பாரம்பரிய நடனக் கலைஞர் From Wikipedia, the free encyclopedia
ஏலம் இந்திரா தேவி (Elam Endira Devi) என்பவர் ஒரு இந்திய பாரம்பரிய நடனக் கலைஞர் மற்றும் நடன ஆசிரியர் ஆவார். இவர் பாரம்பரிய நடனமான மணிப்புரி நடன வடிவத்தில், குறிப்பாக லாய் ஹரோபா மற்றும் ராஸ் வகைகளில் நிபுணத்துவம் மற்றும் புலமைப்பரிசிலுக்கு பெயர் பெற்றவர்.[1] கலை மற்றும் கலாச்சாரத் துறையில் இவர் செய்த சேவைகளுக்காக இந்திய அரசு 2014 ஆம் ஆண்டில், இந்தியாவின் நான்காவது மிக உயரிய விருதான பத்மசிறீவிருதை வழங்கி கௌரவித்தது.[2]
ஏலம் இந்திரா தேவி | |
---|---|
பிறப்பு | 1954 இம்பால் |
பணி | நடனக் கலைஞர் |
ஏலம் இந்திரா தேவி 1954 செப்டம்பர் 1, அன்று இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் உள்ள இம்பாலில் உள்ள குவாய் நாகமபால் சிங்ஜுபங் லெய்ராக் என்ற இடத்தில் பிறந்தார். இவரது பெற்றோர் ஏலம் பித்துமணி சிங் மற்றும் ஏலம் ரோசோமானி தேவி ஆகியோராவர். இவர் தனது எட்டு வயதிலிருந்தே குரு லூரெம்பாம் அமுய்மா சிங்கிடம் மணிப்பூரி நடனம் கற்று பயிற்சியைத் தொடங்கினார்.[3] பின்னர், ஆர். கே. அகேசனா, பத்மஸ்ரீ மைஸ்னம் அமுபி சிங்,[4] திங்பைஜாம் பாபு சிங் மற்றும் தியம் தருங்குமார் சிங் போன்ற ஆசிரியர்களிடம் நடனத்தைக் கற்றார். இதன்பிறகு ஜே. என். மணிப்பூர் நடன அகாதாமியில் சேர்ந்தார். அங்கு ஆர். கே. பிரியோகோபால் சனா, யம்ஷான்பி மைபி, தம்பாலங்கோ, என். குமார் மைபி மற்றும் ஹோபாம் நங்காபி ஆகியோரின் கீழ் பட்டையப் படிப்பு கற்க வாய்ப்பு கிடைத்தது. இவர் 1967 இல் நித்யா சாரியாவின் பட்டையப் படிப்பில் தேர்ச்சி பெற்றார்.
மணிப்புரி நடனத்தை கற்றுவந்த அதேசமயம், இவர் பி.ஏ. படிப்பை முடித்து பின்னர், மணிப்பூரி பண்பாடு மற்றும் இலக்கியத்தில் எம்.ஏ., படிப்பை 1979 இல் குவஹாத்தி பல்கலைக்கழகத்தில் முடித்தார். இதற்கிடையில், இவர் நடனத்தையும் விடாது கற்றுவந்தார். இந்திய அரசாங்கத்தின் கலாச்சார அமைச்சின் இளம் கலைஞர்களுக்கான உதவித்தொகையின் உதவியுடன், 1979 இல் ராசிலும், 1984 இல் லை ஹரோபாவிலும் முதுகலை பட்டப்படிப்புகளை முடித்தார்.[1][3][5]
1972 ஆம் ஆண்டில் மணிப்புரியத்தில் சிறந்த திரைப் படத்திற்கான தேசிய திரைப்பட விருதை வென்ற படமான மாதம்கி மணிப்பூர் என்ற திரைப்படத்தில் இந்திரா தேவி நடித்துள்ளார்.[3][5] இவர் பல பிராந்திய, தேசிய மற்றும் சர்வதேச நிகழ்ச்சிகளிலும் ஆடியுள்ளார். இவர் ஆடிய குறிப்பிடத்தக்க சர்வதேச நிகழ்ச்சிகள் சில:
இந்திரா தேவி பல நாட்டிய நாடகங்களிலும் பங்கேற்றுள்ளார்.[3]
இந்திரா தேவி ஹோபாம் மணிகோபால் சிங் எப்பவரை மணந்தார். இந்த இணையருக்கு மூன்று மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர்.
1993 ஆம் ஆண்டில், இந்திரா தேவி இம்பாலில் மெய்டி பாரம்பரிய நடனம் கற்பிக்கும் பள்ளி மற்றும் நிகழ்த்து மையத்தை [6] நிறுவினார், அன்றிலிருந்து நிறுவனத்தின் இயக்குநராக உள்ளார்.[5] செவ்வியல் மற்றும் பாரம்பரிய நடனங்கள் மற்றும் பாலேக்களைக் கற்றுக்கொள்வதற்கான ஒரு மையமாக இந்த நிறுவனம் உள்ளது [7] இது இந்திய அரசின் கலாச்சார அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.[8]
இந்திரா தேவி பல்வேறு குறிப்பிடத்தக்க பதவிகளை வகித்துள்ளார்:[3]
இவர் 2009 முதல் யுனெஸ்கோ கிளப் அசோசியேஷன் ஆஃப் இந்தியாவின் வாழ்நாள் உறுப்பினராக உள்ளார். மேலும் 1989 முதல் இம்பாலின் அகில இந்திய வானொலியில் மணிப்பூரி நடனம் குறித்த நிபுணர் வர்ணனையாளராக பணியாற்றி வருகிறார்.[3] இவர் 2001 முதல் 2012 வரை மணிப்பூர் பல்கலைக்கழக கல்விப் பணியாளர் கல்லூரியில் பல்கலைக்கழக மானியக் குழுவின் விருந்தினர் விரிவுரையாளராகவும் பணியாற்றியுள்ளார் [5] 1996 முதல் மணிப்பூரில் உள்ள ஜவகர்லால் நேரு மணிப்பூர் நடன அகாதமியின் மூத்த குருவாக பணியாற்றி வருகிறார்.[1][10]
ஏலம் இந்திரா தேவி மணிப்பூரி நடனம் மற்றும் கலாச்சாரம் குறித்த நான்கு புத்தகங்களை வெளியிட்டுள்ளார்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.