காந்தர்பல்
From Wikipedia, the free encyclopedia
காந்தர்பல் (Ganderbal) இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் (ஒன்றியப் பகுதி)யில் உள்ள வடக்கு காஷ்மீர் பள்ளத்தாக்கில் அமைந்த காந்தர்பல் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், நகராட்சியும் ஆகும். இந்நகரம் கடல் மட்டத்திலிருந்து 1,619 மீட்டர் (5,312 அடி) உயரத்தில் இமயமலையில் உள்ளது. காந்தர்பல் மாவட்டத்தின் தெற்கில் சிறீநகர மாவட்டம், வடக்கில் பந்திபோரா மாவட்டம், வடகிழக்கில் கார்கில் மாவட்டம், தென்கிழக்கில் அனந்தநாக் மாவட்டம் மற்றும் தென்மேற்கில் பாரமுல்லா மாவட்டம் எல்லைகளாகக் கொண்டது.
விரைவான உண்மைகள் காந்தர்பல், நாடு ...
காந்தர்பல் | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 34.23°N 74.78°E / 34.23; 74.78 | |
நாடு | ![]() |
ஒன்றியப் பகுதி | ஜம்மு காஷ்மீர் (ஒன்றியப் பகுதி) |
மாவட்டம் | காந்தர்பல் |
ஏற்றம் | 1,619 m (5,312 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 2,97,446 |
மொழிகள் | |
• அலுவல் மொழி | உருது |
• பேச்சு மொழி | காஷ்மீரி மொழி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
வாகனப் பதிவு | JK16 |
இணையதளம் | ganderbal |
மூடு