமைத் தலைவர் | கிம் ஜொங்-உன் |
இயக்குநர் | கிம் கி-நாம் பாக்-குவாங்-ஹோ ரி இல்-ஹான் |
முன்னையவர் | ரி ஜே-இல் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 26 செப்டம்பர் 1987 (1987-09-26) (அகவை 36)[1][2] பியொங்யாங், வட கொரியா |
தேசியம் | வட கொரியர் |
துணைவர் | சூ சாங் (2015) |
பெற்றோர் | கிம் ஜொங்-இல் கோ யோ-குயிய் |
முன்னாள் கல்லூரி | கிம் இல்-சங் இராணுவப் பல்கலைக் கழகம் |
கையெழுத்து | ![]() |
அங்குல் எழுத்துக்கள் | 김여정 |
Hancha | 金與正 |
McCune–Reischauer | கிம்-யோ-யோஜோங் |
Revised Romanization | ஜிம் யோ-ஜியோங் |
மூடு
முன்னர் வட கொரியா அதிபரான இவரது தந்தை கிம் ஜொங்-இல்லின் தனிச் செயலாராக செப்டம்பர் 2010 முதல் கிம் ஜொங்-இல் இறக்கும் வரை பணியாற்றினார்.[3]இவர் 1996 - 2000 காலத்தில் சுவிட்சர்லாந்து நாட்டில் படித்தவர்.
இவர் வட கொரியா இராணுவத் தலைமைத் தலைவர் சூ ரியாங்-ஹோவின் இரண்டாம் மகன் சூ சாங் என்பவரை ஜனவரி 2015-இல் மணந்தவர்.[4]