வலிமையான கனிம அமிலம் From Wikipedia, the free encyclopedia
ஐதரோபுரோமிக் அமிலம் (Hydrobromic acid) என்பது HBr என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு வலிமையான கனிம அமிலமாகும். ஈரணு மூலக்கூறான ஐதரசன் புரோமைடு நீரில் கரைப்பதனால் இந்த அமிலம் உருவாகிறது. நிறமற்றதாக்வும் அல்லது மங்கலான மஞ்சள் கலந்த நீர்மமாகவும் ஐதரோபுரோமிக் அமிலம் காணப்படுகிறது. நிலையாக ஐதரோபுரோமிக் அமிலத்தை கொதிக்க வைக்கும் போது 124.3 பாகை செல்சியசு வெப்பநிலையில் இது நீரிய கரைசலாகிறது. நிறையளவில் இக்கரைசலில் 47.6 சதவீதம் ஐதரசன் புரோமைடு காணப்படுகிறது. லிட்டருக்கு 8.89 மோல் அளவில் -9 என்ற காடித்தன்மை எண் மதிப்பை கொண்டு இருப்பதால் ஐதரோகுளோரிக் அமிலத்தை காட்டிலும் வலிமையான அமிலமாகவும் அதேவேளையில் ஐதரோ அயோடிக் அமிலத்தை காட்டிலும் குறைவான வலிமை கொண்டதாகவும் செயல்படுகிறது. அறியப்பட்டுள்ள வலிமையான கனிம அமிலங்களில் ஒன்று ஐதரோபுரோமிக் அமிலமாகும்.
| |||
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
வேறு பெயர்கள்
ஐதரோனியம் புரோமைடு | |||
இனங்காட்டிகள் | |||
10035-10-6 | |||
ChEBI | CHEBI:47266 | ||
ChemSpider | 255 | ||
EC number | 233-113-0 | ||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
பப்கெம் | 260 | ||
வே.ந.வி.ப எண் | MW3850000 | ||
| |||
UNII | 3IY7CNP8XJ | ||
பண்புகள் | |||
HBr(நீரிய) | |||
வாய்ப்பாட்டு எடை | 80.91 கி•மோல்−1 | ||
தோற்றம் | நிறமற்றது/மங்கலான மஞ்சள் நிற நீர்மம் | ||
மணம் | உறைப்பு | ||
அடர்த்தி | 1.49 கி/செ.மீ3 (48% எடை/எடை சதவீதம் நீர்த்தது ) | ||
உருகுநிலை | −11 °C (12 °F; 262 K) (47–49% எடை/எடை சதவீதம் நீர்த்தது ) | ||
கொதிநிலை | 122 °C (252 °F; 395 K) 700 மில்லிமீட்டர் பாதரச அழுத்தம் (47–49% எடை/எடை சதவீதம் நீர்த்தது) | ||
221 கி/100 மி.லி (0 °செ) 204 கி/100 மி.லி (15 °செ) 130 கி/100 மி.லி (100 °செ) | |||
காடித்தன்மை எண் (pKa) | −9[1] | ||
பிசுக்குமை | 0.84 செண்டிபாய்சு (−75 °செல்சியசு) | ||
வெப்பவேதியியல் | |||
Std enthalpy of formation ΔfH |
−36.3 கிலோயூல்/மோல் | ||
நியம மோலார் எந்திரோப்பி S |
198.7 J/(கி.மோல்) | ||
வெப்பக் கொண்மை, C | 29.1 J/( கி.மோல்) | ||
தீங்குகள் | |||
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | ICSC 0282 | ||
ஈயூ வகைப்பாடு | அரிக்கும் (சி) | ||
R-சொற்றொடர்கள் | R34, R37 | ||
S-சொற்றொடர்கள் | (S1/2), S7/9, S26, S45 | ||
தீப்பற்றும் வெப்பநிலை | தீப்பற்றாது | ||
தொடர்புடைய சேர்மங்கள் | |||
ஏனைய எதிர் மின்னயனிகள் | ஐதரோபுளோரிக் அமிலம் ஐதரோகுளோரிக் காடி ஐதரோ அயோடிக் அமிலம் | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
