கனோஜி ஆங்கரே
மராத்திய பேரரசின் கப்பற் படைத் தளபதி / From Wikipedia, the free encyclopedia
கனோஜி ஆங்கரே(Kanhoji Angre or Conajee Angria or Sarkhel Angre ; மராத்தி: कान्होजी आंग्रे,ஆகஸ்ட் 1669 – 4 ஜூலை 1729) 18 ஆம் நூற்றாண்டில் மராத்திய பேரரசின் கப்பற் படைத் தளபதியாகப் பதவி வகித்தார். இவர் பின்னாளில் மராத்தியக் கப்பற் படைத் தலைமைத் தளபதியாகப் பதவி வகித்ததால் 'சார்க்கெல் ஆங்கரே' (Sarkhel Angre) என்றும் அழைக்கப்பட்டார். இந்திய விடுதலைக்காக, காலனி ஆதிக்கத்தை எதிர்த்து இறுதி வரைப் போராடி, அவர்களுக்குப் பல சேதங்களை ஏற்படுத்தி, பாரதத்திற்கு வெற்றிகள் பல தேடித் தந்த தலைசிறந்த மாவீரர்.[1]
விரைவான உண்மைகள் கனோஜி ஆங்கரே, பிறப்பு ...
கனோஜி ஆங்கரே | |
---|---|
பிறப்பு | 1669 |
இறப்பு | 1729 சூலை 4 |
சார்பு | மராத்திய கடற்படை |
சேவைக்காலம் | 1698–1729 |
தரம் | தளபதி |
கட்டளை | கடற்படைத் தளபதி |
மூடு