புவியின் காலநிலை மாற்றங்கள் From Wikipedia, the free encyclopedia
பத்தாண்டுகள் முதல் பல மில்லியன் வருடங்கள் வரை உண்டான கால கட்டங்களில் வானிலை மாறுவதன் பேரிலான புள்ளியியல் பரம்பலே காலநிலை மாற்றம் அல்லது தட்பவெப்ப நிலை மாறுதல் (climate change) என்பதாகும். அது, சராசரி பருவ நிலையில் ஏற்படும் மாறுதலாகவோ அல்லது ஒரு சராசாரி பருவ நிலையைச் சுற்றிலும் உள்ளதான நிகழ்வுகளின் பரம்பலின் மாற்றமாகவோ இருக்கலாம். (எடுத்துக் காட்டாக, மிகவும் அதிகமான அல்லது மிகவும் குறைவான தீவிர பருவ நிலை மாற்றங்கள்). தட்பவெப்ப நிலை மாற்றம் என்பது ஒரு குறிப்பிட்ட பகுதி சார்ந்தோ அல்லது புவி முழுமையிலும் ஏற்படுவதாகவோ இருக்கலாம். இது மீண்டும் மீண்டும் நிகழ்வதான, பெரும்பாலும் சுழற்சியான, எல் நினொ-தெற்கு அலைவு போன்ற தட்பவெப்ப உருமாதிரிகளாக இருக்கலாம்; அல்லது புழுதிப் புயல் போன்று குறிப்பிட்டுச் சொல்லும்படியான ஒற்றை நிகழ்வுகளாக வரலாம்.[1]
அண்மைக் காலத்திய பயன்பாட்டில், குறிப்பாகச் சுற்றுச்சூழல் பாதுகாப்புக் கொள்கை என்னும் பொருளில், தட்பவெப்ப நிலை மாற்றம் என்பது வழக்கமாகத் தற்காலத்திய தட்பவெப்ப நிலையில் ஏற்படும் மாற்றங்களையே குறிக்கிறது. இது மனித நடவடிக்கைகள் காரணமாக உருவாகும் தட்பவெப்ப நிலை மாற்றம் என்று குறிக்கப்படலாம்; மேலும் பொதுவாகச் சொல்வதானால், புவி சூடாதல் அல்லது "மனித நடவடிக்கைகள் காரணமாக உருவாகும் புவி சூடாதல்" எனப்படுகிறது.
தட்பவெப்ப நிலையை உருவாக்கும் காரணிகள், தட்பவெப்ப நிலை மீதான அழுத்தங்கள் ஆகும். இவற்றில் பின் வரும் செயற்பாடுகளும் மாறுபாடுகளும் அடங்கும்: புவியை வந்தடையும் சூரிய ஒளிக் கதிர்வீச்சு, புவியின் கோள் சுற்றுப்பாதையில் ஏற்படும் மாற்றங்கள், தட்டுப் புவிப்பொறைக் கட்டமைப்பில் ஏற்படும் மாற்றங்கள், எரிமலை வெடிப்புகள் மற்றும் பைங்குடில் வளிமத்தின் அடர்த்தியில் உண்டாகும் மாற்றங்கள் ஆகியவையாகும். மனிதச் செயற்பாடுகள் பல இந்தத் தட்பவெப்பநிலை மாற்றத்திற்குக் காரணமாகின்றன. மனித செயற்பாடுகளும் தட்பவெப்பநிலை மாற்றத்திற்குக் காரணமாகின்றன. தட்பவெப்ப நிலை மாற்றத்தினால் பல்வேறு விளைவுகள் புவியில் நிகழ்கின்றன. இவை, ஆரம்ப கால அழுத்தத்தைப் பன்மடங்கு அதிகரிக்கலாம் அல்லது குறைக்கலாம்.
தட்பவெப்ப நிலை அமைப்பின் சில பகுதிகள், அதாவது கடல்கள் மற்றும் பனிக்குல்லாய்கள் போன்றவை, அவற்றின் மிகு அளவு காரணமாகத் தட்பவெப்ப நிலைமீதான அழுத்தத்திற்குத் தமது பதிலிறுப்பைத் தாமதமாக அளிக்கின்றன. ஆகவே, தட்ப வெப்ப முறைமை புதியதான மற்றும் வெளியிருந்து வருவதான அழுத்தங்களினால் மாற்றம் அடைவது என்பதானது, பல நூற்றாண்டுகளோ அல்லது அதற்கும் மேலான கால கட்டத்தையோ எடுத்துக் கொள்ளலாம்.