ஐதரோபுரோமிக் அமிலம் முக்கியமாக கனிம புரோமைடுகளின் உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக துத்தநாகம், கால்சியம் மற்றும் சோடியம் ஆகியவற்றின் புரோமைடுகள். தயாரிப்பில் ஐதரோபுரோமிக் அமிலம் முக்கியப் பங்கு வகிக்கிறது. கரிம புரோமின் சேர்மங்கள் தயாரிப்பிலும் ஐதரோபுரோமிக் அமிலம் ஒரு பயனுள்ள வினையாக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது.. சில ஈத்தர்கள் ஐதரோபுரோமிக் அமிலத்தின் உதவியால் பிளக்கப்படுகின்றன. ஆல்கைலேற்ற வினைகளையும் சில தாதுக்களை பிரித்தெடுப்பதையும் இது ஊக்குவிக்கிறது. அல்லைல் புரோமைடு , டெட்ராபுரோமோபிசு(பீனால்) , புரோமோ அசிட்டிக் அமிலம் போன்றவை ஐதரோபுரோமிக் அமிலத்திலிருந்து தயாரிக்கப்படும் தொழில்துறை ரீதியாக குறிப்பிடத்தக்க கரிம சேர்மங்கள் ஆகும். கிட்டத்தட்ட தனித்துவமாக ஆல்கீன்களின் மார்கோவ்னிகோவ் ஐதரோ ஆலசனேற்ற வினைகளில் ஐதரோபுரோமிக் அமிலம் பங்கேற்கிறது.. இதன் விளைவாக உருவாகும் 1-புரோமோ ஆல்க்கேன்கள் பல்துறை ஆல்க்கைலேற்றும் முகவர்கள் ஆகும். இதனால் கொழுப்பு அமீன்கள் மற்றும் நான்கிணைய அம்மோனியம் உப்புகள் தோன்ற வழியுண்டாகிறது[2].
ஐதரோபுரோமிக் அமிலத்தை ஆய்வகத்தில் புரோமின், கந்தக டைஆக்சைடு மற்றும் நீர் ஆகியவற்றை பயன்படுத்தி தயாரிக்கலாம்[3]
மேலும் பொதுவாக ஆய்வகத் தயாரிப்புகள் நீரற்ற ஐதரோபுரோமிக் அமிலத் தயாரிப்பை உள்ளடக்கியதாக உள்ளன.. தயாரிப்புக்குப் பின்னர் அவை தண்ணீரில் கரைக்கப்படுகின்றன. பொதுவாக கந்தகம் அல்லது பாசுபரசு என்ற தனிமங்களில் ஒன்றுடன் புரோமின் வினைபுரிந்து தண்ணீரும் சேர்க்கப்பட்டு ஐதரோபுரோமிக் அமிலம் தொழில்துறையில் தயார் செய்யப்படுகிறது. இருப்பினும், இது மின்னாற்பகுப்பு முறை மூலமாகவும் தயாரிக்கப்படலாம்[3]. பாசுபாரிக் அல்லது அசிட்டிக் அமிலம் போன்ற ஆக்சிசனேற்றாத அமிலங்களுடன் புரோமைடுகளை சேர்த்து சூடுபடுத்துவதன் மூலமும் இதைத் தயாரிக்கலாம். மாற்றாக இந்த அமிலத்தை நீர்த்த (5.8 மோல் கந்தக அமிலம் மற்றும் பொட்டாசியம் புரோமைடு பயன்படுத்தி தயாரிக்கலாம்:[4]
அதிக செறிவூட்டப்பட்ட கந்தக அமிலத்தைப் பயன்படுத்துதல் அல்லது வினை கரைசலை 75 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு மேல் வெப்பமடைய அனுமதிப்பதால் ஐதரோபுரோமிக் அமிலம் புரோமின் வாயுவாக மாற்றமடைகிறது. பொட்டாசியம் பைசல்பேட்டை வடிகட்டி நீர் நீக்கம் செய்வதன் மூலம் கொதிநிலை மாறா நிலை (760 டோர் அழுத்தத்தில் 126 பாகை செல்சியசு வெப்பநிலை) வரை வாலை வட்டித்தலுக்கு உட்படுத்துவதன் மூலமும், 85 சதவீத புரோமின் வாயுவை பெற இயலும்[4]. ஐதரோபுரோமிக் அமிலம் வணிக ரீதியாக பல்வேறு செறிவுகளிலும் தூய்மையிலும் விற்பனைக்குக் கிடைக்கிறது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.