கான்ராட் சங்மா
இந்திய அரசியல்வாதி / From Wikipedia, the free encyclopedia
கான்ராட் சங்மா (Conrad Sangma, பிறப்பு:27 சனவரி 1978) ஓர் இந்திய அரசியல்வாதியும், மேகாலயாவின் தற்போதைய முதலமைச்சரும் ஆவார்.[1]. இவர் முன்னாள் மக்களவை தலைவர் பி.ஏ.சங்மாவின் மகன் ஆவார். இவர் தேசிய மக்கள் கட்சியின் தேசிய தலைவர் ஆவார். இவர் 2018 முதல் 2019 வரை துரா மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவைக்கு தேசிய மக்கள் கட்சி சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3][4].
விரைவான உண்மைகள் கான்ராட் சங்மா, முதலமைச்சர் மேகாலயா ...
கான்ராட் சங்மா | |
---|---|
முதலமைச்சர் மேகாலயா | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2018 மார்ச் 6 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 27 சனவரி 1978 (1978-01-27) (அகவை 46) துரா, மேகாலயா, இந்தியா |
அரசியல் கட்சி | தேசிய மக்கள் கட்சி |
துணைவர் | மெகதாப் |
பிள்ளைகள் | 2 |
பெற்றோர் | பி. ஏ. சங்மா |
வாழிடம்(s) | துரா, மேகாலயா,இந்தியா |
வேலை | அரசியல்வாதி |
மூடு
2023 மேகாலயா சட்டமன்றத் தேர்தலில்[5] கான்ராட் சங்மா தலைமையிலான தேசிய மக்கள் கட்சி பெரும்பான்மை தொகுதிகளை கைப்பற்றியதும், 7 மார்ச் 2023 அன்று முதலமைச்சராக பதவி ஏற்றார்.[6]