பல மில்லியன் வருடங்களாக, புவியோட்டுத் தகடுகள் தமது இயக்கத்தினால், புவியின் நீர் மற்றும் நிலப் பகுதிகளை மறு வரையறுத்துப் புதிய புவியமைப்பை உருவாக்கி வருகின்றன. இவை, பகுதி சார்ந்த மற்றும் உலகம் முழுமைக்குமான தட்ப வெப்ப நிலை மற்றும் வளி மண்டலம் - கடல் நீரோட்டம் ஆகிய இரண்டையுமே பாதிக்கவல்லது.[2]
கண்டங்கள் அமைந்திருக்கும் நிலைதான் கடல்களின் ஜியோமிதியைத் தீர்மானிக்கிறது; ஆகவே, இது கடல் நீரோட்டங்களின் மீதும் ஆதிக்கம் செலுத்துவதாக உள்ளது. உலகெங்கும் வெப்பம் மற்றும் ஈரப்பதம் ஆகியவற்றைக் கடத்துவதில், கடல்கள் அமைந்திருக்கும் பகுதிகள் மிகவும் முக்கியமானவை; எனவே, உலகெங்கும் தட்பவெப்ப நிலையைத் தீர்மானிப்பதிலும் இது முக்கியக் காரணியாகிறது. புவியோட்டுத் தகடுகள் எவ்வாறு கடல் நீரோட்டத்தைக் கட்டுப்படுத்துகின்றன என்பதற்கு அண்மையில் அறியப்பட்ட ஓர் எடுத்துக் காட்டு, பனாமா கால்வாய். சுமார் 5 மில்லியன் வருடங்களுக்கு முன்பாக அமைந்த இது அட்லாண்டிக் மற்றும் பசிஃபிக் கடல்கள் நேரடியாகக் கலப்பதைத் தடை செய்தது. இது தற்போது வளைகுடா ஓடை என்று அறியப்படும் பகுதியின் கடல் இயக்கமுறைமையை வெகுவாகப் பாதிக்கலானது; மேலும், இதன் காரணமாகவே வடகோளத்தின் பனிப்படலம் உருவாகியிருக்கலாம்.[3][4] இதற்கு முன்பான நிலக்கரி உருவாக்கக் காலகட்டத்தில், புவியோட்டுத் தகடுகள், அதிக அளவில் கரியமிலம் சேமிக்கப்படுவதற்கும், பனியாறுகள் பெருகுவதற்கும் வழி வகுத்திருக்கலாம்.[5]
ஒன்றிற்கு மேற்பட்ட கண்டங்களை உள்ளடக்கியிருந்த பேங்கியா என்னும் மிகப்பெரும் கண்டம் இருந்த காலத்தில் "மிகப்பெரும் பருவ நிலை" சுற்றோட்டங்கள் இருந்ததாகப் புவியியல் ஆதாரங்கள் சுட்டிக் காட்டுகின்றன. மேலும், தட்பவெப்ப நிலையை அறியச் செய்யப்படும் மாதிரிகள், பருவக் காற்றுகளின் நிலை பெறவும் ஏதுவாக இருந்ததாகக் காட்டுகின்றன.[6]
பகுதி சார்ந்த வகையில், நில அமைப்பானது, தட்பவெப்ப நிலையின் மீது ஆதிக்கம் செலுத்தக்கூடும். (புவியோட்டுத் தகடுகளின் காரணமான மலையுருவாக்கத்தினால் விளைந்த) மலைகளின் இருப்பானது, மலைகள் ஈரப்பதம் மிக்க காற்றை மேற்செலுத்தி அவை குளிர்ந்து விரைவில் பனிவீழ்ச்சியாகும் ஆரோகிராஃபிக் ப்ரிசிபிடேஷன் என்று கூறப்படும் செயல்பாட்டினை உருவாக்கலாம். பொதுவாக, உயரங்கள் அதிகரிப்பதுடன் தொடர்பு கொண்டு, ஈரப்பதமானது குறைகிறது மற்றும் ஒரு நாளின் வெப்ப நிலை என்பதானது பொதுவாக அலைவு கொண்டு அமைகிறது. சராசரி வெப்பநிலை, பருவ வளர்ச்சியின் நீளம் ஆகியவையும் உயரம் அதிகரிப்பதுடன் எதிர்மறைத் தொடர்புற்றுக் குறைகின்றன. மலைகளின் விளைவான பனிவீழ்ச்சியும் இத்துடன் இணைந்து, குறைந்த-உயர ஆல்பைன் பனியாறுகளின் இருப்பு மற்றும் மலைகளின் உயிரியன அமைப்பு ஆகியவற்றைச் சார்ந்து பல்வேறு உயரங்களில் தாவர வளமும், விலங்குகளும் உருவாவதற்கு மிகவும் முக்கியக் காரணியாகிறது.
கண்டங்களின் அளவும் மிக முக்கியமானதாகும். கடலானது வெப்ப நிலையை நிலைப்படுத்தும் விளைவைக் கொண்டுள்ளதால், கடலோரப் பகுதிகளின் வருடாந்திர சராசரி வெப்ப நிலையானது, நாட்டின் உட்பகுதிகளை விடப் பொதுவாகக் குறைந்த அளவிலேயே காணப்படுகிறது. இதனால், சிறு கண்டங்கள் மற்றும்/ அல்லது தீவு வளைவுகள் ஆகியவற்றை விட ஒரு பெரும் கண்டமானது பருவம் சார்ந்த தட்பவெப்ப நிலையைக் கொண்ட நிலப் பகுதியை அதிக அளவில் கொண்டிருக்கும்.
புவியில் ஆற்றல் உள்ளீடாவதற்கு முதன்மையான தோற்றுவாய் சூரியன் ஆகும். நீண்ட காலம் மற்றும் குறைந்த காலம் ஆகிய இரண்டிலும் சூரிய சக்தியின் தீவிரத்தில் ஏற்படும் மாற்றங்கள், உலகளவில் தட்பவெப்ப நிலையைப் பாதிப்பதாக அறியப்பட்டுள்ளன.
