Remove ads

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Lithobates|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}

விரைவான உண்மைகள் காட்டுத்தவளை, காப்பு நிலை ...
காட்டுத்தவளை
Thumb
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Lithobates
இனம்:
வார்ப்புரு:Taxonomy/LithobatesL. sylvaticus
இருசொற் பெயரீடு
Lithobates sylvaticus
(LeConte, 1825)
Thumb
காட்டுத்தவளை வாழும் பகுதி
வேறு பெயர்கள்

Ranas sylvaticus LeConte, 1825

மூடு

காட்டுத்தவளை (wood frog, Lithobates sylvaticus or Rana sylvatica[2]) என்பது ஒரு தவளை இனமாகும். இது வட அமெரிக்காவின், பெரும்பகுதியில் பரவலாக தெற்கு ஆப்பலேச்சிய மலைத்தொடரின் தெற்குப் பகுதியில் இருந்த வடக்கு கரோலினா தாழ் நிலங்கள் வரையிலான வனப்பகுதிகளில் காணப்படுகின்றன. கடந்த நூற்றாண்டு உயிரிரலாளரகளின் கவனத்தை ஈர்த்ததாக இருந்துதது. காரணம் அளவுக்கு அதிகமான குளிரைத் தாங்கி மரணத்தை வெல்லும் இந்தத் தவளைகளின் ஆற்றல்தான் அது உயிரியல் அறிஞர்களின் கவனத்தை ஈர்ப்பதற்குக் காரணமாக அமைந்தது. காட்டுத்தவளை நியூயார்க் மாநிலத்தின் மாநில நீர்நிலவாழியாக அதிகாரபூர்வமாக அறிவிக்க முன்மொழியப்பட்டுள்ளது.[3]

Remove ads

விளக்கம்

Thumb

காட்டுத்தவளை 51 முதல் 70 mm (2.0 முதல் 2.8 அங்) நீளமுடையதாக இருக்கின்றன. பெண் தவளைகள் ஆண் தவளைகளைவிட பெரியதாக உள்ளன. வளர்ந்த காட்டுத்தவளைகள், பொதுவாக பழுப்பு, அல்லது துரு நிறத்தவையாக உள்ளன. இதன் கண்பகுதியைச் சுற்றி கரிய நிற அடையாளம் கொண்டிருக்கும். இத்தவளைகளின் அடிப்பகுதி மஞ்சள் அல்லது பச்சை நிறமுடையவையாக இருக்கும். காட்டுத்தவளைகள் காடு வாழ்பிராணியாகும். இவை தேங்கி நிற்கும் நீர் நிலைகளில் குஞ்சு பொரிக்கின்றன. இதனால் இவற்றுக்கு குளம், குட்டை போன்ற பெரிய நீர் நிலைகள் தேவையில்லை. சதுப்பு நிலங்கள், சிறிய நீர்க்குட்டைகள் போன்ற நீர் நிலைகளில் மரத்தவளைகள் குஞ்சு பொரித்து இனப்பெருக்கம் செய்கின்றன. காடுகளில் இருக்கக்கூடிய சிறுசிறு பூச்சிகள்தான் காட்டுத்தவளைகளின் உணவு. குட்டித் தவளைகள் பாசிகளை உணவாகக் கொள்கின்றன. கோடைக்காலத்தில் பெரிய காட்டுத்தவளைகள் வெப்பத்தைத் தாக்குப் பிடிப்பதற்காக நல்ல ஈரப்பதமுள்ள இடத்துக்கு இடம் பெயர்ந்து, காடுகளில் இருக்கக்கூடிய சேற்று நிலங்கள், நீர் தேங்கிய பள்ளங்கள் ஆகிய இடங்களைத் தஞ்சம் அடைகின்றன.

Remove ads

தகவமைப்பு

வட அமெரிக்காவில் குளிர்காலத்தில் குளிர் கடுமையாக இருக்கும் வெப்ப நிலை உறைநிலைக்குச் சென்றுவிடும் இந்த குளிரிலிருந்த காட்டுத்தவளைகள் தங்களுடைய குருதி உறைவதையும், திசுக்கள் சுருங்குவதையும் தாங்கிக் கொள்ளக்கூடிய தகவமைப்பைப் பெற்றிருக்கின்றன. கடும் குளிரைத் தாங்கிக் கொள்ளக்கூடிய அளவுக்கு அவற்றின் திசுக்கள் செயலாற்றுகின்றன. குளிர்காலம் தொடங்கும்போது, தவளையின் கல்லீரலில் இருக்கக்கூடிய கிளைக்கோஜன், மிகுதியான அளவில் குளூக்கோசாக மாற்றப்படுகிறது. இந்தக் குளூக்கோசுடன் தவளையின் திசுக்களில் உள்ள யூரியாவும் சேர்ந்து கிரையோபுரொட்டக்டன்ஸ என்ற பொருளாக மாறிவிடுகிறது. இந்தக் கிரையோபுரொட்டக்டன்ஸ் என்ற பொருள் அதன் செல்கள் குளிரால் சுருங்கிடாதவண்ணம் பாதுகாப்பு அளிக்கிறது. குளிர் காலத்தில் காட்டுத்தவளையின் உடம்பில் உள்ள நீர் 65 சதவீதம் உறைந்து விடும். இதயத் துடிப்பும் நின்றுவிடும். இந்த நிலையில் இந்தத் தவளைகள் பனிப்படர்வுக்குக் கீழ் உறைந்து குளிர்கால உறக்கம் கொள்கின்றன. குளிர் காலம் முடிந்து கோடைக் காலம் தொடங்கும்போது, தவளைகள் கண் விழிக்கின்றன.[4]

Remove ads

மேற்கோள்கள்

Remove ads

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.

Remove ads