ஒராயன் (விண்கலம்)
From Wikipedia, the free encyclopedia
ஒராயன் அல்லது ஒராயன் பல்நோக்கு குழு வாகனம் (Orion) என்பது ஐக்கிய அமெரிக்காவின் விண்வெளி நிறுவனமான நாசாவுக்காக லாக்கிது மார்ட்டின் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட, மற்றும் புவியின் கடல் மட்டத்திலிருந்து குறைந்த உயரத்தில் புவியின் வட்டசுற்றுப்பாதையில் சுற்றும் விண்கலம் ஆகும். இவ்விண்கலம் நாசாவின் விண்மீன் குழுத் திட்டத்துக்காக விண்வெளிவீரர்களைக் கொண்டு செல்லுவதற்காகத் தயாரிக்கப்பட்டு வருகிறது. அமெரிக்காவின் நாசா(NASA) தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகத்தால் நிர்வகிக்கப்பட்டு, ஜரோப்பியா நிறுவனமான Astrium (ESA) உதவியோடு, லாங்ஹிட் மார்டின் X-33 தொழில் நுட்பத்துடன் உருவான பல்நோக்கு வாகனமாகும். இது சந்திரன், மற்றும் செவ்வாய் கிரகத்தை ஆராயவும், புவியின் சுற்றுப்பாதையில் சுற்றிவரும் அனைத்துலக விண்வெளி நிலையத்திற்கு தேவையான பொருட்களை எடுத்துச் செல்லவும் உதவியாக உள்ளது. இதைக் கையாளும் உரிமை (ISS) அனைத்துலக விண்வெளி மையத்திற்கு மட்டுமே உண்டு. மே மாதம் 25, 2011ல் இதன் திட்டம் பற்றி அறிவித்தது. பின்னர் துவங்கிய திட்டத்தில் 5 கைவிடப்பட்டு, மறு ஆய்விற்குப் பிறகு சோதனை முறையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
ஒராயன் Orion | ||
---|---|---|
விபரம் | ||
பங்கு: | அவிநி, அதற்கு அப்பால் | |
பணிக்குழு: | 4 (முன்னர் 6 பேருக்கு திட்டமிடப்பட்டது) | |
தாங்கு கலன்: | ஏரிசு I | |
வெள்ளோட்டம்: | 2015 | |
பரிமாணங்கள் | ||
உயரம்: | ||
விட்டம்: | ||
Pressurized Volume: | ||
விண்கலத் திணிவு: | 25,000 கிகி (55,116 lb)[1] | |
விண்குமிழ் திணிவு: | 9,525 கிகி (21,000 lb)[2] | |
Launch Payload: | ||
Return Payload: | ||
Performance | ||
நீடிக்கும் காலம்: | 210 நாட்கள் | |
இந்த வாகனமானது அமெரிக்காவின் நாசாவும், (NASA) ஜரோப்பாவின் அஸ்ட்ரோமும் (Astrium) சேர்ந்து ஜரோப்பாவின் தளத்தில் வைத்து கட்டுமானம் செய்யப்பட்டது.
ஒவ்வொரு ஒராயன் விண்கலமும் 4 முதல் 6 பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடியதாக வடிவமைக்கப்பட்டு வருகிறது. 2020 ஆம் ஆண்டுக்குள் நிலவுக்கும், பின்னர் செவ்வாயை நோக்கியும் ஏனைய சூரிய மண்டல இடங்களுக்கும் விண்வெளி வீரர்களைக் கொண்டு செல்ல இத்திட்டம் பயன்படுத்தப்படவிருக்கிறது[3][4].