தற்போது சூரியன் வெளிப்படுத்தும் சக்தியில், 70 சதவிகிதமே முன்னர் வெளியிட்டப்பட்டதாக ஆரம்பகாலப் புவியின் வரலாறு உரைக்கிறது. இன்றிருக்கும் வளி மண்டல உருவமைப்பு முன்னர் இருந்திருந்தால், புவியில் நீர் என்னும் திரவமே உருவாகியிருக்கக் கூடாது. இருப்பினும், ஆரம்ப காலப் புவி வரலாற்றின், ஹேடியன்[7][8] மற்றும் ஆர்க்கியன்[9][7] கால கட்டங்களில் புவியில் நீர் இருந்ததற்கான சிறிது ஆதாரம் உள்ளது. இது வலுவற்ற இளம் சூரிய முரண்பாடு விளைந்ததைச் சுட்டிக் காட்டுவதாக உள்ளது.[10] இந்த முரண்பாட்டிற்குக் கருத்தாக்க அளவில் தீர்வுகள் அளிக்கப்படுகின்றன. தற்போது இருப்பதை விட[11] அதிக அளவில் பச்சையில்ல வாயு அடர்த்தி மிகுந்திருந்ததால், அதைத் தொடர்ந்த சுமார் 4 பில்லியன் வருடங்களில், சூரிய சக்தியின் வெளிப்பாடு அதிகரித்து வளி மண்டல உருவாக்கம் மாறுபாட்டுக்கு உள்ளானது என்றும், அப்போது, வளிமண்டல உயிர்வாயுவாக்கம் என்னும் மிகவும் குறிப்பிடத் தக்க மாற்றம் ஏற்பட்டது எனவும் கூறப்படுகிறது. பொது வரிசைமுறையைப் பின்பற்றி வரும் சூரியனின் ஒளிர் திறனானது தொடர்ந்து அதிகரித்தே வரும். சூரியனின் ஒளிர் திறனில் உண்டாகும் இந்த மாற்றங்களும், சூரியன் சிவப்பு அரக்கன் என்ற நிலையையும் அதன் பின்னர் வெள்ளைக் குள்ளன் என்ற நிலையையும் அடைந்து இறுதியில் மரணம் அடைவதும், தட்பவெப்ப நிலையில் மிகப் பெரும் விளைவுகளை ஏற்படுத்தும்; இதில் சூரியன் சிவப்பு அரக்கன் என்னும் கட்டத்தை அடையும்போது, புவியில் உயிரினம் அழிந்துவிடலாம்.
சிறிய கால கட்டங்களிலும் சூரிய சக்தியின் வெளிப்பாடு மாறுபாடுகளுக்கு உள்ளாகிறது; 11 வருடக் கால சூரிய சுழற்சிக்[12] காலம் மற்றும் நீண்ட கால அதிர்வு மாற்றமைப்புகள் ஆகியவை இதில் அடங்குவன.[13] 11-வருட சூரியப் புள்ளி சுழற்சியானது, குறைந்த அட்சரேகைகளில் வெப்பத்தையும், அதிக அட்சரேகைகளில் குளிர்ச்சியையும், புள்ளியியலில் கருத்தில் கொள்ளும் அளவு முக்கியமானதாக 1.5"சி என்னும் வீச்சில் மீவளி மண்டலத்தில் விளைக்கிறது. ஆயினும், 11 வருடச் சூரிய சுழற்சியுடன் தொடர்புபடுத்தப்படும் மாறுபாட்டுத் தன்மை மீவளி மண்டலத்தின் வெப்ப நிலையின் மீது குறிப்பிடத் தக்க அளவில் ஆதிக்கம் செலுத்துவதாக இருப்பினும்.... இதன் மிகச் சரியான அளவு, இடம் சார்ந்த அமைப்பு முறை ஆகியவை பற்றி ஒருமித்த கருத்து இதுவரை உருவாகவில்லை."[14] பூமத்திய ரேகையின் அளவுக்கு அதிகமான வெப்ப நிலையால் வெப்பக் காற்று உருவாகிறது என்னும் கருத்திற்கு, இந்த மீவளி மண்டல வேறுபாடுகள் ஒத்திசைவு கொண்டதாக உள்ளன. 11 வருடச் சூரிய சுழற்சியின் விளைவாகப் புவியின் மேற்பரப்புக்கு வெகு அருகில் உள்ள அடிவிள மண்டலம் மிகக் குறைந்த அளவிலேயே (ஒரு டிகிரியில் பத்தில் ஒரு பங்கு என்பதாகவும், புள்ளியியலுக்கு முக்கியத்துவம் உள்ள வகையில் மட்டுமே மீவளி மண்டலக் காற்று விசையின் உச்சங்களுக்குக் கீழாகவும்) தட்ப வெப்ப நிலை மாறுதலுக்கு உள்ளாகிறது சூரிய சக்தியின் வெளிப்பாட்டின் உண்டான மாறுதல்களே சிறு பனிக்காலம்,[15] உருவானதற்கும் 1990லிருந்து 1950 வரை வெப்பம் அதிகரித்ததற்கும் காரணமாகக் கருதப்படுகின்றன சுழற்சி முறைமையில் அமைந்திருக்கும் சூரிய சக்தி வெளிப்பாடு இன்னமும் முழுமையாகப் புரிந்து கொள்ளப்படவில்லை; சூரியன் வயது முதிர்ந்து, பரிணாமம் அடைவதனால் அதனுள் மிகவும் மெதுவாக உருவாகும் மாற்றங்களிலிருந்து இது வேறுபடுகிறது. சூரியப் புள்ளிகளின் சுழற்சிகளினால் சூரிய ஒளிச் சுற்றெரிவு அதிகரித்து உலகார்ந்த வெப்பமயமாதல் நிகழ்வு ஏற்படுவதாகச் சில ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன.[16][17]
