![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/0/0f/Lucie_Green.jpg/640px-Lucie_Green.jpg&w=640&q=50)
உலூசி கிரீன்
பிரித்தானிய வானியலாளர் / From Wikipedia, the free encyclopedia
உலூசிண்டா "உலூசி" மே கிரீன் (Lucinda "Lucie" May Green) (பிறப்பு:1975)[1] ஒரு பிரித்தானிய அறிவியல் பரப்புரையாளரும் சூரிய ஆராய்ச்சியாளரும் ஆவார். இவர் 2005 இல் இருந்து அரசு கழகத்தின் இலண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியில் உள்ள முல்லார்டு விண்வெளி அறிவியல் ஆய்வகத்தில் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளராக உள்ளார் (முன்பு அரசு கழகத்தின் டோரத்தி காட்ஜுகின் ஆய்வாளர்).[2][3] இவர் அந்த ஆய்வகத்தின் பொதுமக்கள் தொடர்பு திட்டத்தை நடத்துகிறார். இவர் ஐரோப்பிய இயற்பியல் கழகத்தின் ஐரோப்பியச் சூரிய இயற்பியல் பிரிவின் குழும உறுப்பினராக அமர்கிறார். இவர்இலண்டன் அறிவியல் அருங்காட்சியகத்தின் அறிவுரைக் குழுமத்திலும் உள்ளார்.[2]
உலூசி கிரீன் Lucie Green | |
---|---|
![]() கிரீன் இலண்டன் பிரைட் கிளப் பொறுப்பேற்றல், நவம்பர் 2011 | |
பிறப்பு | உலூவிண்டா மே கிரீன் அண்.1975[1] பெட்போர்டுசயர், இங்கிலாந்து, ஐக்கிய இராச்சியம் |
இருப்பிடம் | கோடல்மிங், சுரே |
கல்வி | மங்கை அலைசு ஆர்ப்பூர் பள்ளி |
படித்த கல்வி நிறுவனங்கள் | சுசெக்சு பல்கலைக்கழகம் பல்கலைக்கழகக் கல்லூரி, இலண்டன் |
பணி | அறிவியல் பரப்புரையாளர் |
பணியகம் | முல்லார்டு விண்வெளி அறிவியல் ஆய்வகம் |
தொலைக்காட்சி | விளக்குநர், (இரவு வானம் (The Sky at Night)) |
இயக்குநராக உள்ள நிறுவனங்கள் | ஐரோப்பிய இஅற்பியல் கழகத்தின் ஐரோப்பிய சூரிய இயற்பியல் பிரிவு அறிவியல் அருங்காட்சியகம், இலண்டன் |
வாழ்க்கைத் துணை | மத்தேயு பார்க்கர் |
விருதுகள் | கோகுன் விருது (2009) |
வலைத்தளம் | |
Personal website @ MSSL |
விருது பெற்ற அறிவியல் எழுத்தாலரும் வானொலி, தொலைக்காட்சி பேச்சாளரும் அறிவியல் பரப்புரையாளரும் ஆகிய கிரீன், வனியலையும் விண்வெளி அறிவியலையும் ஆர்வமிக பொதுமக்களிடம் கொண்டுசெல்வதில் வல்லவர் ஆவார்.[2] Perhaps best known for her work on இவர் 2013 இல் நடாத்திய இரவு வானம் (The Sky at Night) நிகழ்ச்சி வழியாக சர் பாட்ரிக் மூருக்குப் பின்னர் மிகவும் புகழெய்திய முதல் பெண்மணியாவார்.[4]
இவர் முதன்மையாக சூரிய வளிமண்டல செயல்பாடுகள் பற்றிக் கவனம் குவித்தது. குறிப்பாக சூரிய ஒள்முகட்டின் பொருண்மை உமிழ்வும் அந்த உமிழ்வை முடுக்கிவிடும் சூரியக் காந்தப்புல மாற்றங்களும் குறித்து அமைந்தது.[2][5]