From Wikipedia, the free encyclopedia
கலீல் ஜிப்ரான் (Khalil Gibran, xaˈliːl ʒiˈbrɑːn) என்று அழைக்கப்பெற்ற ஜிப்ரான் கலீல் ஜிப்ரான்,[1] அரபு جبران خليل جبران , ஜனவரி 6, 1883 – ஏப்ரல் 10, 1931), ஒரு லெபனானிய, அமெரிக்க ஓவியர், கவிஞர் மற்றும் எழுத்தாளர் ஆவார். பஷ்றி நகரில் பிறந்து, சிறுவயதில் 1895 இல் அமெரிக்க ஐக்கிய நாட்டுக்கு அவரது தாய், சகோதரி, சகோதரன் ஆகியோருடன் குடிபெயர்ந்து, அங்கேயே கலை கற்று தன்னுடைய இலக்கியப் பணியை துவங்கினார்.
கலீல் ஜிப்ரான் | |
---|---|
பிறப்பு | ஜிப்ரான் கலீல் ஜிப்ரான் சனவரி 6, 1883 லெபனான் |
இறப்பு | ஏப்ரல் 10, 1931 48) நியூ யார்க் நகரம், அமெரிக்க ஐக்கிய நாடு | (அகவை
தொழில் | கவிஞர், ஓவியர், சிற்பி, எழுத்தாளர், தத்துவஞானி, இறையியல் |
தேசியம் | லெபனானிய-அமெரிக்கன் |
வகை | கவிதை, சிறுகதை |
இலக்கிய இயக்கம் | மஹ்ஜர், நியூயார்க் பென் லீக் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | த புரபெட் |
கையொப்பம் | |
லெபனானின் வடக்குப் பகுதியில் உள்ள பஷ்ரி நகரில் 1883 ஜனவரி 6-ல், மேரோனைட் கிறிஸ்தவக் குடும்பத்தில் பிறந்தவர் கலீல் ஜிப்ரான்.[2] அவரது தந்தை ஓட்டமான் பேரரசின் உள்ளூர் நிர்வாகத்தில் பணிபுரிந்தார். ஊழல் புகாரின்பேரில் 1891 இல் அவர் கைதுசெய்யப்பட்டார். இதனால் குடும்பத்தின் எதிர்காலம் கருதி தனது குழந்தைகளுடன் அமெரிக்காவில் குடியேறினார் கலீல் ஜிப்ரானின் தாய். பாஸ்டன் நகரில் அவரது குடும்பம் வசிக்கத் தொடங்கியது. 1895-லிருந்து கலீல் ஜிப்ரானின் கல்வி தொடங்கியது. ஓவியக் கல்வியும் பயின்றார்.[3]
1902 இல் மீண்டும் பாஸ்டன் திரும்பினார். அவரது ஓவியங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. 1904-ல் பாஸ்டனில் நடந்த ஓவியக் கண்காட்சியில், பெண்கள் பள்ளியின் தலைமையாசிரியை மேரி எலிசபெத் ஹாஸ்கெலைச் சந்தித்தார். தன்னைவிட 10 வயது மூத்தவரான ஹாஸ்கலுடனான அவருக்கு நட்பு ஏற்பட்டது. கலீல் ஜிப்ரானின் ஓவியம் மற்றும் எழுத்துத் திறமையை வளர்த்ததில் ஹாஸ்கலின் பங்கு மிக முக்கியமானது. 1905 முதல் அரபி மொழியில் எழுதிவந்த கலீல் ஜிப்ரான், ஆங்கிலத்திலும் எழுதினார். 1918-ல் அவர் எழுதிய ‘தி மேட்மேன்’ எனும் ஆங்கிலக் கவிதைகளின் தொகுப்பு வெளியானது.[3]
1923 இல் ஜிப்ரான் வெளியிட்ட ‘தீர்க்கதரிசி’ (தி ப்ராஃபெட்) எனும் தத்துவப் படைப்பு அவரது படைப்புகளில் மிகச் சிறந்ததாகக் கருதப்படுகிறது.
காசநோய் மற்றும் கல்லீரல் பாதிப்புகளால் 1931 ஏப்ரல் 10 இல் தனது 48 ஆவது வயதில் கலீல் ஜிப்ரான் மரணமடைந்தார்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.