புவியின் கோள்பாதையில் ஏற்படும் சிறு மாறுபாடுகள் சூரிய ஒளியானது,பருவம் சார்ந்த விநியோகத்தின் விளைவாகப் புவியின் மேற்பரப்பை அடையும் செயல்பாடு மற்றும் அது புவியின் பல பகுதிகளிலும் எவ்வாறு விநியோகமாகிறது என்பனவற்றில் மாற்றங்களை விளைவிகிறது வருடாந்தர சராசரியாக்கப்பாட்ட, பகுதி சார்ந்த சூரிய ஒளி சராசரியில் மிகக் குறைவான மாற்றமே ஏற்படுகிறது; ஆயினும், நிலவியல் மற்றும் பருவம் சார்ந்த விநியோகங்களில் உருவாகும் மாற்றங்கள் வலியமையாக இருக்கக்கூடும். புவிக் கோள்பாதை மாற்றங்கள் மூன்று விதமானவை: புவியின் மைய உறழ்வு, புவியின் சுழற்சி அச்சு சாய்மானக் கோணத்திலான மாற்றங்கள் மற்றும் புவியச்சின் முந்துகை. இவை அனைத்தும் இணைகையில் இவை மிலாங்கோவிச் சுழற்சிகள் என்பவனவற்றை உருவாக்குகின்றன. இது தட்பவெப்ப நிலையில் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்துகிறது; மேலும் பனியாறாக்கம் மற்றும் பனியாறு இடைக்காலம்[18] ஆகியவற்றுடன் குறிப்பிடும் அளவில் தொடர்புற்றிருப்பதாகவும் மேலும், புவியமைப்புப் பதிவியின்படி சஹாரா[18] வின் தோற்றம் மற்றும் அதன் முன்னடைவு மற்றும் பின்னடைவு ஆகியவற்றுடனும் தொடர்பு கொண்டிருப்பதாகவும் அறியப்படுகின்றன.[19]
புவியின் கீழடுக்கு மற்றும் மேலடுக்கு ஆகியவற்றிலிருந்து பொருட்களை அதன் மேற்பரப்பிற்குக் கடத்தும் ஒரு செயற்பாடு எரிமலையாக்கம் எனப்படுகிறது. எரிமலை வெடிப்புகள், வெந்நீர் ஓடைகள் மற்றும் கொதி நீர் ஊற்றுகள் ஆகியவை எரிமலையாக்கத்திற்கான எடுத்துக்காட்டுகள். இவை வாயு மற்றும் திடப் பொருட்களை வளி மண்டலத்தில் வெளிப்படுத்துகின்றன.
தட்ப வெப்ப நிலையைப் பாதிக்கும் அளவு மிகப் பெரிய அளவுகளில் எரிமலை வெடிப்புகளாவன, சராசரியாக ஒரு நூற்றாண்டில் பல முறைகள் உண்டாகின்றன. இவை (சூரிய ஒளிக் கதிர் சுற்றெரிவு புவியை அடைவதை ஒரளவு தடையிடுவதால்) சில வருடங்களுக்குக் குளிர்வையும் உருவாக்குகின்றன. 20வது நூற்றாண்டில்[20] (1912வது வருடத்திய நோவாருப்டா[21] எரிமலை வெடிப்பிற்குப் பிறகு) இரண்டாவது எரிமலை வெடிப்பான, 1991வது வருடத்திய பினாடுபோ மலை எரிமலை வெடிப்பு தட்பவெப்ப நிலையை மிகுந்த அளவில் பாதித்தது. உலக அளவில் வெப்ப நிலை சுமார் 0.5"சி (0.9"எஃப்) என்ற அளவில் சரிந்தது. 1815வது வருடம் தம்போரா மலையின் எரிமலை வெடிப்பு வேனிற்காலம் இல்லாத ஒரு வருடம் உருவாவதில் விளைந்தது.[22] பெரும் தீப்பரப்புகள் என்று பொதுவாக அறியப்படும் மிகப் பெரும் எரிமலை வெடிப்புகள் ஒவ்வொரு நூறு மில்லியன் வருடங்களிலும் சில முறைகளே நிகழ்கின்றன; ஆயினும், இவை புவி வெப்பமயமாதல் மற்றும் ஒட்டு மொத்த இன அழிவு ஆகியவற்றை விளைவிக்கக்கூடும்.[23]
எரிமலைகள் என்பவை நீட்டிக்கப்பட்ட கரியமில சுழற்சிகளின் பகுதிகளுமாகும். மிக நீண்ட காலத்திற்கான (நிலவியல்) கால கட்டங்களில், இவை புவியின் மேல் அடுக்கு மற்றும் கீழடுக்கு ஆகியவற்றிலிருந்து கரியமில வாயுவை வெளியிடுகின்றன. இதனால், வண்டல் மலைகள் மற்றும் இதர நிலவியல் கரியமில வாயு மூழ்கடிப்பான்களுடன் இவை இடைபடுகின்றன. இருப்பினும், யுஎஸ் நிலவியல் சுற்றாய்வு, எரிமலைகள் வெளிப்படுத்துவதை விட மனித நடவடிக்கைகளே, 130 மடங்கு அதிக அளவில் கரியமில வாயுவை வெளிப்படுத்துவதாகக் கணித்துள்ளது.[24]
