From Wikipedia, the free encyclopedia
களரிவாத்துக்கல் பகவதி கோயில், இந்தியாவின் கேரள மாநிலத்தில் வளப்பட்டணம் ஆற்றுக்கு அருகில் அமைந்துள்ள பத்ரகாளி சன்னதி ஆகும். இது சிரக்கல் அரச குடும்பத்தின் குடும்பக் கோயிலாகும். கோயிலின் மூலவர்உக்கிர வடிவ பத்ரகாளி ஆவார். பழங்கால தற்காப்புக் கலையான களரிப்பாயத்தின் தாயாகக் கருதப்படுபவர் களரிவாத்துக்கல் பகவதி ஆவார். இக்கோயில் மலபார் தேவஸ்வம் வாரியத்தால் நிர்வகிக்கப்படுகிறது. [1] இது வாரியத்தின் A கோயிலாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. களரி வாட்டில்கல் என்ற சொல்லில் இருந்து களரிவாத்துக்கல் வந்துள்ளது. [1]
இந்த புனிதக் கோயிலானது பழைய சிரக்கல் இராச்சியத்தின் மூன்று தேவி கோயில்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. மற்றவைசெருக்குன்னு அன்னபூர்ணேசுவரி கோயில், திருவற்காடு பகவதி கோயில் (மாடைக்காவு) என்பனவாகும். அன்னபூர்ணேசுவரி தன் துணைவிகளான களறிவடுக்கலம்மா, மாடைக்காவிளம்மையுடன் காசியிலிருந்து சிரக்கல் வரை கிருஷ்ணர் கோயிலைப் பார்த்துவிட்டு வருவதற்காக படகில் வந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. ஆனால் அவர்கள் திரும்பவில்லை.
கோலத்திரிகள் தம் தலைநகரை எழிமலையிலிருந்து வலப்பட்டணம் ஆற்றுக்கு அருகில் உள்ள சிரக்கலுக்கு மாற்றினர். அதன் காரணமாக அவர்கள் சிரக்கல் ராஜா என்றும் அழைக்கப்பட்டனர். வரலாற்றின் பண்டைய காலத்தில் அவர்கள் மூஷிக மன்னர்கள் என்று அழைக்கப்பட்டனர்.
ஒரு காலத்தில் வடக்கே இல்லத்திற்குச் சொந்தமாக இருந்த இக்கோயில், சிரக்கல் கோவிலகோம் என்பவரால் கையகப்படுத்தப்பட்டது.[2]
இந்தக் கோவில் பாரம்பரிய கேரள கட்டிடக்கலை பாணியில் அமைந்துள்ளது. இங்கு சிவன், சப்த மாத்ருக்கள், கணபதி, வீரபத்ரர், சேத்ரபாலகன் (பைரவர்) ஆகிய நால்வரும் நான்கு சன்னதிகளில் உள்ளனர். கௌல சக்தேய சம்பிரதாய அடிப்படையிலமைந்த ருருஜித் விதானம் உள்ளது. மூலவர்மேற்கு நோக்கி உள்ளார். சிவன் சன்னதி கிழக்கு நோக்கியும், சப்த மாத்ருக்கள் வடக்கு நோக்கியும், சேத்ரபாலகர் உள்ள சன்னதிகள் கிழக்கு நோக்கியும் உள்ளன. மாத்ருஷாலாவில் சப்தமாத்ருக்களான பிராமணி, வைஷ்ணவி, சங்கரி, கௌமாரி, வாராஹி, சாமுண்டி, இந்திராணி, வீரபத்திரர், கணபதி ஆகியோர் உள்ளனர். ஒவ்வொரு நாளும் காலை சடங்குகளுக்குப் பிறகு புனித வாள் மாத்ருசாலாவை ஒட்டிய மண்டபத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, சடங்கு நிறைவேறியபின், மாலையில் திரும்ப எடுத்துச் செல்லப்படுகிறது. முக்கிய சிலை கடுசர்கார யோகத்தால் ஆனதால் சடங்குகள் செய்வதற்குதேவியின் அர்ச்சனைக்கான சிலையே பயன்படுத்தப்படுகிறது.[2] ஆண்டு முழுவதும் கோயில் திறக்கப்பட்டு இருக்கும். கோயிலில் காலையில் உஷாக்கால பூசையும், மதியம் பந்தீரடி பூசையும்,[3] சக்தி பூஜையும் நடைபெறுகிறது.
தெய்யம் என்பது வட மலபாரில் உள்ள கோயில்கள் மற்றும் காவுகளில் நடத்தப்படும் ஒரு மத சடங்கு கலை வடிவமாகும். கோலத்திரியின் குலதெய்வமாக விளங்கும் இக்கோயில் வருடத்தின் கடைசி தெய்யத்தை நடத்துகிறது.[4]
இக்கோயிலில் இரண்டு முக்கிய திருவிழாக்கள் உள்ளன. பூரம் திருவிழா (மார்ச்-ஏப்ரல் மாதங்களில் 9 நாட்கள்) மலையாள நாட்காட்டி மாதமான மீனம் கார்த்திகை நட்சத்திரத்தில் தொடங்கி உத்திரம் நட்சத்திரத்தில் முடிவடைகிறது. 7ஆம் நாள் சிலையானது சிவேசுவரம் கோயிலுக்கு எடுத்துச்செல்லப்படும். 8ஆம் நாள் கடலை கிருஷ்ணர் கோயிலுக்கு எடுத்துச் செல்லப்படும். 9ஆம் நாள் வாணவேடிக்கையுடன் மீண்டும் திருப்பி எடுத்து வரப்படுகிறது. களரிப்பாயத்து நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்குகிறது.[2] தாயம்பக, பூரக்கலி போன்ற இசை, பாரம்பரியக் கலை நிகழ்ச்சிகள் அப்போது நடத்தப்படுகின்றன. ஜூன் மாதத்தில் மற்றொரு திருவிழாவான கலசம் ஒரு வருடத்தின் தேயம் காலத்தில் நிறைவடைகிறது. [5]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.