![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/b/bb/Ladder_and_telegraph_pole.jpg/640px-Ladder_and_telegraph_pole.jpg&w=640&q=50)
ஏணி
From Wikipedia, the free encyclopedia
ஏணி என்பது, பொதுவாக குறித்த இடைவெளியில் ஒன்றுக்கு ஒன்று இணையாக வைக்கப்பட்ட இரண்டு நீளமான கம்புகளில், அவற்றுக்குக் குறுக்கே ஒரு முனையில் இருந்து மறு முனை வரை பொருத்தப்பட்ட சிறிய கோல்கள் அல்லது தட்டையான படி போன்ற துண்டுகளை இணைத்து உருவாக்கிய ஓர் அமைப்பு ஆகும். ஓர் இடத்திலிருந்து அதற்கு மேலே அல்லது கீழேயுள்ள இன்னொரு இடத்துக்குச் செல்வதற்கு இது பயன்படுகின்றது. மிகப் பழைய காலத்திலிருந்தே ஏணிகளை மனிதர்கள் பயன்படுத்தி இருக்கக்கூடும் எனக் கருதப்படுகிறது. முதலில் உருவாக்கப்பட்ட ஏணிகள் நீண்ட ஒற்றை மரக்கொம்புகள் அல்லது மூங்கில் கழிகளில் குறுக்கே குறுகிய குட்டையான கம்புகளைக் கட்டி உருவாக்கப்பட்டு இருக்கக்கூடும். தற்காலத்திலும் இவ்வாறான ஏணிகள் பயன்பாட்டில் உள்ளன. குறுகிய கழிகள் பலவற்றை அடுக்கடுக்காக வைத்து அவற்றின் ஒத்த முனைகளை இரண்டு கயிறுகளில் தொடுத்து நூலேணிகள் அமைக்கும் வழக்கமும் உண்டு.[1][2][3]
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/b/bb/Ladder_and_telegraph_pole.jpg/320px-Ladder_and_telegraph_pole.jpg)