கடலானது தட்ப வெப்ப அமைப்பு முறைமையின் அடிப்படையான ஒரு பகுதியாகும். ஈ1 நினோ-தெற்கு அலைவு, பசிஃபிக்கின் பத்தாண்டு அலைவு, வட அட்லாண்டிக் அலைவு மற்றும் ஆர்க்டிக் அலைவு ஆகிய (வருடங்கள் முதல் சில பத்தாண்டுகளுக்கான) குறுகிய கால ஏற்றத்தாழ்வுகள் தட்பவெப்ப நிலை மாற்றம் என்பதை விடத் தட்பவெப்ப நிலை மாறுபாடு என்பதையே குறிக்கின்றன. நீண்ட கால அளவுகளில், வெப்ப நீரோட்டம் போன்ற கடல் சார்ந்த செயற்பாடுகள், நீர் மிகவும் மெதுவான மற்றும் தீவிரமான ஆழ் முறையில் அலைவுக்கு உட்படுவதனால் வெப்ப மறு விநியோகம் மற்றும் உலகின் கடல்களில் நீண்ட கால அளவிற்கான வெப்ப மறுவிநியோகம் ஆகியவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன.
மனிதவழிக் காரணிகள் (Anthropogenic factors) என்பவை, சுற்றுச்சூழலில் மாற்றங்களை உருவாக்கும் மனித நடவடிக்கைகளாகும். சில நேரங்களில், மனித ஆதிக்கத்தால் தட்பவெப்ப நிலை மிகுந்த அளவில் பாதிப்புக்கு உள்ளாவது என்பதானது நேரடியாகவும், குழப்பம் ஏதும் இன்றித் தெளிவான முறையிலும் அமைகிறது (உதாரணமாகப் பகுதி சார்ந்த ஈரப்பதத்தின் மீது பாசனம் உண்டாக்கும் பாதிப்பு); சில வேளைகளில், இது அவ்வளவு தெளிவாக இருப்பதில்லை. மனிதச் செயற்பாடுகளினால் தூண்டப்படும் தட்பவெப்ப நிலை மாற்றம் என்பதைப் பற்றியதான கருத்தாக்கங்கள் பல வருடங்களாக விவாதிக்கப்பட்டு வருகின்றன. தற்போது, உலகார்ந்த சராசரி வெப்ப நிலையில் கடந்த பல வருடங்களாக மிக விரைவாக, ஏற்பட்டு வரும் அதிகரிப்பிற்கு மனித நடவடிக்கைகளே பெரும்பான்மையான காரணமாக இருக்கக்கூடும் என்பதான தட்பவெப்ப நிலையின் மீதான அறிவியல் கருத்தொருமிப்பு (en:Scientific opinion on climate change) உருவாகியுள்ளது.[25] இதையடுத்து, மனித ஆதிக்கத்தால் மேலும் பாதிப்புக்கள் விளையாது குறைப்பதற்கான வழிகள் மற்றும், இதுவரையிலும் ஏற்பட்டு விட்ட பாதிப்பிற்குத் தகுந்தவாறு ஒத்துப் போவது ஆகியவற்றைப் பற்றியதாக விவாதம் பெரிதும் இடம் பெயர்ந்து விட்டது. எடுத்துக் காட்டிற்குக் காண்க: மாசு வெளிப்பாடு வர்த்தகம், அதிக பட்சமும் பங்கும், தனிப்பட்ட கரியமில வர்த்தகம், யுஎன்எஃப்சிசிசி பரணிடப்பட்டது 2018-02-01 at the வந்தவழி இயந்திரம்
மனித நடவடிக்கையின் விளைவான தட்பவெப்ப நிலை மாற்றங்களில் மிகவும் அதிக அளவில் கவலை அளிப்பதாக உள்ளது, தொல்லுயிர் எச்ச எரிபொருள் வெளிப்பாடுகள், மற்றும் அதைத் தொடர்ந்த தூசுப்படலம் (வளிமண்டலத்தில் உள்ள பருப்பொருள்) மற்றும் பசைமண் உற்பத்தி ஆகியவற்றால் அதிகரித்து வரும் கரியமிலவாயு(சிஓ2)வின் அளவுகள்தாம். நிலப் பயன்பாடு, வளிமண்டலத்தில் உயிர்வாயுக் குறைவு, விலங்கு வேளாண்மை[26] மற்றும் காடுகளின் அழிப்பு போன்ற இதர காரணிகளும் - அவை தனியாகவும் மற்றும் வேறு காரணிகளுடன் இணைந்தும்- அவை, தட்பவெப்ப நிலையைப் பாதிப்பதனாலும், மைக்ரோக்ளைமேட் எனப்படும் பகுதி சார்ந்த தட்ப வெப்ப நிலை பாதிப்பு மற்றும் தட்ப வெப்ப நிலை மாறுபாடுகளின் அளவீடுகள் ஆகியவற்றில் உண்டாகும் பாதிப்பிற்காகவும் கவலை ஏற்படுத்துவனவே.
