ஐக்கிய அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை
From Wikipedia, the free encyclopedia
ஐக்கிய அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை (East Coast of the United States), அட்லாண்டிக் கடற்கரை, அட்லாண்டிக் கடலோரப் பகுதி என்றும் அழைக்கப்படுகிறது, இது கிழக்கு அமெரிக்கா அட்லாண்டிகப் பெருங்கடலைச் சந்திக்கும் கடற்கரையை உள்ளடக்கிய பகுதியாகும். 1776இல் ஐக்கிய அமெரிக்காவை உருவாக்கிய பதின்மூன்று குடியேற்றங்கள் இந்த கடற்கரையில் அமைந்திருந்தன. மேலும் இது ஐக்கிய அமெரிக்காவின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்துள்ளது.
ஐக்கிய அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை | |
---|---|
ஐக்கிய அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை. அட்லாண்டிக் பெருங்கடலின் கரையோரமாக அமைந்த அமெரிக்க மாநிலங்கள் அடர்நீலத்தில் காட்டப்பட்டுள்ளன. கடற்கரையை எல்லையாகக் கொள்ளாத பிற கிழக்குக் கடற்கரை மாநிலங்கள் வெளிர்நீலத்தில் உள்ளன. | |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
முக்கிய நகரங்கள் | போர்ட்லேண்டு பாஸ்டன் பிராவிடென்ஸ் ஹார்ட்பர்ட் நியூயார்க்கு நகரம் நுவார்க் பிலடெல்பியா பால்ட்டிமோர் வாசிங்டன், டி. சி. ரிச்மண்டு வெர்ஜீனீயா கடற்கரை ராலீ சார்லட் சார்லெசுட்டன், தென் கரோலினா அட்லான்டா Jacksonville ஒர்லாண்டோ டாம்ப்பா மயாமி |
மிகப்பெரிய நகரம் | நியூயார்க்கு நகரம் |
மிகப்பெரிய பெருநகரப் பகுதி | நியூயார்க் பெருநகரப் பகுதி |
மக்கள்தொகை (2017 estimate) | |
• மொத்தம் | 11,80,42,627[1] |
நேர வலயம் | ஒசநே−05:00 (Eastern) |
• கோடை (பசேநே) | ஒசநே−04:00 (EDT) |
இப்பகுதி பொதுவாக அட்லாண்டிக் பெருங்கடலின் எல்லையில் உள்ள அமெரிக்க மாநிலங்களை உள்ளடக்கியதாகக் கொள்ளப்படுகிறது. கனெடிகட், டெலவெயர், புளோரிடா, ஜோர்ஜியா, மேய்ன், மேரிலாந்து, மாசச்சூசெட்ஸ், நியூ ஹாம்ப்ஷயர், நியூ ஜெர்சி, நியூயார்க், வட கரோலினா, றோட் தீவு, தென் கரோலினா, வர்ஜீனியா ஆகிய மாநிலங்கள், அத்துடன் கூட்டாட்சித் தலைநகரமான வாஷிங்டன், டி. சி., மற்றும் கடற்கரை அல்லாத மாநிலங்களான பென்சில்வேனியா, வெர்மான்ட் , மேற்கு வர்ஜீனியா ஆகியவற்றை உள்ளாடக்கியுள்ளது.[2]