ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (United Nations Children's Fund or UNICEF) 11 டிசம்பர் 1946 இல் ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையினால் இரண்டாம் உலகயுத்தத்தில் அழிவுற்ற நாடுகளில் உள்ள சிறார்களுக்கு உணவு மற்றும் சுகாதார வசதிகளை வழங்கும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டது. 1953இல் ஐக்கியநாடுகளின் நிதந்தர அமைப்பாகி இதன் முன்னைய பெயரான ஐக்கிய நாடுகளின் பன்னாட்டுச் சிறுவர்களிற்கான அவசரகால உதவி (United Nations International Children's Emergency Fund) என்னும் பெயரானது ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் என மாற்றப்பட்டது. எவ்வாறெனினும் இன்றும் இதன் முன்னைய பெயரில் இருந்து சுருக்கி அறியப்பட்ட யுனிசெஃப் என்றே இன்னமும் அறியப்படுகின்றது. இதன் தலைமை அலுவலகமானது அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ளது. ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியமானது வளர்ந்து வரும் நாடுகளின் தாய் சேய் தொடர்பான வசதிவாய்ப்புக்களை பெருக்கும் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது. 1965ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு இவ்வமைப்பிற்கு வழங்கப்பட்டது[1]. ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியமானது தனது திட்டங்களுக்கான நிதி வசதிக்கு உதவி வழங்கும் நாடுகள் மற்றும் தனியார் நிறுவனங்களையே சார்ந்துள்ளது.

விரைவான உண்மைகள் நிறுவப்பட்டது, வகை ...
ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம்
நிறுவப்பட்டது1946
வகைஉதவிவழங்கும் அமைப்பு
சட்டப்படி நிலைஇயங்குகின்றது.
இணையதளம்http://www.unicef.org
மூடு

முக்கிய இலக்குகள்

யுனிசெஃப் அமைப்பானது 155 நாடுகளில் பணியாற்றி வருகின்றது. கீழ்வரும் ஐந்து முக்கிய இலக்குகளில் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் ஈடுபட்டு வருகின்றது.

  • பெண் பிள்ளைகளின் கல்வி
  • ஏற்பூசி ஏற்றல் (Immunisation )
  • எச்.ஐ.வி/எய்ட்ஸ்
  • சிறுவரின் பாதுகாப்பு
  • சிறார் பருவம் (Early childhood)

இவை தவிர, குடும்ப அமைப்பில் குழந்தைகளை வளரச் செய்தல், குழந்தைகளின் உடல் மற்றும் மன வளர்ச்சிக்காக விளையாட்டுக்களை ஊக்குவிப்பது போன்ற நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றது.

இதையும் காண்க

யுனிசெப் இந்தியா

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.