எகிப்தின் பவ்சியா
எகிப்த்தின் அரச குடும்பப் பெண்மணி / From Wikipedia, the free encyclopedia
எகிப்தின் பவ்சியா ( Fawzia of Egypt ) ( நவம்பர் 1921 - 2 ஜூலை 2013), பவ்சியா பகலவி அல்லது பவ்சியா சிரின் என்றும் அழைக்கப்படும் இவர் ஓர் எகிப்திய இளவரசியாவார். ஈரானின் முகமது ரேசா பகலவியை திருமணம் செய்துகொண்டதன் மூலம் ஈரானின் ராணியானர்.
பவ்சியா | |
---|---|
1940 களில் பவ்சியா | |
எகிப்தின் ராணி மனைவி | |
Tenure | 16 செப்டம்பர் 1941 – 17 நவம்பர் 1948 |
பிறப்பு | (1921-11-05)5 நவம்பர் 1921 ராஸ் எல்- தின் அரண்மனை, அலெக்சாந்திரியா, எகிப்திய சுல்தானகம் |
இறப்பு | 2 சூலை 2013(2013-07-02) (அகவை 91) அலெக்சாந்திரியா, எகிப்து |
புதைத்த இடம் | அல்-ரிபா இ பள்ளிவாசல், கெய்ரோ, எகிப்து |
துணைவர் |
|
குழந்தைகளின் பெயர்கள் |
|
மரபு | முகமது அலி (பிறப்பால்) பகலவி (திருமணத்தால்) |
தந்தை | எகிப்தின் முதலாம் புவாது |
தாய் | நசிலி சப்ரி |
இசுமாயில் பாஷாவின் ஏழாவது மகன் முதலாம் புவாத்தின் மகளான இவருக்கு ஈரானிய பட்டத்து இளவரசருடன் 1939 இல் நடந்த திருமணம் ஒரு அரசியல் ஒப்பந்தமாகும். இது மத்திய கிழக்கில் எகிப்திய சக்தியையும் செல்வாக்கையும் ஒருங்கிணைத்தது. அதே நேரத்தில் புதிய ஈரானிய ஆட்சிக்கு மிகவும் மதிப்புமிக்க எகிப்திய அரச மாளிகையுடன் இணைந்து மரியாதையைக் கொண்டு வந்தது. 1945 இல் பவ்சியா எகிப்திய முறையில் விவாகரத்து பெற்றார் (1948 வரை ஈரானில் அங்கீகரிக்கப்படவில்லை). இவர்களுக்கு சகானாசு பக்லவி என்ற ஒரு மகள் இருந்தார்.
1949 இல், பவ்சியா எகிப்திய தூதரான இசுமாயில் சிரைன் என்பவரை மணந்தார். தம்பதியினருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருந்தனர்.