காமா (நகரம்)
From Wikipedia, the free encyclopedia
ஹமா அல்லது காமா அல்லது கமா(அரபு மொழி: حماة Ḥamāh [ħaˈmaː], ஆங்கில மொழி: Hama, Biblical Ḥamāth, "fortress") என்பது மேல் மத்திய சிரியாவில் உள்ள ஒரோண்டேசு நதியின் ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது திமிஷ்குவிற்கு வடக்காக 213 km (132 mi) தொலைவிலும் கோம்சிற்கு வடக்காக 46 கிலோமீட்டர்கள் (29 mi) தொலைவிலும் அமைந்துள்ளது. இது காமா பிரதேசத்தின் மாகாண தலைநகரமாகும். காமா 2009இன் மக்கள்தொகை மதிப்பீடின்படி 854,000 குடிகளைக் கொண்டுள்ளது. இது சிரியாவில் அலெப்போ, தமாசுகசு மற்றும் கோம்சுக்கு அடுத்த நான்காவது மிகப்பெரிய நகரமாகும்.[2][3]
காமா
حماة Hama | |
---|---|
நாடு | சிரியா |
பிரதேசம் | காமா |
மாவட்டம் | காமா |
துணை மாவட்டம் | காமா |
அரசு | |
• ஆளுநர் | அப்துல் ரசாக் அல்-குவாட்டைனி |
மக்கள்தொகை (2004இன் மக்கள்தொகை) | |
• மொத்தம் | 3,12,994[1] |
• இனங்கள் | சிரியாவாசிகள் |
• மதங்கள் | சுன்னி இசுலாம் Syriac Orthodox Christian Greek Orthodox Christian |
Area code | 33 |
இணையதளம் | www |
இந்நகரம் தோட்டத்திற்கு நீர்ப்பாசனம் செய்யப் பயன்படுத்தும் அதன் பதினேழு நோரியாக்களுக்காக புகழ்பெற்றது. இந்த நோரியாக்கள் கி.மு. 1100இற்கு முன்னரே கட்டப்பட்டதாகும்.
கடந்த தசாப்தங்களில், காமா நகரம் பாத்திசம் எதிர்ப்பை எதிர்ப்பதின் மையமாக அழைக்கப்பட்டுவந்தது. மிக குறிப்பாக முசுலீம் சகோதரத்துவத்தில் முக்கிய பங்காற்றியது. 1964ன் இசுலாமிய எழுச்சியின் தொடக்கத்தில் சிரிய இராணுவத்தால் இந்நகரம் சோதனையிடப்பட்டது, மற்றும் ஏப்பிரல் 1981, குறிப்பாக 1982இலும் சிரியாவின் இசுலாமிய எழுச்சியின் போது படுகொலை நடந்த இடமாகவும் காமா நகரம் கருதிக்கொள்ளப்படுகிறது. இப் படுகொலையில் கிட்டத் தட்ட 25,000 மக்கள் கொல்லப்பட்டனர். இப் படுகொலை காமா படுகொலை என வர்ணிக்கப்படுகிறது. மறுதடவை இந்நகரம் மோதல் தளமாக மாறியது சிரிய இராணுவம் மற்றும் எதிர்ப்பு படைகளின் மோதலின் போதாகும். காமா நகரம் 2011 மற்றும் 2012 நடைபெற்ற சிரிய உள்நாட்டுப் போரின் முக்கிய போர்க் களங்களில் ஒன்றாக விளங்கியது.