கா. வேழவேந்தன்
தமிழக கவிஞர், அரசியல்வாதி / From Wikipedia, the free encyclopedia
கா.வேழவேந்தன் (K. A. Vezhavendan, 5 மே 1936 – 26 சனவரி 2022) ஒரு தமிழ்நாட்டு எழுத்தாளர் மற்றும் அரசியலர் ஆவார். திராவிட முன்னேற்றக் கழக (திமுக) உறுப்பினரான இவர், 1967-76 காலகட்டத்தில் கும்மிடிப்பூண்டி தொகுதிக்கான சட்டமன்ற உறுப்பினராகவும், அதே காலகட்டத்தில் ஓராண்டு தொழிலாளர் நலத்துறை அமைச்சராகவும் (1969-70) பணியாற்றினார். 1500-க்கும் மேற்பட்ட கவிதைகளையும் 100-க்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் ஒருசில சிறுகதைகளையும் எழுதியுள்ளார். இவை அனைத்தும் தொகைநூல்களாக வெளிவந்துள்ளன. பதினைந்துக்கும் மேற்பட்ட ஏடுகளுக்கும் இதழ்களுக்கும் பங்களித்துள்ள இவர் கலைமாமணி விருது உள்ளிட்ட விருதுகளையும் பெற்றுள்ளார்.
விரைவான உண்மைகள் கவிவேந்தர்கா. வேழவேந்தன், தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ...
கவிவேந்தர் கா. வேழவேந்தன் | |
---|---|
தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் | |
பதவியில் 8 ஆகஸ்ட் 1969 – 10 செப்டம்பர் 1970 | |
முன்னையவர் | ப. உ. சண்முகம் |
பின்னவர் | என். வி. நடராசன் |
தமிழ்நாடு சட்டப் பேரவை உறுப்பினர் | |
பதவியில் 4 மார்ச் 1967 – 31 சனவரி 1976 | |
முன்னையவர் | எ. இராகவ ரெட்டி |
பின்னவர் | ஆர். எசு. முனிரத்தினம் |
தொகுதி | கும்மிடிப்பூண்டி |
செயற்குழு உறுப்பினர், தமிழ்நாடு கிளை, பொதுநலவாய நாடாளுமன்ற சங்கம் | |
பதவியில் 1968 – 15 மார்ச் 1971 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | கஜேந்திரன் (1936-05-05)5 மே 1936 காரணி, சென்னை மாவட்டம், சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்போது திருவள்ளூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா) |
இறப்பு | 26 சனவரி 2022(2022-01-26) (அகவை 85) மயிலாப்பூர், சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
குடியுரிமை | இந்தியர் |
தேசியம் | தமிழர் |
அரசியல் கட்சி | திராவிட முன்னேற்றக் கழகம் (1956[?] - 2022 ; இறப்பு வரை) |
துணைவர்(கள்) | பானுமதி (? - 2022 ; இறப்பு வரை) |
பிள்ளைகள் | வெற்றிவேந்தன் எழில்வேந்தன் |
பெற்றோர் | இராசம்மாள் கா. சின்னசாமி |
முன்னாள் கல்லூரி | பச்சையப்பன் கல்லூரி, சென்னை |
மூடு