![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/61/Gabriel_Garcia_Marquez_1984.jpg/640px-Gabriel_Garcia_Marquez_1984.jpg&w=640&q=50)
கபிரியேல் கார்சியா மார்க்கேஸ்
From Wikipedia, the free encyclopedia
கபிரியேல் கார்சியா மார்க்கேஸ் என அறியப்படும் கபிரியேல் ஜோஸ் டி லா கான்கோர்டியா கார்சியா மார்க்கேஸ் (/ɡɑːrˈsiːə ˈmɑːrkɛs/;[1] எசுப்பானிய ஒலிப்பு: [ɡaˈβɾjel ɣarˈsi.a ˈmarkes] ( கேட்க);[2] 6 March 1927 – 17 April 2014) - பிறப்பு: மார்ச் 6, 1927 இறப்பு:ஏப்ரல் 17,2014 ) கொலம்பியாவைச் சேர்ந்த ஒரு புதின எழுத்தாளரும், சிறுகதை எழுத்தாளரும், திரைக்கதை எழுத்தாளரும், பத்திரிகையாளரும் ஆவார். தனது சொந்த நாட்டில் "கபோ" என அழைக்கப்படும் இவர் 20 ஆம் நூற்றாண்டின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களுள் ஒருவராகக் கணிக்கப்படுகிறார். சட்டம் பயில்வதற்காகச் சட்டக் கல்லூரியில் சேர்ந்த இவர் பின்னர் அதிலிருந்து விலகிப் பத்திரிகையாளர் ஆனார். தொடக்கத்திலிருந்தே கொலம்பிய அல்லது வெளிநாட்டு அரசியலை விமர்சிப்பதற்கு இவர் பின்னின்றது இல்லை.[3]
1958 ஆம் ஆண்டில் மேர்செடெஸ் பார்ச்சா (Mercedes Barcha) என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ரொட்ரிகோ, கொன்சாலோ என இரு ஆண் பிள்ளைகள் உள்ளனர்.[4]
இவர் பத்திரிகையாளராகத் தொடங்கிப் பல பெயர் பெற்ற புனைகதையல்லாத ஆக்கங்களையும் சிறுகதைகளையும் எழுதியுள்ளார். ஆனாலும் இவர் எழுதிய புதினங்களுக்காகவே பெரிதும் அறியப்படுபவர். தனிமையின் நூறு ஆண்டுகள் (One Hundred Years of Solitude) - 1967, காலராக் காலக் காதல் (Love in the Time of Cholera) - 1985, போன்ற புதினங்கள் பெரிதும் புகழ் பெற்றவை. இவருடைய ஆக்கங்கள் திறனாய்வாளரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதுடன் பரவலான வணிக வெற்றிகளையும் பெற்றன.
கபிரியேல் கார்சியா மார்க்கேஸ் | |
---|---|
![]() கொலம்பியாவிலுள்ள வல்லெடுப்பார் என்னும் இடத்தில் கார்சியா மார்க்கேஸ் (c. 1984). | |
பிறப்பு | கபிரியேல் கார்சியா மார்க்கேஸ் மார்ச்சு 6, 1927 (1927-03-06) (அகவை 97) அராகட்டாக்கா, மக்தலேனா, கொலம்பியா |
தொழில் | புதின எழுத்தாளர், சிறுகதை எழுத்தாளர், பத்திரிகையாளர். |
தேசியம் | கொலம்பியர் |
குறிப்பிடத்தக்க விருதுகள் | இலக்கியத்துக்கான நோபல் பரிசு (1982) |
கையொப்பம் | |
![]() |
ஏப்ரல் 2014 இல் கார்சியா மார்க்கேஸ் மரணத்தின் போது இரங்கற் குறிப்பு வெளியிட்ட கொலம்பியாவின் ஜனாதிபதி ஜுவான் மானுவல் சாண்டோஸ் அவரை "இதுவரை வாழ்ந்த கொலம்பியர்களில் மிகச் சிறந்தவர்” என வருணித்தார்.[5]