From Wikipedia, the free encyclopedia
ஓர்க் (ஆங்கில மொழி: Orc)[1] என்பது ஆங்கில எழுத்தாளர் ஜே. ஆர். ஆர். டோல்கீன் என்பவரால் த லோட் ஒவ் த ரிங்ஸ்[2] என்ற புதின புத்தகத்தில் உருவாக்கப்பட்ட ஒரு தீய சக்தி கனவுருப்புனைவு கதாபாத்திரம் ஆகும். இது பூதம் போன்ற ஒரு கற்பனையான மனித உருவம் கொண்ட அசுரன் ஆகும். இவர்கள் உருவத்தில் மனிதனளவில் இருந்தாலும் மிகவும் மிருகத்தனமான, ஆக்ரோஷமான, அருவருக்கத்தக்க தோற்றம் உடையவர்களாக் உள்ளனர். இந்த பூதங்கள் கருணையுள்ள குட்டிச்சாத்தான்களுடன் அடுக்கடி சண்டை யிடுகின்றனர் மற்றும் ஒரு தீய சக்திக்கு சேவை செய்கிறது, இருப்பினும் அவர்கள் மனித ஒழுக்க உணர்வைப் பகிர்ந்து கொள்கிறார்கள். சில முரண்பாடான தோற்றக் கதைகளில், இவர்கள் குட்டிச்சாத்தான்களின் சிதைந்த இனம் என்று ஒரு கருத்து உள்ளது.
ஓர்க் | |
---|---|
த காபிட்டு, த லோட் ஒவ் த ரிங்ஸ் கதை மாந்தர் | |
இந்த ஓர்க் என்ற பெயர்களைக் கொண்ட புராண அரக்கர்களை பண்டைய பழைய ஆங்கிலக் கவிதையான பேவுல்ப் மற்றும் ஆரம்பகால நவீன கவிதைகள் மற்றும் வடக்கு ஐரோப்பிய நாட்டுப்புறக் கதைகள் மற்றும் விசித்திரக் கதைகளில் காணலாம். அத்துடன் 1860களின் நடுப்பகுதியில் சார்லஸ் கிங்ஸ்லியின் இரண்டு புதினங்களில் கனவுருப்புனைவு உயிரினங்களின் பட்டியல்களில் ஓர்க் இனம் தோன்றியுள்ளது.
Seamless Wikipedia browsing. On steroids.