தட்ப வெப்ப நிலை மாற்றத்திற்கான ஆதாரங்கள் பல தோற்றுவாய்களிலிருந்தும் திரட்டப்பட்டு, கடந்த காலத்தில் ஏற்பட்ட தட்பவெப்ப நிலை மாற்றங்களை மீள் உருவாக்கம் செய்யப் பயன்படுத்தப்படுகின்றன. ஓரளவு ஒப்புக் கொள்ளக்கூடிய அளவில், 1800களின் இடைப்பட்ட காலம் துவங்கி புவியின் மேற்பரப்பு வெப்ப நிலை பற்றியதான உலகார்ந்த பதிவுகள் கிடைக்கப் பெறுகின்றன. இதற்கு முந்தைய கால கட்டங்களுக்கான ஆதாரங்கள், மிகுந்த அளவில், தட்பவெப்ப நிலையை மறைமுகமாகப் பிரதிபலிக்கும் சுட்டிக்காட்டுதல்கள், உதாரணமாகத் தாவரம், பல நூற்றாண்டுப் பனியுறைவின் காரணமான பனிக்கட்டி[27], தட்ப வெப்ப நிலை மாற்றங்களின் ஆய்வியல், கடலளவு மாறுபடுதல் மற்றும் பனியாறு நிலவியல் ஆகியவை போன்ற பதிலாண்மைகளின் மாற்றங்கள் மூலமாகவே பெறப்படுகின்றன.
அண்மைக் காலத்தில் தட்பவெப்ப நிலையில் ஏற்பட்டுள்ள மாறுதல்களை, அவற்றிற்கு இசைவான முறையில் மாறுதல்களுக்கு உள்ளாகியுள்ள குடியேற்றம் மற்றும் வேளாண்மை ஆகியவற்றைக் கொண்டு அறிந்து கொள்ளலாம்.[28] தொல் பொருளாராய்ச்சி ஆதாரங்கள், வாய்மொழி வரலாறு மற்றும் வரலாற்று ஆவணங்கள் ஆகியவை, தட்பவெப்ப நிலையில் கடந்த காலத்தில் ஏற்பட்ட மாறுதல்களின் மீது ஒளிபாய்ச்சக்கூடும். தட்பவெப்ப நிலை மாற்றங்களின் விளைவுகள், பல நாகரிகங்கள் அழிந்துபட்டதுடன் தொடர்புறுத்தப்படுகின்றன.[29]
தட்பவெப்ப நிலை மாறுதல்களுக்கு[30] மிகுந்த அளவில் உணர் திறன் கொண்ட சுட்டுதல்களில் ஒன்றாகப் பனியாறுகள் கருதப்படுகின்றன; தட்பவெப்ப நிலை குளிர்வடையும்போது (உதாரணமாக, சிறு பனிக்காலம் என்று அறியப்படும் கால கட்டததைப் போல) இவை முன்னேறுகின்றன மற்றும் அது வெப்பமடையும்போது பின்னோக்கிச் செலிகின்றன. இயற்கையாக விளையும் மாறுபடுதன்மை மற்றும் வெளியிலிருந்து வலிய உள்ளிடப்படும் மாறுதல்களைப் பன்மடங்காகிக் காட்டுவது ஆகிய இரண்டிற்குமே, பனியாறுகளின் இவ்வாறான வளர்ச்சியும், குறுக்கமும் பங்களிக்கிப்பதாக உள்ளன.
1970கள் துவங்கி உலகம் முழுமைக்குமான பனியாறுகளின் இருப்புப் பட்டியல் ஒன்று தொகுக்கப்பட்டுள்ளது. ஆரம்ப கட்டத்தில் பெரும்பாலும், வான்வழி எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வரை படங்களின் அடிப்படையிலேயே தொகுக்கப்பட்ட இது, தற்போது 240,000 கிமீ2 பரப்பளவில் உள்ள 100,000க்கும் மேலான பனியாறுகளின் விபரமான இருப்புப் பட்டியலாக விளைந்துள்ளது; ஆரம்பகட்ட கணிப்புக்களின்படி, 445,000 கிமீ2 பரப்பளவில் உள்ள பனியாறுகள் இன்னமும் கணக்கிடப்பட வேண்டியுள்ளன. பனியாற்றுப் பின்னடைவு மற்றும் பனியாறுகளின் மொத்தப் பரப்பளவு மீதம் ஆகியவை பற்றிய தரவுகளை ஒவ்வொரு வருடமும் உலகப் பனியாறு கண்காணிப்பு சேவை என்னும் நிறுவனம் திரட்டுகிறது. இந்தத் தரவுகளிலிருந்து, உலகெங்கும் உள்ள பனியாறுகள் குறிப்பிடத் தக்க அளவில் குறுகுவது அறியப்பட்டுள்ளது. இவற்றில் 1940களில் பனியாறுகளின் பின்னடைவுகள் மிகவும் வலியதாகவும், 1920கள் மற்றும் 1970கள் ஆகிய கால கட்டங்களில் நிலையான அல்லது வளரும் நிலைகளில் பனியாறுகள் இருந்ததாகவும், பின்னர் 1980களிலும், தற்காலத்திலும் மீண்டும் பின்னடைவு கொண்டுள்ளதாகவும் காணப்படுகிறது.[31] மொத்தப் பரப்பளவு மீதத் தரவு என்பதானது, தொடர்ந்து 17 வருடங்களுக்குப் பனியாறு மொத்த பரப்பளவு மீதத்தின் மறிநிலை எண்ணைக் கொண்டுள்ளது.
