ஐக்கிய சபா தேசிய அமைப்பு
From Wikipedia, the free encyclopedia
ஐக்கிய சபா தேசிய அமைப்பு அல்லது அசுனோ (ஆங்கிலம்: United Sabah National Organisation; மலாய்: Pertubuhan Kebangsaan Sabah Bersatu) (USNO) என்பது வடக்கு போர்னியோவிலும்; பின்னர் மலேசியாவின் சபா மாநிலத்திலும் செயல்பாட்டில் இருந்த ஓர் அரசியல் கட்சியாகும்.
விரைவான உண்மைகள் ஐக்கிய சபா தேசிய அமைப்பு United Sabah National Organisation Pertubuhan Kebangsaan Sabah Bersatu, சுருக்கக்குறி ...
ஐக்கிய சபா தேசிய அமைப்பு United Sabah National Organisation Pertubuhan Kebangsaan Sabah Bersatu | |
---|---|
சுருக்கக்குறி | USNO |
நிறுவனர் | முசுதபா அருன் (Mustapha Harun) |
தொடக்கம் | December 1961 |
கலைப்பு | 1996 |
இணைந்தது | அம்னோ சபா |
பின்னர் | ஐக்கிய சபா தேசிய அமைப்பு (புதிது) (2013) |
தேசியக் கூட்டணி | சபா கூட்டணி (1963-1976) பாரிசான் நேசனல் (1973-1975, 1976-1981, 1986-1993) சபா முன்னணி (1981-1986) |
மூடு
சபாவின் முசுலிம் பழங்குடியினர்; குறிப்பாக சுலுக்-பஜாவு மக்கள் சார்ந்த இன அடிப்படையிலான அந்தக் கட்சி, சபாவின் மூன்றாவது முதலமைச்சர் முசுதபா அருன் (Mustapha Harun) அவர்களால் டிசம்பர் 1961-இல் உருவாக்கப்பட்டது. 35 ஆண்டுகளுக்குப் பின்னர், 1996-ஆம் ஆண்டில் இந்தக் கட்சி கலைக்கப்பட்டது.[1]