கார்பன் நான்கையோடைடு
From Wikipedia, the free encyclopedia
கார்பன் நான்கையோடைடு (Carbon tetraiodide) என்பது CI4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட நான்கு ஆலோ மீத்தேன் வகை வேதியியல் சேர்மமாகும். பிரகாசமான சிவப்பு நிறம் கொண்ட இச்சேர்மம் வண்ணமயமான மீத்தேன் வழிப்பொருட்களுக்கு சிறந்த உதாரணமாகக் கருதப்படுகிறது. இதர மீத்தேன் வழிப்பொருட்கள் மிகக்குறைவான எடைஅளவு கார்பனை பெற்றிருந்தாலும் இச்சேர்மம் சற்றுக் கூடுதலாக 2% கார்பனின் எடையைப் பெற்றுள்ளது.
![]() | |||
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
ஐயூபிஏசி பெயர்
நான்கையோடோமீத்தேன்[1] | |||
இனங்காட்டிகள் | |||
507-25-5 ![]() | |||
Beilstein Reference |
1733108 | ||
ChemSpider | 10055 ![]() | ||
EC number | 208-068-5 | ||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
பப்கெம் | 10487 | ||
வே.ந.வி.ப எண் | FG4960000 | ||
| |||
பண்புகள் | |||
CI4 | |||
வாய்ப்பாட்டு எடை | 519.63 g·mol−1 | ||
தோற்றம் | அடர் கருநீலப் படிகங்கள் | ||
அடர்த்தி | 4.32 கி மி.லி −1 | ||
கட்டமைப்பு | |||
படிக அமைப்பு | நான்முகம் | ||
மூலக்கூறு வடிவம் | |||
இருமுனைத் திருப்புமை (Dipole moment) | 0 D | ||
வெப்பவேதியியல் | |||
Std enthalpy of formation ΔfH |
384.0–400.4 கி.கி.யூ மோல்−1 | ||
Std enthalpy of combustion ΔcH |
−794.4–−778.4 கி.கி.யூ மோல்−1 | ||
வெப்பக் கொண்மை, C | 0.500 யூ கி−1 கி−1 | ||
தீங்குகள் | |||
GHS pictograms | ![]() | ||
GHS signal word | WARNING | ||
H315, H319, H335 | |||
P261, P305+351+338 | |||
ஈயூ வகைப்பாடு | ![]() | ||
R-சொற்றொடர்கள் | R36/37/38 | ||
S-சொற்றொடர்கள் | S26, S36 | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
இந்த நான்முகி மூலக்கூறின் தோற்றத்தில் 2.12 ± 0.02 Å.[2] என்ற இடைவெளி தொலைவுடன் C-I பிணைப்புகள் உள்ளன. குறுகிய அயோடின் – அயோடின் 3.459 ± 0.03 Å பிணைப்புகளால் இம்மூலக்கூறு சற்று நெரிசலாகக் காணப்படுகிறது. இதன்காரணமாகவே வெப்பத்திலும் ஒளியிலும் இச்சேர்மம் நிலைப்புத்தன்மை இன்றி காணப்பட வாய்ப்பு ஏற்படுகிறது. அனேகமாக இதே காரணத்தினாலேயே அறு அயோடோ ஈத்தேன் அறியப்படாமல் இருக்கலாம்.
கார்பன் நான்கையோடைடு நான்முக படிகவமைப்பில் (a 6.409, c 9.558 (.10−1 நானோ மீட்டர்)[3].படிகமாகிறது.
சமச்சீராக நான்முக மூலக்கூறுகள் பதிலீடு செய்யப்பட்டிருப்பதால் இருமுனைத் திருப்புத்திறன் இங்கு சுழியாக உள்ளது.