பனிப்பாளம் உருவாதல் மற்றும் இடைப்பட்ட பனிப்பாள சுழற்சிகள் ஆகியவை, (ஏறத்தாழ மூன்று மில்லியன் வருடங்களுக்கு முன்னதான) பிலியோசின் காலத்தின் இடை நிலையிலிருந்து அதன் பிற்காலங்கள் வரை ஏற்பட்ட மிகவும் குறிப்பிடத் தக்க தட்ப வெப்ப நிலைச் செயற்பாடுகள் ஆகும். தற்போதுள்ள பனிப்பாள இடைக்காலமான (ஹொலொசின்) சுமார் 11,700 ஆண்டுகளாக நீடித்து வந்துள்ளது.[32] கோள் பாதை மாறுபாடுகளினால் உருவாக்கப்பட்ட குறிப்பிடத் தக்க அளவிலான கடல் அளவு மாற்றங்கள், கண்டங்களின் பனிப்பரப்புகள் ஏறுவது மற்றும் குறைவது போன்ற பதிலிறுப்புகள் ஆகியவை தட்பவெப்ப நிலையை உருவாக்க உதவின. இருப்பினும், ஹென்ரிச் நிகழ்வு, டான்ஸ்கார்ட் ஓயெஸ்கர் நிகழ்வு மற்றும் யங்கர் ட்ரையாஸ் ஆகியவற்றை உள்ளிட்ட பிற மாற்றங்கள், அழுத்த விளைவு மற்றும் கோள்பாதை மாற்றங்கள்போல எவற்றின் பாதிப்பும் இல்லாதபோதும், பனிப்பாள மாற்றங்கள் எவ்வாறு தட்பவெப்ப நிலையைப் பாதிக்கக்கூடும் என்பதை விளக்கிக் காட்டுகின்றன.
பனியாறுகள் பின்னடையும்போது மொரைன் என்னும் மண்ணும் கற்களும் நிரம்பிய குவியலை விடுத்துச் செல்கின்றன; இவற்றிலிருந்து, பொக்கிஷத்திற்கு ஈடான - மிகச் சரியாகத் தேதியிடப்படக்கூடிய கனிமம் உள்ளிட்ட- உயிர்ப்பொருட்கூறுகள் கிடைக்கப் பெறுகின்றன. இவற்றிலிருந்து அந்தப் பனியாறு முன்னேறிய மற்றும் பின்னடைந்த கால கட்டங்களைப் பதிவு செய்ய முடிகிறது. இதைப் போன்றே, டெஃப்ரொனாலஜி எனப்படும், எரிமலைச் சாம்பலிலிருந்து கால கட்டத்தைக் கணிக்கும் உத்திகள் கொண்டு, மண்ணின் இருப்பிலிருந்து பனியாறுப் போர்வை இல்லாதிருப்பதைக் கண்டறிய முடியும் அல்லது எரிமலை விளிம்புச் சாம்பல் வண்டல்கள் கொண்டு அவற்றின் மிகச் சரியான காலகட்டத்தையும் அறிந்து கொள்ள முடியும்.
தட்பவெப்ப நிலையில் ஏற்படும் குறிப்பிட்ட மாற்றத்தினால், தாவரங்களின் வகைகள், அவற்றின் விநியோகம் மற்றும் அவை விளையக்கூடிய இடங்கள் ஆகியவற்றிலும் மாறுபாடுகள் உருவாகின்றன; இது மிகவும் வெளிப்படையாகத் தெரிவதாகும். எந்த ஒரு குறிப்பிட்ட சூழலிலும், தட்பவெப்ப நிலையில் மிக லேசான அளவில் ஏற்படும் மாற்றமும், திடீர்க் குளிர்வின் காரணமான மழை மற்றும் வெப்பமாதல் போன்றவற்றின் அதிகரிப்பில் விளைந்து, மேம்பாடான தாவர விளைச்சலையும் மற்றும் அதனைத் தொடர்ந்து காற்று வெளியிடை உள்ள கரியமிலவாயு (CO2) கைப்பற்றப்படுவதையும் விளைவிக்கலாம். இதைவிடப் பெரும் அளவிலான, விரைவான மற்றும் அடிப்படையான மாற்றங்கள் தாவர அழுத்தம், விரைவான தாவர இழப்பு மற்றும் சில சூழ்நிலைகளில் நிலம் வறண்டு தரிசாகிப் போதல் ஆகியவற்றை விளைவிக்கலாம்.[33]
அண்டார்டிக் பனிப்போர்வை போன்று பனிப்போர்வைகளிலிருந்து துளையிட்டு எடுக்கப்பட்ட பனிக்கட்டியின் பகுப்பாய்வானது, வெப்ப நிலை மற்றும் உலகார்ந்த கடல் அளவு மாறுபாடுகள் ஆகியவற்றிற்கு இடையிலான தொடர்பினைக் காட்டுவதற்குப் பயன்படுத்தப்படலாம். பனிக் குமிழிகளில் சிறை பிடிக்கப்பட்ட காற்றும், நவீன காலத்தின் சுற்றுச் சூழல் ஆதிக்கங்கள் உருவாவதற்கு வெகுமுன்னரே, வளி மண்டலத்தில் உண்டான கரியமிலவாயுவின் (CO2) மாறுபாடுகளை வெளிப்படுத்தலாம்.
