![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/7a/Athabasca_Oil_Sands_map.png/640px-Athabasca_Oil_Sands_map.png&w=640&q=50)
எண்ணெய் மணல்
From Wikipedia, the free encyclopedia
எண்ணெய் மணல்கள் (Oil sands), கரியெண்ணெய் மணல்கள் (tar sands), அல்லது தொழில்முறையாக, நிலக்கீல் மணல்கள் (bituminous sands) என்பன வழக்கத்திற்கு மாறான பாறைநெய் வைப்புக்களாகும்.
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/7a/Athabasca_Oil_Sands_map.png/640px-Athabasca_Oil_Sands_map.png)
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/9/95/Tar_Sandstone_California.jpg/640px-Tar_Sandstone_California.jpg)
எண்ணெய் மணல்கள் உதிரி மணல்களாகவோ பகுதியும் கெட்டியான மணற்பாறையாகவோ இருக்கலாம்; இயற்கையான மணல், களிமண், நீர் கலவையுடன் மிகவும் பிசுக்குமை வாய்ந்த, கெட்டியான (தொழில்முறையாக அசுபால்ட்டு என்றும் சொல்வழக்கில் தார் என்றும் குறிப்பிடப்படும்) பாறை எண்ணெய் நிறைசெறிவாக கொண்டிருக்கும். இயற்கை நிலக்கீல் வைப்புக்கள் பல நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளன; குறிப்பாக கனடாவில் மிகுந்த அளவில் காணப்படுகின்றன.[1][2] மேலும் பெரும் வைப்புகள் கசக்ஸ்தான், உருசியாவில் கண்டறியப்பட்டுள்ளன. உலகளவில் எண்ணெய் வைப்பின் மதிப்பீடு 2 trillion barrels (320 பில்லியன் கன சதுர மீட்டர்கள்) கூடுதலாகும்;[3] இந்த மதிப்பீடுகளில் இன்னமும் கண்டறியப்படாத வைப்புக்களும் அடங்கும். உறுதி செய்யப்பட்ட நிலக்கீல் வைப்புக்கள் ஏறத்தாழ 100 பில்லியன் கொள்கலன்களாகவும்[4] மொத்த இயற்கை நிலக்கீல் வைப்புக்கள் 249.67 Gbbl (39.694×10^9 m3) ஆகவும் உலகளவில் மதிப்பிடப்படுகின்றது; இவற்றில் 176.8 Gbbl (28.11×10^9 m3), அல்லது 70.8%, கனடாவின் ஆல்பெர்ட்டாவில் உள்ளது.[1]