சிவ வடிவங்களில் ஒன்றான
கால சம்ஹாரர்

மூர்த்த வகை:மகேசுவர மூர்த்தம்,
உருவத்திருமேனி
விளக்கம்:காலனை (எமனை)
அழித்த சிவக் கோலம்
இடம்:கைலாயம்
வாகனம்:நந்தி தேவர்

கால சம்ஹாரர், அறுபத்து மூன்று சிவ திருமேனிகளுள் ஒன்றாக சைவர்களால் வணங்கப்படும் வடிவமாகவும். காலன் என்று அழைக்கப்படும் எமனை அழித்த சிவ உருவம் கால சம்ஹாரர் எனவும், காலந்தகர் எனவும் வழங்கப்படுகிறது.[1][2][3]

சொல்லிலக்கணம்

காலன் - யமன், சம்ஹாரர் - அழித்தவர். காலனை அழித்தவர் என்று பொருள் கொள்ளும் படி கால சம்ஹாரர் என்று அழைக்கப்படுகிறார்.

வேறு பெயர்கள்

இவ்வடிவத்தினை காலாந்தகர், காலாரி, கால சம்ஹார மூர்த்தி, காலகாலர், கூற்றினையுதைத்தவர், அந்தகனுக்கந்தகர் என்று பல்வேறு பெயர்களில் சைவர்கள் அழைக்கின்றார்கள்.

திருவுருவக் காரணம்

மிருகண்டு மகரிஷிக்கு மார்க்கண்டேயன் எனும் மகனிருந்தான். அவனுக்கு 16 வயது முடியும்போது, காலதேவனான எமதர்மன் அவன் உயிரை எடுக்க முற்பட்டார். மார்க்கண்டேயன் சிவலிங்கத்தை பற்றி வேண்டிக் கொண்டிருந்த போதே, எமதர்மன் பாசக்கயிற்றை வீசினார். பாசக் கயிறு சிவலிங்கத்தின் மீதும் வீழுந்தது. தன் மீதே பாசக் கயிற்றை வீசிய எமனைத் தன் காலால் உதைத்து அழித்தார்.

கோவில்

 திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் காலசம்ஹாரர் சிற்பம் உள்ளது

மேலும் காண்க

மேற்கோள்கள்

  1. Dallapiccola, Anna L. (2002). "Kalarimurti; Kalaharamurti or Kalantakamurti". Dictionary of Hindu Lore and Legend. London: Thames and Hudson Ltd. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-500-51088-1. பார்க்கப்பட்ட நாள் 16 May 2011.
  2. "Archived copy". Archived from the original on 2014-12-18. பார்க்கப்பட்ட நாள் 2020-02-12.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.