From Wikipedia, the free encyclopedia
எழுமீன் அல்லது சப்தரிசி என்றழைக்கப்படும் விண்மீன் கூட்டம் எளிதாக வானில் காணக்கூடிய ஏழுமீன்கள் அடங்கிய ஒரு விண்மீன் கூட்டம். இதனை ஆங்கிலத்தில் Ursa Major (பெருங்கரடி) என்றும் அமெரிக்காவில் "Big Dipper" (பெரும் கைவண்டி) [1][2][3][4] என்றும் அழைக்கின்றார்கள். இந்த ஏழு விண்மீன்களில் ஆறு மீன்கள் இரண்டாம் அலகு வெளிச்சம் கொண்டவை. நான்கு விண்மீன்கள் ஒரு தொட்டிபோன்ற பகுதியுடைய வண்டியின் நான்கு முனைகள் போலவும், மூன்று விண்மீண்கள் தொட்டியின் கைப்பிடி போலவும் காட்சியளிக்கும். கடலில் செல்லும்பொழுது வழியறிய (வடதிசையை அறிய) மிக முக்கியமான வடமீன் (போலாரிசு, Polaris) என்னும் மீனை அடையாளம் காண இந்த ஏழுமீன் கூட்டம் உதவும். கைப்பிடி போல் உள்ள பகுதியில் இருந்து விலகி உள்ள தொட்டியின் பகுதியாகிய இரண்டு விண்மீன்களை இணைத்து நீட்டினால் வடமுனை விண்மீனைக் காணலாம். தொட்டியின் ஆழம் போல ஏறத்தாழ 5 மடங்கு நீளம் நீட்டிய இடத்தில் இருக்கும். இந்த வடமீன், எழுமீன் கூட்டத்தைப்போலவே காட்சியளிக்கும் இன்னொரு சிறிய எழுமீன் கூட்டத்தின் கைப்பிடியின் கடைசி மீனாக இருக்கும். இந்த சிறிய எழுமீன் கூட்டத்தைச் சிறிய கரடி (Ursa minor) அல்லது சிறிய தொட்டி என்றழைப்பார்கள்.
இலத்தீன மொழியில் ஊர்சா (Ursa) என்றால் கரடி என்று பொருள்படும், Major என்பது பெரிய என்று பொருள்படும். எனவே பெரிய கரடி அல்லது பெருங்கரடி என்று குறிக்கப்பெறுகின்றது. ஏழு விண்மீன்கள் உள்ளதால் எழுமீன் என்று சங்கக் காலம் தொட்டு வழங்கப்பெறுகின்றது. நற்றிணை 231 இல் "கைதொழு மரபி னெழுமீன் போல " என்று குறிக்கப்பெற்றுள்ளது.
கரடி என்பது ஓமரின் கிரேக்க மரபிலும், மெசபத்தோமியாவின் மரபில் "wain" என்றும் குறிக்கப்பெறுகின்றது[5] In இலத்தீன், these seven stars were known as the "Seven Oxen" (septentriones, from septem triōnēs).[6]
அயர்லாந்திலும் ஐக்கிய இராச்சியத்திலும் இந்த எழுமீன் கூட்டத்தை கலப்பை (Plough) என்றழைக்கின்றானர். இடாய்ச்சு மரபில் பெரிய வண்டி (Großer Wagen)
பெருங்கரடி என்னும் எழுமீன் கூட்டத்துக்குள் பேயர் குறியீடு (Bayer designation) என்பதன்படி கிரேக்க எழுத்துகளின் வரிசைப்படி பெயர்கள் தொட்டிப் பகுதியில் இருந்து கைப்பிடி வரை குறிக்கப்பெறுகின்றது.
Proper Name | பேயர் குறியீடு | வெளிச்சத் தோற்ற அலகு | தொலைவு (ஒளியாண்டுகள்) |
---|---|---|---|
தபி (Dubhe) | α UMa | 1.8 | 124 |
மெராக்கு (Merak) | β UMa | 2.4 | 79 |
பெக்குதா(Phecda) | γ UMa | 2.4 | 84 |
மெகுரேசு (Megrez) | δ UMa | 3.3 | 81 |
அலியோத்து (Alioth) | ε UMa | 1.8 | 81 |
மிசார் (Mizar) | ζ UMa | 2.1 | 78 |
அல்காயிது (Alkaid) | η UMa | 1.9 | 101 |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.