![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/d7/Tasik_Bukit_Merah.jpg/640px-Tasik_Bukit_Merah.jpg&w=640&q=50)
ஓராங் ஊத்தான் தீவு
மலேசியாவின் பேராக் மாநிலத்தில், கிரியான் மாவட்டத்தின் புக்கிட் மேரா ஏரியில் அமைந்து உள்ள ஒரு / From Wikipedia, the free encyclopedia
ஓராங் ஊத்தான் தீவு (ஆங்கிலம்: Orang Utan Island; மலாய்: Pulau Orang Utan;) என்பது மலேசியாவின் பேராக் மாநிலத்தில், கிரியான் மாவட்டத்தின் புக்கிட் மேரா ஏரியில் அமைந்து உள்ள ஒரு சிறிய தீவாகும். மலாய் மொழியில் ஓராங் ஊத்தான் (Orang Utan) என்றால் மனிதக் குரங்கு என்று பொருள்.
விரைவான உண்மைகள் புவியியல், அமைவிடம் ...
![]() புக்கிட் மேரா ஏரியில் ஓராங் ஊத்தான் தீவு | |
புவியியல் | |
---|---|
அமைவிடம் | புக்கிட் மேரா (கிரியான்); பேராக் |
ஆள்கூறுகள் | 5°02′N 100°39′E |
தீவுக்கூட்டம் | தீபகற்ப மலேசியா |
நிர்வாகம் | |
1. மலேசிய அரசாங்கம் 2. புக்கிட் மேரா ஒராங் ஊத்தான் தீவு அறக்கட்டளை |
மூடு
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/e9/Bornean_orangutan_%28Pongo_pygmaeus%29%2C_Tanjung_Putting_National_Park_14.jpg/640px-Bornean_orangutan_%28Pongo_pygmaeus%29%2C_Tanjung_Putting_National_Park_14.jpg)
இந்தத் தீவில் புக்கிட் மேரா மனிதக் குரங்குகள் சரணாலயம் (Bukit Merah Orang Utan Rehabilitation Center) உள்ளது. போர்னியோ காடுகளில் தனித்து விடப்பட்ட மனிதக் குரங்குகள் இந்தத் தீவிற்குக் கொண்டு வரப்பட்டு பாதுகாக்கப் படுகின்றன. 35 ஏக்கர் நிலப்பரப்பில் இந்தத் தீவு அமைந்து உள்ளது.[1]