From Wikipedia, the free encyclopedia
உல்லென் செண்டலு அருங்காட்சியகம் (Ullen Sentalu Museum), இந்தோனேஷியாவில் ஜாவாவில் யோகியாகர்த்தா என்னுமிடத்தில் அமைந்துள்ள ஒரு ஜாவானிய கலாச்சாரம் மற்றும் கலை அருங்காட்சியகம் ஆகும். இது கலியுராங்கில் அமைந்துள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் யோகியாகர்த்தா, பாக்குவலம், சுரகார்த்தா, மற்றும் மங்க்குனேகரன் போன்ற அரச குடும்பத்தைச் சேர்ந்த வீடுகள், கலைப்பொருள்கள் மற்றும் ஜாவாவின் கிராட்டான்கள் ஆகியவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
நிறுவப்பட்டது | 1994 |
---|---|
அமைவிடம் | லியுராங், ஸ்லீமென் ரீஜென்சி, யோகியாகர்த்தா சிறப்பு மாகாணம் |
ஆள்கூற்று | 7.597973°S 110.423174°E |
வலைத்தளம் | www |
உல்லென் செண்டலு அருங்காட்சியகம் ஒரு தனி நபர் அருங்காட்சியகமாகும். இந்த அருங்காட்சியகமானது ஹரியோனோ குடும்பத்தினரால் தொடங்கப்பட்டது, இப்போது இது உலேட்டிங் பிளென்காங் அறக்கட்டளையால் நிர்வாகம் செய்யப்பட்டு வருகிறது. இது 1994 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இருப்பினும் மார்ச் 1, 1997 ஆம் நாள் அன்று அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டது, இது ஒவ்வொரு ஆண்டும் யோகியாகர்த்தா நகரத்தின் வரலாற்று நாளாக நினைவுகூரப்படும் தேதியுடன், இந்த அருங்காட்சியத்தின் திறப்பு நாள் ஒத்துப்போகும் நிலையில் அமைந்துள்ளது. இந்த அருங்காட்சியகத்தின் திறப்பு விழாவை யோகியாகர்த்தா சிறப்பு மாகாணத்தின் ஆளுநராக இருந்த கேஜிபிஏஏ பாக்கு ஆலம் VIII அவர்களால் நிகழ்த்தப்பெற்றது.
சில முக்கிய நபர்கள் அறக்கட்டளையின் உறுப்பினர்களாகவும் ஆலோசகர்களாகவும் உள்ளனர், அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் காசுனானன் சுரகார்த்தா ஹாடினிங்கிராட்டின் ஐ.எஸ்.கே.எஸ் பாக்கு புவோனோ XII, பாகுவலாமன் பகுதியின், சுல்தான் எச்.பி.யின் மகனான கேஜிபிஏஏ பாக்கு ஆலம் VIII ஜிபிபிஹெச் போகர், ஹார்டினி சுகர்னோ, மறைந்த ஜனாதிபதி சுகர்னோவின் மனைவி, மற்றும் கே.பி. டாக்டர் சாமுவேல் வெத்யாடினிங்கிராட் டி.எஸ்.பி. கோங்க் ஆகியோர் ஆவர்.
ஜாவானீஸ் அருங்காட்சியகமான உல்லென் செண்டு அருங்காட்சியகம் இது நகரத்திலிருந்து வெகு தொலைவில் அமைந்துள்ளது. இந்த அருங்காட்சியகம் உலேட்டிங் பிளென்காங் அறக்கட்டளையின் கீழ் ஹரியோனோ குடும்பத்தினருக்கு தனியாருக்கு சொந்தமானதாக உள்ளது. கலியுராங் பகுதியில் அமைந்துள்ள இந்த அருங்காட்சியகம் மெராபி மலைக்கு அருகில் உள்ளது. அருங்காட்சியகம் அமைந்துள்ள இருப்பிடத்தைத் தேர்ந்தெடுத்துள்ளதில்கூட ஒரு சிறப்பு உள்ளது. ஜாவானியர்கள் மெராபி மலையை புனித இடமாகக் கருதும் நம்பிக்கை உள்ளவர்கள். ஆதலால் இவ்விடம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகம் அரண்மனைக்குச் சொந்தமான என்ஜெக்சிகொண்டோ ஓய்வு இல்லத்திற்கு அருகில் வரலாற்று சிறப்புமிக்க மாவட்டத்தில் அமைந்துள்ளது. உல்லென் செண்டலு என்பதற்கு வாழ்க்கை பயணத்தின் வெளிச்சம் என்ற பொருள் உள்ளது. இந்த அருங்காட்சியகம் பசுமையான சோலையின் இடையே கட்டப்பட்டுள்ளது. அந்த இடத்தின் பெயர் கஸ்வர்கன் பூங்கா ஆகும். கஸ்வர்கன் என்பதற்கு சொர்க்கம் என்ற பொருள் உண்டு.[1]
அருங்காட்சியகப் பகுதிக்குள் நுழையும்போது ஒரு பண்டைய ஜாவானிய இராச்சியத்திற்கு கொண்டு செல்லப்படும் உணர்வை அடையமுடியும். அங்கு இடைக்காலத்தைச் சேர்ந்த, மத்திய ஜாவாவின் மிக சக்திவாய்ந்த வம்சமான மாதரம் வம்சத்தின் மகத்துவத்தை பிரதிபலிக்கும் கட்டிடங்களைக் காண முடியும். சிறப்பாக அழகுபடுத்தப்பட்ட தோட்டங்கள் பார்வையாளர்களுக்கு ஒருவிதமான ஈர்ப்பு உணர்வைத் தரும். இந்த அருங்காட்சியகத்தில் நான்கு வெவ்வேறு அறைகள் காணப்படுகின்றன. இதில் ருவாங் செலமத் டத்தாங் (விருந்தினர் வரவேற்பு) அறை உள்ளது. அங்குள்ள ருவாங் செனி தாரி டான் கேமலன் என்னுமிடத்தில் பல வகையான கேமலன் (பாரம்பரிய இசைக்கருவிகள்) காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் பாரம்பரிய நடன ஓவியங்களும் அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.[1]
ஐடிஆர் 100,000 (சர்வதேச பார்வையாளர்) ஐடிஆர் 40,000 (உள்நாட்டு / வழக்கமான பார்வையாளர் / கிட்டாஸ்)
Jl. பிளெம்புரான் 10, யோகியாகர்த்தா, இந்தோனேசியா 55581
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.