காராகும் பாலைவனம்
நடு ஆசியாவிலுள்ள ஒரு பாலைவனம் / From Wikipedia, the free encyclopedia
காராகும் பாலைவனம் (Karakum Desert), கருமணல் கொண்டதால் இப்பாலைவனத்திற்கு துருக்கி மொழியில் காரகும் பாலைவனம் எனப் பெயராயிற்று. நடு ஆசியா நாடான துருக்மெனிஸ்தானின் மொத்த பரப்பளவில் எழுபது விழுக்காடு (35,000 சதுர கிலோ மீட்டர்) பரப்பளவை காராகும் பாலைவனம் அடைத்துள்ளது.
இப்பாலைவனத்தில் மக்கள் தொகை அடர்த்தி 6.5 சதுர கிலோ மீட்டரில் ஒரு நபர் விகிதத்தில் உள்ளது. ஆண்டு சராசரி மழை அளவு 70 முதல் 150 மில்லி மீட்டராக உள்ளது.[1]