எண்ணாயிரம் மீட்டரை மீறும் மலைகள்
8,000 மீட்டருக்கும் அதிகமான மலை சிகரங்கள் / From Wikipedia, the free encyclopedia
எண்ணாயிரத்தவை (eight-thousanders) அல்லது எண்ணாயிரம் மீட்டரை மீறும் மலைகள் என்பது கடல் மட்டத்திலிருந்து 8,000 மீட்டர் (26,247 அடி) அல்லது அதற்கு மேற்பட்ட உயரமான பதினான்கு தனித்தனி மலைகளைக் குறிக்கும் சொற்றொடராகும். இவை அனைத்தும் ஆசியாவில் இமாலய மலைத்தொடர் மற்றும் கரக்கோரம் மலைப் பகுதிகளில் அமைந்திருக்கின்றன. இமயமலைத் தொடரில் மட்டுமே 8,000 மீட்டரை மீறும் மலைகள் உள்ளன. உலகில் வேறு எங்கும் 7,000 மீட்டர் உயர மலைகள் கூடக் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.