பனிக்கட்டிகள் பற்றிய இத்தகைய ஆய்வுகள், பல மில்லியன் வருடங்களுக்கான கரியமிலவாயு (CO2) பற்றிய மிக முக்கியமான சுட்டிக்காட்டிகளாக விளங்குகின்றன; மேலும், புராதன மற்றும் நவீன வளிமண்டல நிலைகளுக்கு இடையில் உள்ள வேறுபாடுகளைப் பற்றி மதிப்பு மிகுந்த தகவல்களைத் தொடர்ந்து அளித்தும் வருகின்றன.
மர - காலநிலை ஆய்வியல் என்பதானது மரங்களில் காணப்படும் மரவளையங்களின் வடிவமைப்புக்களின் மீது நடத்தப்படும் பகுப்பாய்வினால் கடந்த காலத்தில் நிகழ்ந்த தட்பவெப்ப நிலை மாற்றங்களை அறியும் இயலாகும். மரங்களின் மீது உள்ள அகன்ற மற்றும் பருமனான வளையங்கள், செழுமையான, சிறந்த முறையில் நீரிடப்பட்ட வளர்ச்சிக் காலத்தைக் குறிக்கின்றன; மெல்லிய, குறுகலான வளையங்கள் மழை நீர் குறைந்திருந்த காலம் மற்றும், உகந்த நிலைக்குக் கீழான வளர்ச்சிக் காலம் ஆகியவற்றைக் குறிக்கின்றன.
பாலினோலாஜி என்பதானது, தற்காலத்திய மற்றும் மகரந்தம் உள்ளிட்ட உயிர் எச்சங்களின் பாலினோமோர்ஃப் எனப்படும் 5 முதல் 500 மைக்ரோமீட்டர் வரையிலான பருப்பொருள் ஆய்வாகும்.
பாலினோலாஜி இயலானது வேறுபட்ட தட்பவெப்ப நிலையின் கீழ் வளரும் பல்வேறு தாவர இனங்கள், நிலவியலில் விநியோகிக்கப்படும் முறைமைபற்றி அனுமானிக்கிறது. பல்வேறு தாவரக் குழுமங்களும் குறிப்பிடத் தக்க உருவம் மற்றும் மேற்பரப்பு கட்டமைப்பைக் கொண்ட மகரந்தம் பெற்றுள்ளன. மகரந்தத்தின் மேற்பரப்பு மிகுந்த அளவில் தொய்திறனுடைய பொருளால் அமைக்கப்பட்டுள்ளமையால், இது சிதைவை எதிர்க்கும் வல்லமை கொண்டுள்ளது. ஏரிகள், சதுப்பு நிலங்கள் அல்லது ஆற்றின் கழிமுகப் பிரதேசங்களென வேறுபட்ட வண்டலளவு கொண்டுள்ள பகுதிகளில் காணப்படும் மகரந்த வகைகளில் அறியப்படும் மாற்றங்கள், தட்பவெப்ப நிலைகளைச் சார்ந்துள்ள தாவர இனங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைச் சுட்டிக் காட்டுகின்றன.[34][35]
தூய நீர் மற்றும் நில வண்டல் ஆகியவற்றில் வண்டுகளின் எச்சங்கள் காணப்படுவது பொதுவான நிகழ்வு. பல்வேறு தட்பவெப்ப நிலைகளிலும், பல வகையான இன வண்டுகள் காணப்படுகின்றன. பல மில்லியன் வருட காலங்களாகக் குறிப்பிடத் தக்க அளவில் மாற்றம் அடையாத மரபியல் கொண்டுள்ள வண்டுகளின் பரந்தகன்ற மரபு வழி கொண்டு, தற்போது வெவ்வேறு இனங்களும் தாங்கக்கூடிய தட்பவெப்ப நிலை மாற்றங்களின் விஸ்தீரணம், மற்றும் எச்சங்கள் காணப்படும் வண்டல்களின் வயது, கடந்த காலத்திய தட்பவெப்ப நிலைகள் ஆகியவற்றை அனுமானிக்க இயலும்.[36]
கடந்த நூற்றாண்டின் பெரும்பகுதியில் உலகார்ந்த அளவில் நிகழ்ந்துள்ள கடல் அளவு மாறுபாடுகள், அலை நுண்ணளவுகோல் கொண்டு நீண்ட கால கட்டங்களில் பொதுவாகக் கணிக்கப்பட்டுள்ளன; இதனால் ஒரு நீண்ட காலத்திற்கான சராசரி பெறப்படுகிறது. மேலும் அண்மையில், மிகத் துல்லியமாகச் செயற்கைக் கோள் பாதைகள் இணைப்புடன் மேற்கொள்ளப்பட்ட உயரமானி அளவீடுகள் உலகார்ந்த கடல் அளவு மாற்றத்தின் மேம்படுத்தப்பட்ட அளவீட்டை அளித்துள்ளன.[37]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.