ஐஎன்எஸ் விக்ரமாதித்யா
From Wikipedia, the free encyclopedia
ஐஎன்எஸ் விக்ரமாதித்யா (சமஸ்கிருதம்: विक्रमादित्य, Vikramāditya, "Brave as the Sun") ஆனது முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் வானூர்தி தாங்கிக் கப்பலான அட்மிரல் கோர்ஷ்கோவ் கப்பலின் புதிய பெயராகும். இது இந்தியாவால் இந்தியக் கடற்படைக்காக வாங்கப்பட்டுள்ளது,[7]15 ஆண்டுக்குப் பிறகு விக்ரமாதித்யா முழுமையாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவில் நடைபெறும் விழாவில், இக்கப்பல் இந்திய கடற்படையில் சேர்க்கப்படுகிறது.[8][9]
விரைவான உண்மைகள் கப்பல் (இந்தியா), பொது இயல்புகள் ...
ஐஎன்எஸ் விக்ரமாதித்யா | |
கப்பல் (இந்தியா) | |
---|---|
பெயர்: | ஐஎன்எஸ் விக்ரமாதித்யா |
பணிப்பு: | 20 ஜனவரி 2004 |
கட்டியோர்: | கருங்கடல் ஷிப்யார்ட், மிகொளைவ், உக்ரைன் |
செலவு: | $2.35 billion[1] |
துவக்கம்: | டிசம்பர் 1978 |
வெளியீடு: | ஏப்ரல் 17, 1982 |
நிறைவு: | 19 April 2012 |
பணியமர்த்தம்: | 1987 (சோவியத் ஒன்றியம்) |
பணி நிறுத்தம்: | 1996 (உருசியா) |
பணிக்காலம்: | 14 ஜூன் 2014 |
சொந்தத் துறை: | INS கடம்பா, கர்வார் |
அடையாளம்: |
|
குறிக்கோள்: | Strike Far, Strike Sure[3] |
நிலை: | சேவையில் |
பொது இயல்புகள் | |
வகுப்பும் வகையும்: | மாற்றப்பட்ட கிவ் வகுப்பு வானூர்தி தாங்கிக் கப்பல் |
பெயர்வு: | 45,400 டன்கள் முழு எடை [4][5] |
நீளம்: | 283.1 மீ overall |
வளை: | 51.0 மீ |
Draught: | 10.2 மீ |
உந்தல்: | 4 shaft geared steam turbines, 140,000 hp |
விரைவு: | 32 knots (59 km/h) |
வரம்பு: | 13500 மைல்கள் at 18 knots (33 km/h)* |
போர்க்கருவிகள்: | 8 CADS-N-1 Kashtan CIWS துப்பாக்கிகள் |
காவும் வானூர்திகள்: | 16-24 மிகோயன் மிக்-29கே 10 உலங்கு வானூர்திகள், possible mix of Ka-28 helicopters ASW, Ka-31 helicopters AEW, [6] or எச்ஏஎல் துருவ் |
மூடு
விக்ரமாதித்யா 1978-1982ல் கருங்கடல் கப்பல் கட்டும் தளம், மிகொளைவ், உக்ரைனில் கட்டப்பட்ட கிவ் வகுப்பு வானூர்தித் தாங்கிக் கப்பலின் மாறுதல் செய்யப்பட்ட கப்பல் ஆகும். இந்தக் கப்பல் தற்போது உருசியாவின் செவ்மாஷ் கப்பல் கட்டும் தளத்தில் பெருமளவில் மேம்படுத்தப்பட்டுள்ளது. இது ரூ.14,483 கோடியில் உருவாக்கப்பட்டுள்ளது.