![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/dc/Kamakhya_Temple%252C_Guwahati.jpg/640px-Kamakhya_Temple%252C_Guwahati.jpg&w=640&q=50)
காமாக்யா கோவில்
From Wikipedia, the free encyclopedia
காமாக்கியா கோவில் (Kamakhya Temple, அசாமிய மொழி: কামাখ্যা মন্দিৰ) காமாக்கியா என்ற இந்துக் கடவுளின் கோவில் ஆகும். இது 51 சக்தி பீடங்களில் ஒன்றாகும்.[2] இந்தியாவில் அசாம் மாநிலத்தில் குவகாத்தி நகரின் மேற்குப் பகுதியில் நீலாச்சல் குன்றில் அமைந்துள்ளது. இங்குள்ள பத்து தச மகா வித்யா தேவிகளின் கோவில்கள் அடங்கிய தொகுதியில் காமாக்கியா பிரதான கோவிலாகும்.[3] இவற்றில் திரிபுரசுந்தரி, மாதங்கி, கமலா தேவியரின் கோவில்கள் காமாக்கியா கோவிலினுள் அமைந்துள்ளன. ஏனைய ஏழும் தனித்தனிக் கோவில்களாக அமைக்கப்பட்டுள்ளன.[4]
காமாக்கியா கோவில் Kamakhya Temple | |
---|---|
![]() காமாக்கியா கோவில் | |
ஆள்கூறுகள்: | 26.166426°N 91.705509°E / 26.166426; 91.705509 |
பெயர் | |
பெயர்: | காமாக்யா கோவில் |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | அசாம் |
மாவட்டம்: | காம்ரூப் |
அமைவு: | நீலாச்சல் குன்று, குவகாத்தி |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | காமாக்யா |
சிறப்பு திருவிழாக்கள்: | அம்புபாச்சி மேளா |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | நீலாச்சல் வகை |
கோயில்களின் எண்ணிக்கை: | 6 |
நினைவுச்சின்னங்களின் எண்ணிக்கை: | 6 |
வரலாறு | |
கட்டப்பட்ட நாள்: | 8ம்-7ம் நூற்றாண்டு[1] |
அமைத்தவர்: | பலர் |
அஸ்ஸாம் தலைநகர் கவுகாத்தியிலிருந்து 12 கி.மீ. தொலைவில் நீலாச்சல் என்ற மலை அமைந்திருக்கிறது. கடல் மட்டத்திலிருந்து 700 அடி உயரத்தில் இந்த மலை மீது காமாக்யாதேவியின் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் உயிர்ப்பலி கொடுக்கும் வழக்கம் பின்பற்றப்படுகிறது. இது தாட்சாயிணியின் (சதி தேவி) யோனி விழுந்த சக்தி பீடமாகப் போற்றப்படுகிறது. [5] பரணிடப்பட்டது 2020-04-26 at the வந்தவழி இயந்திரம்
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/c6/Kamakhya.jpg/320px-Kamakhya.jpg)