ஹூன அரசன் From Wikipedia, the free encyclopedia
காஷ்மீரின் தோரமனன் (Toramana of Kashmir) 6-7 ஆம் நூற்றாண்டில் காஷ்மீரின் ஆட்சியாளராக இருந்தார். இந்த ஆட்சியாளரால் வெளியிடப்பட்ட நாணயங்களின் ஆய்வுகளில் பெரும்பாலும் "இரண்டாம் தோரமனன்" என்று குறிப்பிடப்படுகிறார். ஆனால் இந்த பெயர் இப்போது காபுலிஸ்தானின் முந்தைய அல்கான் ஹூன ஆட்சியாளருக்குப் பயன்படுத்தப்படுகிறது (யுதிஷ்ட்டிரன்).[1] [2]
காஷ்மீரின் தோரமனனின் செப்பு நாணயங்கள் காஷ்மீர் பகுதியில் பரவலாகக் காணப்படுகின்றன. மேலும் பிரவரசேனன், மேகவன், துய்சினன் போன்ற பிற ஆட்சியாளர்களின் இதேபோன்ற பாணியிலான நாணயங்களும் கிடைத்துள்ளன. [1] இந்த நாணயங்கள் பொதுவாக பொ.ச. 6-7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. தோரமனனின் நாணயங்கள் காலவரிசையில் கடைசியாக வந்து அதன்பிறகு பல நூற்றாண்டுகளுக்கு நகலெடுக்கப்பட்டன. [1] [3] தோரமனன் என்ற பெயரில் மற்ற ஆட்சியாளர்களும் அறியப்படுகிறார்கள். பிரபலமான அல்கான் ஹூன ஆட்சியாளர்களான தோரமணன், இரண்டாம் தோரமனன் போன்றவர்கள். [2]
இந்த காஷ்மீர் ஆட்சியாளர்களின் காலம், புவியியல் இருப்பிடம், அவர்களின் பெயர்கள் போன்றவை 5-6 ஆம் நூற்றாண்டின் வடமேற்கு இந்தியாவில் ஆட்சி செய்தன் அல்கோன் ஹூனர்களின் பெயர்களை ஒத்ததாகவே இருப்பதால், இவர்கள் அல்கோன் ஹூனர்களின் வழித்தோன்றல்களாகவே இருந்திருக்க "அதிக வாய்ப்பு" உள்ளது. [1] வடமேற்கு இந்தியாவில் ஏற்பட்ட தோல்விகளைத் தொடர்ந்து அல்கோன் ஹூனர்கள் காந்தாரதேசம், காஷ்மீர் போன்ற பகுதியில் மீள்குடியேறியதாக அறியப்படுகிறது.[4][5]
தோரமனனின் அறியப்பட்ட நாணயம் தாமிரத்தில் மட்டுமே உள்ளது. இந்த நாணயங்கள் பிற்கால குசானர்கள், கிடாரைட்டுகளின் நாணய வகைகளைப் பின்பற்றுகின்றன. மன்னன் முன்பக்கத்தில் நிற்கிறார். அதன் பின்புறத்தில் ஒரு தெய்வம் தாமரையைப் பிடித்துள்ளது. மேற்புறத்தில் தோரமனன் என்ற பெயர் 5-6 ஆம் நூற்றாண்டு பிராமி எழுத்துமுறையில் தோன்றுகிறது. தலைகீழ் செங்குத்தாக எழுதப்பட்ட "கி-டிடி-ரா" என்ற எழுத்தும் உள்ளது. இதன் மூலம் கிடாரைட்டுகளின் காஷ்மீரின் ஆக்கிரமிப்பை அறியலாம். கார்கோடா வம்சத்தின் பிற்பகுதியில் காணப்பட்ட கிடாரா என்ற வார்த்தை காஷ்மீர் நாணயத்தில் இருக்கிறது.[6][7]
கல்கணர் இயற்ரிய இராஜதரங்கிணியில் (பொ.ச. 12-ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது) அல்கோன் ஹூனர்களின் பெயர்களைக் கொண்ட பல ஆட்சியாளர்களைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. [10]
இராஜதரங்கிணியின் காலவரிசை பெரும்பாலும் குறைபாடுடையதாக இருந்தாலும், இந்த ஆட்சியாளர்களின் பல பெயர்கள், குறிப்பாக கோனாண்டா வம்சம் (II) என்று அழைக்கப்படுபவர்களின் பெயர்கள், காஷ்மீரில் கிடைத்த இந்த நாணயங்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டு பொ.ச.. 6-7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என அறியப்படுகிறது.[11] வரலாற்றாளர் இராஜ் குமாரின் கூற்றுப்படி, "கல்கணரின் அறிவிப்புடன் இந்த நாணயத்தின் தொடர்பை சந்தேகிக்க முடியாது."[10]
இராஜதரங்கிணியின் கூற்றுப்படி, காஷ்மீரின் தோரமனான் சிரேஷ்டசேனனின் (முதலாம் பிரவரசேனன்) மகனும் மேகவாகனனின் பேரனும் ஆவார். மேலும் இவர் தனது சகோதரர் இரண்யனுக்கு துணை அரசராக இருந்தார். கணக்கின்படி, இரண்யன் தோரமனன் தனது சொந்த பெயரில் அரச நாணயங்களை வெளியிட்டபோது அவரை சிறையில் அடைத்தார். காஷ்மீரின் தோரமனனின் நாணயத்தின் கண்டுபிடிப்பு இந்த கதைக்கு சில நம்பகத்தன்மையை அளிக்கிறது. [12] இராஜதரங்கிணியின் படி, தோரமனனின் மகன் இரண்டாம் பிரவரசேனன் என்பவனாவான். இவனது பெயரில் வெயிட்ட நாணயங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. [13] [1]
இராஜதரங்கிணியின் கூற்றுப்படி, இவர்களது ஆட்சியானது கார்கோட பேரரசின் நிறுவனர் துர்லபவர்தனனின் மகன் பிரதாபதித்யனால் அகற்றப்பட்டது.[14][15][16]
தோரமனனின் நாணயங்கள் காஷ்மீரில் இந்து ஆட்சி முடியும் ( இலோகரா வம்சம், 1003-1320 பொ.ச.) வரை பயன்பாட்டில் இருந்தன. மேலும் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகும், நகலெடுக்கப்பட்டன.[1] [3]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.