![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/d2/Kampar_highlighted_in_Perak%252C_Malaysia.svg/langta-640px-Kampar_highlighted_in_Perak%252C_Malaysia.svg.png&w=640&q=50)
கம்பார் மாவட்டம்
மலேசியாவின் பேராக் மாநிலத்தில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
கம்பார் மாவட்டம் (Daerah Kampar) என்பது மலேசியா, பேராக் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம் ஆகும். இந்த மாவட்டம் செரி இசுகந்தர் நகரத்தை மையமாகக் கொண்டது. பேராக் தெங்கா மாவட்ட மன்றத்தால் நிர்வகிக்கப் படுகிறது; இருப்பினும் பாரிட் நகரமே இந்தப் பகுதியில் மிகப் பெரிய குடியேற்ற இடமாகும்.
விரைவான உண்மைகள் கம்பா மாவட்டம்Daerah Kampa பேராக், நாடு ...
![]() கம்பார் மாவட்டம் அமைவிடம் பேராக் | |
ஆள்கூறுகள்: 4°20′N 101°15′E | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
தொகுதி | கம்பார் |
பெரிய நகரம் | பாரிட் |
நகராட்சி | கம்பார் மாவட்ட மன்றம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 669.80 km2 (258.61 sq mi) |
மக்கள்தொகை (2010) | |
• மொத்தம் | 97,167 |
• மதிப்பீடு (2015) | 1,03,600 |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
அஞ்சல் குறியீடு | 316xx - 319xx |
தொலைபேசி எண்கள் | +6-05 |
வாகனப் பதிவெண் | A |
மூடு
2009 மே மாதம் 21-ஆம் தேதி, பேராக் சுல்தான் கம்பார் மாவட்டத்தை மாநிலத்தின் 10-வது மாவட்டமாக அறிவித்தார். அதன் பின்னர் இது ஒரு மாவட்டத் தகுதியைப் பெற்றது. கம்பார் மாவட்டம் மாநிலத்தின் சிறிய மாவட்டமாகும். கம்பார் நகரத்தை மையமாகக் கொண்டு கம்பார் மாவட்ட மன்றம் இயங்கி வருகிறது.