எர்ம் (சிற்பம்)
ஒரு கற்கம்பத்தின் உச்சியில் மனித தலை கொண்டதாக, பெரும்பாலும் மார்பளவு சிலை கொண்டதாகவும் அதன் க / From Wikipedia, the free encyclopedia
எர்ம் (Herm (sculpture), பண்டைக் கிரேக்கம்: ἑρμῆς , pl. ἑρμαῖ ஹெர்மாய் ), [1] பொதுவாக ஆங்கிலத்தில் ஹெர்ம், என்று அழைக்கப்படுவது செவ்வக வடிவ கற்கம்பத்தின் உச்சியில் மனித தலை உள்ளவாறு செதுக்கப்பட்ட ஒரு சிற்பம் ஆகும். பொதுவாக சிற்பத்தின் அடியில் உள்ள கம்பத்தில் ஆண் குறி பொருத்தமான உயரத்தில் செதுக்கப்பட்டு இருக்கும். இந்த வடிவம் பண்டைய கிரேக்கத்தில் உருவானது. மேலும் இது ரோமானியர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது (மெர்குரியா என்று அழைக்கப்படுகிறது), மேலும் இது மறுமலர்ச்சி கால உருவங்கள் மற்றும் அட்லாண்டஸ் வடிவத்தில் புத்துயிர் பெற்றது.