From Wikipedia, the free encyclopedia
பகுதி கதிரவமறைப்பு (partial solar eclipse)1996, ஏப்ரல் 17, அன்று ஏற்பட்டது. புவிக்கும் சூரியனுக்கும் இடையில் நிலா செல்லும் போது கதிரவமறைப்பு ஏற்படுகிறது, இதனால், புவியில் உள்ள ஒரு பார்வையாளருக்கு சூரியன் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ மறைக்கப்படுகிறது. நிலாவின் நிழலின் மையம் புவியைத் தவறவிடும்போது புவிமுனைப் பகுதிகளில் ஒரு பகுதி கதிரவமறைப்பு ஏற்படுகிறது.
ஏப்ரல் 17, 1996-இல் நிகழ்ந்த கதிரவ மறைப்பு | |
---|---|
மறைப்பின் வகை | |
இயல்பு | பகுதி மறைப்பு |
காம்மா | -1.058 |
அளவு | 0.8799 |
அதியுயர் மறைப்பு | |
ஆள் கூறுகள் | 71.3°S 104°W |
நேரங்கள் (UTC) | |
பெரும் மறைப்பு | 22:38:12 |
மேற்கோள்கள் | |
சாரோசு | 148 (20 of 75) |
அட்டவணை # (SE5000) | 9499 |
இந்தக் கதிரவமறைப்பு ஓர் அரையாண்டுத் தொடரின் பகுதியாகும். ஓரரரையாண்டுத் தொடரின் கதிரவமறைப்பு ஒவ்வொரு 177 நாட்கள் 4 மணிகளில் நிலா வட்டணையின் மாற்றுக்கணுக்களில் மீள நிகழும்
மெட்டானிகத் தொடரில் கதிரவமறைப்புகள் ஒவ்வொரு 19 ஆண்டுகளில் (6939.69 நாட்களில்),மீள நிகழ்கிறது. 5 சுழற்சி கதிரவமறைப்புகள் ஒத்த நாட்காட்டி நாளுக்கு நெருக்கமாக நிகழ்கின்றன. மேலும், இதன் எண்மத் துணைத்தொடர்கள் தொகுப்புநேரத்தில் ஐந்தில் ஒரு பங்காககால்லது ஒவ்வொரு 3.8 ஆண்டுகளில் (1387.94 நாட்களில்) மீள நிகழ்கிறது. இத்தொடரின் அனைத்து கதிரவமறைப்புகளும் நிலாவின் இறங்குமுகக் கணுவில் ஏற்படுகிறது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.