From Wikipedia, the free encyclopedia
பெருமாட்டி எபுன்ரோய் தினுபு (Efunroye Tinubu) (1810 - 1887), எபுன்போரோய் ஒசுண்தினுபு என்ற இயற்பெயருடன் பிறந்த இவர் [1], ஒரு புத்திசாலித்தனமான மற்றும் இலட்சிய நைஜீரிய வணிக அதிபர் ஆவார். இவர் மேற்கு ஆப்பிரிக்கா முழுவதும் அபரிமிதமான பொருளாதார சக்தியையும் அபேகுடா மற்றும் லாகோசில் அரசியல் அதிகாரத்தையும் பயன்படுத்தினார். இவர் மரங்களின் பட்டை மற்றும் இலைகளை வர்த்தகம் செய்யத் தொடங்கினார். மரங்களின் பட்டை, வேர்கள், மருத்துவ மூலிகைகள் மற்றும் இலைகளை வர்த்தகம் செய்த தனது பாட்டி ஒசுன்சோலாவிடமிருந்து மதிப்புமிக்க சந்தை திறன்களைக் கற்றுக்கொண்டார். உணவு விற்பனையாளராக இருந்த அவரது தாயார் நிஜீதிடமிருந்தும் வணிக திறன்களைக் கற்றுக்கொண்டார்.[2][3][4][5] ஒபாஸ் அடீல், ஒலுவோல், அகிதோய், மற்றும் தோசுன்மு ஆகியோரின் ஆட்சிக் காலத்தில் லாகோஸில் இவர் ஒரு முக்கிய நபராகவும் இருந்துள்ளார்.
இவர் 1805 ஆம் ஆண்டில் மேற்கு நைஜீரியாவின் உயோருப்பா நகரமான அபேகுடாவில் பிறந்தார். இவரது தந்தையின் பெயர் ஒலுமோசா என்பதாகும். [1] இவருடைய தாய் அல்லது தந்தைவழி மூலமாக இவர் ஓவு வம்சாவளியைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. [1] தினுபு பல முறை திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இவரது முதல் திருமணம் ஒரு ஓவு பகுதியைச் சேர்ந்த நபருடன் இருந்தது. அவர்களுக்கு இரண்டு மகன்கள் இருந்தனர்.[6] தனது கணவர் இறந்த பிறகு, அரச பதவியிலிருந்து நாடுகடத்தப்பட்ட ஓபா அதீல் அசோசூன் என்பவரை 1833 இல் மறுமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தின் மூலம் இவர் பொருளாதார மற்றும் அரசியல் அதிகாரத்தை குவிக்கத் தொடங்கினார். இருவரும் கடலோர நகரமான படாக்ரிக்குச் சென்றனர், அங்கு தினபு, தனது கணவரின் தொடர்புகளைப் பயன்படுத்தி, அபேகுடாவிலிருந்து அடிமைகளுக்காக ஐரோப்பியர்களிடமிருந்து உப்பு மற்றும் புகையிலை வர்த்தகம் செய்யும் ஒரு வெற்றிகரமான வணிக சாம்ராச்சியத்தை உருவாக்கினார்.[2][7]
1835 ஆம் ஆண்டில் அதீல் தனது சிம்மாசனத்திற்குத் திரும்பிய பின்னர் தினுபு லாகோஸுக்குச் சென்றார். துரதிர்ஷ்டவசமாக, அதீல் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 1837 இல் இறந்தார். அதீலின் மகன் ஒலுவோலை புதிய மன்னராக நிறுவ தினுபு உதவினார். பின்னர் ஒலுவோலின் இராணுவ ஆலோசகரான எசெபு படா என்பவரை மணந்தார். அடிமைகள் மற்றும் பனை எண்ணெயை ஏகபோகப்படுத்துவதன் மூலமும், ஐரோப்பியர்களிடமிருந்து பெறப்பட்ட துப்பாக்கிகளை விற்பதன் மூலமும் இவர் தனது வர்த்தக வலையமைப்பை விரிவுபடுத்தினார். இது 1840 கள் மற்றும் 1850 களின் உயோருப்பா போர்களின் போது இவரது செல்வாக்கு அதிகரித்தது.[2] ஒலுவோலின் தற்செயலான மரணத்திற்குப் பிறகு, தினுபு தனது மைத்துனரான அகின்டோயை லாகோஸில் அரியணையில் அமரவைக்க ஏற்பாடு செய்தார்.[7][8] தினுபு முன்னூறு அறுபது தனிப்பட்ட அடிமைகளை வைத்திருப்பதாகவும் வதந்தி பரவியது. 1845 வாக்கில், ஐரோப்பிய நாடுகள் அடிமைத்தனத்தை நிராகரித்து. மேற்கு ஆபிரிக்கா வணிகப் பயிர்களுக்கு திரும்பியபோது, வர்த்தகத்தின் முக்கிய புதிய பொருட்களான பனை எண்ணெய், தேங்காய் எண்ணெய் மற்றும் பருத்தி ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதன் மூலம் தனது பேரரசை விரிவுபடுத்தினார். [1] [2]
தினுபு ஒரு அரபு அறிஞரான மோமோ புக்கர் என்பவருடன் மற்றொரு திருமணம் செய்து கொண்டதாகத் தெரிகிறது.[9] மோமோவின் பிற மனைவிகளுக்குப் பிறந்த குழந்தைகள் பின்னர் தினுபுவை ஏற்றுக்கொண்டனர்.
தினுபு 1887 இல் இறந்தார்.[10] லாகோஸ் தீவில் உள்ள சுதந்திர சதுக்கம் என்று அழைக்கப்படும் ஒரு சதுக்கத்திற்கு இட்டா தினுபு என இவரது பெயரிடப்பட்டது. (தினுபுவின் நிலப்பரப்பு அல்லது தினுபு சதுக்கம்) இது நாட்டின் சுதந்திரத்திற்கு முன்பே அந்த பெயரால் நீண்ட காலமாக அறியப்பட்டிருந்தது. பின்னர், அதற்கு முதல் குடியரசின் தலைவர்களால் சுதந்திர சதுக்கம் என்று பெயர் மாற்றப்பட்டது.
இவர் அபேகுடாவில் உள்ள ஓஜோகோடோ குடியிருப்பில் அடக்கம் செய்யப்பட்டார்.[11]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.