![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/c4/ErmineSpot.jpg/640px-ErmineSpot.jpg&w=640&q=50)
ஒற்றைப்படைக் குளம்பி
From Wikipedia, the free encyclopedia
ஒற்றைப்படைக் குளம்பிகள் (Perissodactyla, odd-toed ungulates) என்பன பாலூட்டி வகுப்பில் ஒற்றைப்படை எண்ணிக்கையில் குளம்புகள் உள்ள விலங்குகள் கொண்ட ஒரு வரிசையில் உள்ள விலங்குகளைக் குறிக்கும். இவை அனைத்தும் புல் இலை தழைகளை மேய்ந்து உண்ணும் விலங்குகள். குதிரை, மூக்குக்கொம்பன் (காண்டாமிருகம்), டேப்பிர் போன்ற விலங்குகள் ஒற்றைப்படைக் குளம்பிகள் ஆகும். இவ் விலங்குகள் பெரும்பாலும் பெரிய உருவம் உடையவை, இவற்றின் வயிறு எளிமையான செரிமானம் செய்யும் அமைப்பைக் கொண்டுள்ளவை, இவற்றின் கால்களின் நடுவிரல் பெரிதாக இருப்பவை. உணவை அசைபோடும், பேரிரைப்பை அல்லது முன்வயிறு கொண்ட, இரட்டைப்படை குளம்பிகளை ஒப்பிடும்பொழுது ஒற்றைப்படை குளம்பிகள் தாம் உண்ணும் இலைதழைகளில் உள்ள செல்லுலோசுப் பொருட்களை இரைப்பையைக் காட்டிலும் குடல் போன்ற பின்செரிமானப் பாதையில் செரிக்கின்ற அமைப்பு கொண்ட விலங்குகள் ஆகும்.
ஒற்றைப்படைக் குளம்பி புதைப்படிவ காலம்:56–0 Ma ?Late Paleocene - Recent | |
---|---|
![]() | |
குதிரையின் குளம்பு | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
உள்வகுப்பு: | Eutheria |
பெருவரிசை: | Laurasiatheria |
வரிசை: | ஒற்றைப்படைக் குளம்பி (பெரிசோடாக்டிலா, Perissodactyla) ரிச்சர்டு ஓவன், 1848 |
Families[1] | |
|