கமிகுயின்
From Wikipedia, the free encyclopedia
கமிகுயின் (Camiguin) என்பது பிலிப்பீன்சின் லூசோனின், வடக்கு மின்டனவுப் பிராந்தியத்தில் அமைந்துள்ள ஐந்து மாகாணங்களில் ஒன்றாகும்.[1] இது 1965 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்டது.[2] தலைநகரம் மம்பஜாவோ ஆகும். இதன் தற்போதைய மாகாண சபை ஆளுநர் ஜூர்டின் ஜீசஸ் எம். ரொமுவல்டோ (Jurdin Jesus M. Romualdo) ஆவார். இதன் மொத்த நிலப்பரப்பளவு 237.95 சதுர கிலோமீற்றர்கள் ஆகும். 2015 ஆம் ஆண்டின் சனத்தொகைக் கணக்கெடுப்புக்கு அமைவாக கமிகுயின் மாகாணத்தின் சனத்தொகை 88,478 ஆகும்.[3] மேலும் பிலிப்பீன்சில் காணப்படும் 81 மாகாணங்களில், மொத்த நிலப்பரப்பளவின் அடிப்படையில் இம்மாகாணம் 80ஆம் மாகாணமாகவும் சனத்தொகையின் அடிப்படையில் 80ஆம் மாகாணமாகவும் காணப்படுகின்றது. இம்மாகாணத்தின் சனத்தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீற்றருக்கு 370மக்கள் என்பதாகும். மேலும் சனத்தொகை அடர்த்தியின் அடிப்படையில் இது 81 பிலிப்பீனிய மாகாணங்களில் 17ஆம் மாகாணம் ஆகும். அத்துடன் இம்மாகாணத்தில் பிலிப்பினோ ஆங்கிலம் உள்ளடங்கலாக ஐந்து பிரதான மொழிகள் பேசப்படுகின்றன. இம்மாகாணத்தில் 58 கிராமங்களும், 05 மாநகராட்சிகளும் உள்ளன.
கமிகுயின் | |
---|---|
மாகாணம் | |
நாடு | பிலிப்பீன்சு |
பிராந்தியம் | வடக்கு மின்டனவு |
நேர வலயம் | ஒசநே+8 (பிசீநே) |