ஓரியல்புச் சார்பு
From Wikipedia, the free encyclopedia
வகை நுண்கணிதத்தில்,சார்பு , ஒரு இடைவெளியில் உள்ள x ≤ y மதிப்புகளுக்கு f(x) ≤ f(y) என இருந்தால் அந்த இடைவெளியில் அது கூடும் சார்பாகும் (increasing function). x ≤ y எனில் f(x) ≥ f(y) ஆக இருந்தால் அது அந்த இடைவெளியில் குறையும் சார்பாகும். (decreasing function) ஒரு இடைவெளி முழுவதிலும் சார்பு கூடும் சார்பாகவோ அல்லது குறையும் சார்பாகவோ இருந்தால் அச்சார்பு அந்த இடைவெளியில் ஓரியல்புச் சார்பு (monotonic function) எனப்படும்.