கரோலின்ஸ்கா மையம்
மருத்துவப் பல்கலைக்கழகம் / From Wikipedia, the free encyclopedia
கரோலின்ஸ்கா மையம் (Karolinska Institutet) சுவீடன் நாட்டின் தலைநகரமான ஸ்டாக்ஹோமில் உள்ளது. இது ஐரோப்பாவில் உள்ள மிகப்பெரிய மருத்துவப் பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். 1810ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இந்நிறுவனமானது, உப்சாலா பல்கலைக்கழகம் (1477) மற்றும் லுண்ட் பல்கலைக்கழகத்தினை (1666) அடுத்து மூன்றாவதாக சுவீடனில் உருவாக்கப்பட்ட பழமையான மருத்துவ நிறுவனம் ஆகும். 2010ஆம் ஆண்டு, 200ஆம் ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாடியது. சோல்னா மற்றும் ஹுட்டிங்கேவில் உள்ள கரோலின்சுகா பல்கலைக்கழக மருத்துவமனையானது கரோலின்சுகா மையத்துடன் இணைந்த ஆய்வு மற்றும் கற்பித்தலை முதன்மையாகக் கொண்ட மருத்துவ வளாகம் ஆகும். சுவீடனில் நடக்கும் முப்பது சதவிகித (30%) மருத்துவப்பயிற்சியும், நாற்பது சதவிகித (40%) மருத்துவ ஆய்வும் இங்குதான் நடைபெறுகிறது[2]. இந்த ஆய்வு மையம் அமைக்கும் குழுமம், மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபெல் பரிசு பெற்றவர்களை தேர்ந்தெடுக்கிறது. உலக அளவில் கரோலின்சுகா நிறுவனம் பதினாறாவது சிறந்த மருத்துவப் பல்கலைக்கழகமாக உள்ளது[3].
Karolinska Institutet | |
குறிக்கோளுரை | Att förbättra människors hälsa (மனித உடல் நலத்தை மேம்படுத்துதல்) |
---|---|
வகை | மருத்துவ பல்கலைக்கழகம், (பொது) |
உருவாக்கம் | 1810 (1810) |
நிதிக் கொடை | 576,1 மில்லியன் யூரோ (2010) |
நிதிநிலை | 6.67 பில்லியன் குரோனார்[1] |
தலைமை ஆசிரியர் | உல்லே பீட்டர் ஓட்டர்சன் |
நிருவாகப் பணியாளர் | 4,820 (2016)[1] |
மாணவர்கள் | 5,973 (2016)[1] |
2,267 (2016)[1] | |
அமைவிடம் | சோல்னா , , 59°20′56″N 18°01′36″E |
வளாகம் | சோல்னா |
நிறங்கள் | |
இணையதளம் | www |