காராக்
மலேசியாவில் புகழ்பெற்ற காராக் நெடுஞ்சாலைக்கு காராக் நகரின் பெயர் வைக்கப்பட்டு உள்ளது. From Wikipedia, the free encyclopedia
மலேசியாவில் புகழ்பெற்ற காராக் நெடுஞ்சாலைக்கு காராக் நகரின் பெயர் வைக்கப்பட்டு உள்ளது. From Wikipedia, the free encyclopedia
காராக் என்பது (மலாய்: Karak; ஆங்கிலம்: Karak; சீனம்: 加叻) மலேசியா, பகாங் மாநிலத்தில், பெந்தோங் மாவட்டத்தில் அமைந்து உள்ள ஒரு நகரம். கோலாலம்பூர் மாநகரில் இருந்து குவாந்தான் நகருக்குச் செல்லும் கூட்டரசு நெடுஞ்சாலை -இல் ஓய்வு நகரமாக அறியப் படுகிறது.[1][2][3]
காராக் Karak Town Bandar Karak | |
---|---|
ஆள்கூறுகள்: 3°24′N 102°2′E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | பகாங் |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
அஞ்சல் குறியீடு | 28xxx |
தொலைபேசி | +6-09 (தரைவழித் தொடர்பு) |
வாகனப் பதிவெண்கள் | C |
இணையதளம் | www |
காராக் நகரம் மலேசியாவில் புகழ்பெற்ற காராக் நெடுஞ்சாலைக்கு காராக் நகரின் பெயர் வைக்கப்பட்டு உள்ளது. காராக் நெடுஞ்சாலை கோலாலம்பூர் மாநகரையும் காராக் நகரையும் இணைக்கிறது.
மலேசியாவின் பிரதான மலைத் தொடரான தித்திவாங்சா மலைத்தொடரின் அடிவாரத்தில் இந்த நகரம் அமைந்துள்ளது. இந்த இடம் பகாங் மாநிலத்திற்கு மட்டும் அல்ல; கிள்ளான் பள்ளத்தாக்கிற்கும் ஒரு முக்கியமான நீர்ப்பிடிப்பு பகுதியாகவும் விளங்குகிறது.
காராக் நெடுஞ்சாலையின் கிழக்கு முனையிலும் ; மற்றும் கிழக்கு கடற்கரை விரைவுச்சாலை -இன் தொடக்கமாகவும் காராக் நகரம் அமைகின்றது. பொதுவாகச் சொன்னால் தீபகற்ப மலேசியாவின் மேற்குக் கரையையும் கிழக்குக் கரையையும் இணைக்கும் ஒரு பாலமாக உருவகப் படுத்தலாம்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.