From Wikipedia, the free encyclopedia
கஜுராஹோ வானூர்தி நிலையம் (Khajuraho Airport) (ஐஏடிஏ: HJR, ஐசிஏஓ: VEKO)என்பது இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்தின் கஜுராஹோவில் உள்ள உள்நாட்டு விமான நிலையமாகும். இந்த நிலையம் கஜுராஹோ நகரத்திற்கு தெற்கே 3 கி.மீ. தொலைவிலும், க்ஜூராஹோவிலிருந்து 4 கி.மீ. தொலைவிலும் மாவட்ட தலைநகரான சத்தர்பூரிலிருந்து 40 கி.மீ. தொலைவில் 590 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.[3]
கஜுராஹோ வானூர்தி நிலையம் Khajuraho Airport | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
சுருக்கமான விபரம் | |||||||||||
வானூர்தி நிலைய வகை | பொது | ||||||||||
இயக்குனர் | இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம் | ||||||||||
சேவை புரிவது | கஜுராஹோ, மத்தியப் பிரதேசம், இந்தியா | ||||||||||
உயரம் AMSL | 222 m / 728 ft | ||||||||||
ஆள்கூறுகள் | 24°49′02″N 079°55′07″E | ||||||||||
இணையத்தளம் | www | ||||||||||
நிலப்படம் | |||||||||||
ஓடுபாதைகள் | |||||||||||
| |||||||||||
புள்ளிவிவரங்கள் (ஏப்ரல் 2018 – மார்ச் 2019) | |||||||||||
| |||||||||||
கஜுராஹோ விமான நிலையம் 1978ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது. இது அருகிலுள்ள யுனெஸ்கோ உலக பாரம்பரிய தள கோயில் வளாகத்திற்குச் சுற்றுலாவை எளிதாக்கியது.[4]
கஜுராஹோ விமான நிலையத்தில் புதிய முனையம் அமைக்கப்படும் என்று 2013 ஆகஸ்டில் மத்திய அரசு அறிவித்தது.[5] இதற்காக ₹90 கோடி (US$11 மில்லியன்) ஒதுக்கப்பட்டு முனையம் கட்டப்பட்டது. இந்த கட்டடம் 23 ஜனவரி 2016 அன்று திறக்கப்பட்டது.[6][7]
விமான நிலையத்தில் ஒரு அஸ்பால்ட் ஓடுபாதை உள்ளது. இது 01/19, பரிமாணங்கள் 2,274 by 45 மீட்டர்கள் (7,461 அடி × 148 அடி) என்ற அளவில் உள்ளது.[8] விமான நிலையத்தில் 2 ஏரோபிரிட்ஜ்கள் கொண்ட ஒரு முனையம் உள்ளது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.