![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/0/04/Intermediate_age_related_macular_degeneration.jpg/640px-Intermediate_age_related_macular_degeneration.jpg&w=640&q=50)
ஒளிக்குவியச் சிதைவு நோய்
விழித்திரை சிதைவு, கண்ணின் பின்புறத்தில் உள்ள திசுக்களில் உள்ள ஒளி-உணர்திறன் செல்கள் படிப்பட / From Wikipedia, the free encyclopedia
ஒளிக்குவியச் சிதைவு நோய் (Macular degeneration) என்பது கண்ணின் விழித்திரை மையப்பகுதியில், நிறமிப் பகுப்புகளின் அருகே அமைந்துள்ள ஒளிக்குவியம் பாதிக்கப்படுவதால் ஏற்படும் ஒரு நோயாகும். அறுபது வயதைக் கடந்தவர்களுக்கு ஏற்படும் ஒரு முக்கியமான கண்பாதிப்பாக இந்நோய் கருதப்படுகிறது. இந்நோய்ப் பாதிப்பால் பார்வை புலத்தின் மையத்தில் மங்கலாக அல்லது பார்வை இல்லாமல் போகும் நிலை உருவாகலாம்.[1] தொடக்கத்திலேயே இதை கண்டறிந்தால் பார்வையிழப்பு ஏற்படுவதை தவிர்க்கவும் செய்யலாம். தாமதப்படுத்தவும் செய்யலாம்.[1]
ஒளிக்குவியச் சிதைவு நோய் Macular degeneration | |
---|---|
ஒத்தசொற்கள் | வயது தொடர்பான ஒளிக்குவியச் சிதைவு |
![]() | |
கண்ணின் பின்புறம் இடைநிலை ஒளிக்குவியச் சிதைவு நோய் | |
சிறப்பு | கண் மருத்துவம், பார்வை அளவையியல் |
அறிகுறிகள் | பார்வை புலத்தின் மையத்தில் மங்கலாக அல்லது பார்வை இல்லாமல் போகும் நிலை உருவாகும்[1] |
சிக்கல்கள் | மாயத்தோற்றம்s[1] |
வழமையான தொடக்கம் | அறுபது வயதைக் கடந்தவர்கள்[1] |
வகைகள் | ஆரம்ப, இடைநிலை, தாமதம்[1] |
காரணங்கள் | விழித்திரை மையப்பகுதியில் ஒளிக்குவியம் பாதிக்கப்படுகிறது.[1] |
சூழிடர் காரணிகள் | மரபியல், புகைபிடித்தல்[1] |
நோயறிதல் | கண் பரிசோதனை[1] |
தடுப்பு | உடற்பயிற்சி செய்தல், நன்றாக சாப்பிடுதல், புகைபிடித்தல் கூடாது[1] |
சிகிச்சை | இரத்தநாள அகச்சருமிய வளர்ச்சிக்காரணி எதிர் மருந்தை கண்களுக்குள் செலுத்துதல், வீச்சு உமிழ் ஒளி சிகிச்சை, ஒளியியக்கவியல் சிகிச்சை[1] |
நிகழும் வீதம் | 2020 ஆம் ஆண்டில் உலகளாவிய பாதிப்பு 8.7%[2] |
ஆரம்பத்தில் பெரும்பாலும் அறிகுறிகள் எதுவும் இருப்பதில்லை.[1] இருப்பினும், காலப்போக்கில், சிலர் படிப்படியாக பார்வை மோசமடைவதை அனுபவிக்கிறார்கள். ஒன்று அல்லது இரண்டு கண்களையும் இந்நோய் பாதிக்கலாம்.[1] முழுமையான குருட்டுத்தன்மையை விளைவிக்காவிட்டாலும், மையப் பார்வை இழப்பால் முகங்களை அடையாளம் கண்டுகொள்வது, வாகனம் ஓட்டுவது, படிப்பது அல்லது அன்றாட வாழ்க்கையின் பிற செயல்பாடுகளைச் செய்வது கடினமாகிவிடும் நிலைக்கு உட்படுகிறார்கள். சிலருக்கு பார்வை மாயத்தோற்றங்களும் ஏற்படலாம்.[1]