திரைப்பட இயக்குநர், ளிப்பதிவாளர் From Wikipedia, the free encyclopedia
என். கே. விஸ்வநாதன் (N. K. Vishwanathan, இறப்பு 25 மார்ச் 2017) என்பவர் ஒரு இந்திய திரைப்பட இயக்குனரும், ஒளிப்பதிவாளருமாவார். இவர் பெரும்பாலும் தமிழ் படங்களில் பணியாற்றியவர். [2] [3] 1980 களில் தமிழ் படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றத் தொடங்கிய பின்னர், திரைப்பட இயக்குநராக கிளைத்து 1990 களில் வணிக ரீதியாக வெற்றிகரமான திரைப்படங்களை உருவாக்கினார்.
என். கே. விஸ்வநாதன் | |
---|---|
பிறப்பு | 23 ஏப்ரல் 1941 |
இறப்பு | ஏப்ரல் 25, 2017 76)[1] | (அகவை
பணி | இயக்குநர், ஒளிப்பதிவாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1978-2017 |
விஸ்வநாதன் 1970 களில் இருந்து பல படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். முக்கியமாக ராம நாராயணன் இயக்கிய படங்களில் பணியாற்றினார். மேலும் சட்டம் என் கையில் (1978) படத்தில் முதல் முதலில் நடிக்க நடிகர் சத்தியராஜை பரிந்துரைத்து உதவினார்.[4] படத்தின் இயக்குனர் டி. என். பாலு படப்பிடிப்பின் போது இறந்தபோது கமல்ஹாசனின் வற்புறுத்தலின் பேரில், சங்கர்லால் (1981) படத்தை இயக்கினார். [5] 1990 களில் குடும்ப நாடகப் படங்களில் பணிபுரிந்த இவர் திரைப்படங்களை இயக்கத் தொடங்கினார்.
2000 களின் முற்பகுதியில், ஒளிப்பதிவாளராக பல பக்தி படங்களில் பணியாற்றிய இவர், சிஜிஐ மற்றும் விஎஃப்எக்ஸ் தொடர்பான தொழில்நுட்பங்கள் பற்றிய தனது அறிவை வளர்த்துக் கொண்டார்.[6] விஸ்வநாதன் 1978 ஆம் ஆண்டய ஜகன்மோகினி படத்தின் மறு தயாரிப்பான ஜெகன்மோகினி (2009) படத்தை இயக்கினார், நமீதாவும், நிலாவும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். வெளியீட்டிற்கு முன்னர் கவனத்தை உருவாக்கிய போதிலும், இது கலவையான விமர்சனங்களுடன் வெளியானது. [7] [8]
மாரடைப்பு காரணமாக இவர் 25 ஏப்ரல் 2017 அன்று இறந்தார். [9]
ஆண்டு | படம் | குறிப்புகள் |
---|---|---|
1990 | பெரியவீட்டுப் பண்ணக்காரன் | |
1990 | இணைந்த கைகள் | |
1992 | நாடோடிப் பாட்டுக்காரன் | |
1993 | பொறந்தாலும் அம்பளையா பொறக்கக் கூடாது | |
1994 | பொண்டாட்டியே தெய்வம் | |
1994 | புதுப்பட்டி பொன்னுதாயி | |
1994 | பெரிய மருது | |
1995 | வாரார் சண்டியர் | |
1996 | புருஷன் பொண்டட்டி | சிறந்த படத்திற்கான தமிழக மாநில அரசின் திரைப்பட விருது (3 வது பரிசு) |
2009 | ஜெகன்மோகினி |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.